Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'என்னை யாராலும் தொடமுடியாது..' முறுக்கிய எஸ்பி வேலுமணி வீட்டில் அதிரடி சோதனை.. ட்விட்டர் டிரெண்டிங்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில், இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் ட்விட்டரில் ஹேஷ்டேக்குகள் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.

Recommended Video

    எஸ்.பி.வேலுமணி நிறுவனங்கள் அசுர வளர்ச்சி: லஞ்ச ஒழிப்பு விசாரணையில் வெளிவந்த திடுக் விவரங்கள்!

    அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணிக்குச் சொந்தமான பல இடங்களில் இன்று அதிகாலை முதலே லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சுமார் நான்கு மணி நேரத்தைக் கடந்தும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

    ஆர்.எஸ். பாரதி மற்றும் அறப்போர் இயக்கம் கொடுத்த புகார்களின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வரும் நிலையில், எஸ் பி வேலுமணி உள்ளிட்ட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    விஜயபாஸ்கர், வேலுமணி.. அடுத்தது 'மின்சார’ துறைக்கு ஷாக்.. சிக்கப் போகும் நத்தம் விஸ்வநாதன், தங்கமணி?.

    எஸ் பி வேலுமணி

    எஸ் பி வேலுமணி

    எஸ் பி வேலுமணி தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திப் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளைக் குவித்துள்ளதாக, சில ஆண்டுகளுக்கு முன்னரே அறப்போர் இயக்கம் புகார் அளித்திருந்தது. அதேபோல திமுக சார்பிலும் ஆர்.எஸ்.பாரதி புகார் அளித்திருந்தார். புகார் அறப்போர் இயக்கம் புகார் அளித்து 2 ஆண்டுகளைக் கடந்திருந்த நிலையிலும், எந்தவொரு புகாரும் பதிவு செய்யப்படாமல் இருந்தது.

    ட்விட்டர்

    ட்விட்டர்

    இந்தச் சூழலில் தான் தற்போது லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று அதிரடி சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். கோவை, சென்னை, திண்டுக்கல் என 50க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வரும் நிலையில், சில இடங்களில் போலீசாருக்கும் அதிமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளும் ஏற்பட்டுள்ளது. மறுபுறம் ட்விட்டர் தளத்திலும் இந்த ரெய்டுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    பழைய பேட்டிகள்

    முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமானோருக்குச் சொந்தமான நிறுவனங்களின் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது தான் ட்விட்டரில் முக்கியமான பேசுபொருளாகியுள்ளது. சில நிறுவனங்கள் வெறும் சில ஆண்டுகளில் 1000 மடங்கு வளர்ந்துள்ளது. அதேபோல அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த போது, தன்னை யாராலும் தொட முடியாது என்று எஸ் பி வேலுமணி கூறியதையும் சிலர் பகிர்ந்து வருகின்றனர்,

    ஸ்டாலின் பேச்சு

    அதேபோல தேர்தல் பிரசாரத்தின் சமயத்தில் எஸ் பி வேலுமணி குறித்து மு க ஸ்டாலின் பேசியதையும் சிலர் பகிர்ந்து வருகின்றனர். கோவையில் நடந்த பிரசாரம் ஒன்றில் பேசும் மு க ஸ்டாலின், "அதிகப் பணம் கொள்ளையடித்தவர் எஸ் பி வேலுமணி தான். இது குறித்தும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆட்சியில் இருக்கும் வரை தப்பித்துக் கொள்ளலாம். ஆனால் விரைவில் அமையவிருக்கும் திமுக ஆட்சியில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் குறிப்பிடுகிறார்.

    உணவு விநியோகம்

    எஸ் பி வேலுமணிக்கு எதிராக ஊழல்மணி வேலுமணி என்ற ஹேஷ்டெக்கும் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. மேலும், எஸ்பி வேலுமணிக்கு ஆதரவாக போராடுபவர்களுக்கு தற்போது உணவு பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதனைக் கிண்டல் செய்யும் விதமாகவும் "சாப்பிட்டுக் கொண்டே போராட்டம் நடத்தும் ஒரே கட்சி" என்றும் சிலர் பதிவிட்டு வருகின்றனர். அதேபோல தேர்தல் பிரசாரத்தின் சமயத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி பேசிய வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.

    அதிமுக பதிலடி

    அதிமுக பதிலடி

    அதேநேரம் அதிமுக தரப்பிலும் பலரும் இது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நடத்தப்படும் ரெய்டு என விமர்சித்துள்ளனர். குறிப்பாக தற்போது மின் துறை அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜி மீதான விசாரணை முடக்கப்பட்டுள்ளது ஏன் என்றும் அவர் மீது எப்போது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+