"மது போதையில் இருமுறை உடலுறவு"! சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலைய மூதாட்டி மரணத்தில் திடீர் ட்விஸ்ட்!
சென்னை: சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் மூதாட்டி ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில் மாற்றுத்திறனாளி ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் திடீர் திருப்பமாக மூதாட்டியும் தானும் மது அருந்திவிட்டு இரு முறை உடலுறவு கொண்டதாக கைதான மாற்றுத்திறனாளி முத்து வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேலும் தான் மூன்றாவது முறையும் உடலுறவுக்காக அந்த மூதாட்டியிடம் சென்ற போது அவர் அசைவற்ற நிலையில் கிடந்ததாகவும் தெரிவித்தார். எனவே அந்த மூதாட்டி மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கலாம் என போலீஸார் தெரிவிக்கிறார்கள்.

சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் 65 வயது லட்சுமி என்பவர் தூங்கிக் கொண்டிருந்தார். இந்த மூதாட்டி திடீரென காலையில் பார்க்கும் போது இறந்துகிடந்தார். இதனால் அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அப்போது அந்த மூதாட்டியின் உடல் அருகே சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இரு கால்களையும் இழந்த மாற்றுத்திறனாளி முத்து என்பவர் அமர்ந்திருந்ததை பார்த்த உறவினர்கள் அவர்தான் மூதாட்டியை கொலை செய்தார் என கருதி, அவரை கடுமையாக தாக்கினர்.
இதையடுத்து அங்கிருந்த பொதுமக்களும் அவரை பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர். மேலும் மூதாட்டியின் சடலத்தை மீட்ட போலீஸார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து முத்துவிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
மூதாட்டி லட்சுமி அந்த புகுதியில் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்தாராம். அப்போது அவருக்கும் முத்துவுக்கும் (38) அவ்வப்போது மோதல் ஏற்படுமாம். இதனால் அவர் லட்சுமியை கொலை செய்திருக்கலாம் என உறவினர்கள் சந்தேகமடைந்தனர்.
இந்த நிலையில் போலீஸார் நடத்திய விசாரணையில், மாற்றுத்திறனாளி முத்துவும் லட்சுமியும் இரவு ஒன்றாக அமர்ந்து மது அருந்தினராம். இதையடுத்து இருவரும் இரு முறை உடலுறவில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக மூதாட்டியுடன் உறவு கொள்ள சென்ற போது அவர் உடல் அசைவின்றி கிடந்தார் என முத்து வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்த நிலையில் லட்சுமியின் பிரேத பரிசோதனை முடிவில் மூதாட்டி கொலை செய்யப்படவில்லை. இயற்கையாகவே மூதாட்டி மரணம் அடைந்திருக்கிறார். மேலும் அவருடைய உடலில் எந்த காயங்களும் இல்லை என தெரியவந்தது. எனவே அவர் மாரடைப்பால் இறந்திருக்கலாம் என போலீஸார் தெரிவிக்கிறார்கள். ஆரம்பத்தில் இதை கொலை சம்பவமாக கருதிய நிலையில் தற்போது இது திடீரென உடல்நலக் குறைவால் ஏற்பட்ட மரணமாக மாறிவிட்டது. எனினும் மூதாட்டியின் இறப்பிற்கான காரணங்களை போலீஸார் மேலும் ஆராய்ந்து வருகிறார்கள்.
65 வயது மூதாட்டி என்பதால் அடுத்தடுத்து உடலுறவு கொண்டதால் அவருடைய இதய துடிப்பு அதிகரித்து, ரத்த அழுத்தமும் அதிகரித்து மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என அனுமானிக்கப்படுகிறது. 50 வயதுக்கு மேல் அடுத்தடுத்து தொடர்ந்து உடலுறவு என்பது ஆபத்தை விளைவிக்கும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். அந்த மூதாட்டிக்கு ஏற்கெனவே பிபி, சுகர், இதயம் தொடர்பான பிரச்சினை இருந்திருக்கலாம். அவருக்கு குடிப்பழக்கமும் இருப்பதால் இரு முறை உடலுறவு என்பதை அவரது உடல் ஏற்கவில்லை. இதனால் இதயத்தில் அடைப்பு ஏற்பட்டு இறந்திருக்க வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள்.
இந்த மூதாட்டி புழல் பகுதியை சேர்ந்தவர். எனினும் அவர் சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பிச்சை எடுத்து ஜீவணம் நடத்தி வந்தது தெரியவந்தது. பிரேத பரிசோதனையின் முழு அறிக்கையும் வெளியானால்தான் உண்மை தெரியும் என போலீஸார் தெரிவிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications