26 வயது பெண்.. நாசம் செய்து.. மிரட்டியே பலமுறை.. 2 சைக்கோ வாலிபர்கள் சிக்கினர்!

பெண்ணை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்த 2 இளைஞர்கள் கைதாகினர்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    பெண்ணை நாசம் செய்து.. வீடியோ எடுத்து மிரட்டிய சைக்கோக்கள்

    சென்னை: 26 வயது பெண்ணை.. நாசம் செய்து.. வீடியோ எடுத்து.. பலமுறை மிரட்டி.. திரும்ப திரும்ப சீரழித்த 2 சைக்கோ கொடூரர்களை போலீசார் கைது செய்தனர்.

    சென்னை, விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் கார்த்திகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவரது கணவர் சங்கர்.. இவர் கார்பென்ட்டராக வேலை பார்க்கிறார். அதனால், கார்த்திகாவை இரண்டாவது கல்யாணம் செய்து கொண்டார். கார்த்திகாவுக்கு 26 வயதாகிறது!

    கடந்த 3 மாசமாக சங்கர் வெளியூருக்கு வேலை விஷயமாக சென்றுவிட்டார். சம்பவத்தன்று, வீட்டிற்கு வெளியில் கார்த்திகா நின்றிருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த ஹரிஷ்குமார், ரமேஷ்குமார் ஆகிய 2 இளைஞர்கள், கோயில் பிரசாதம் என்று ஒரு சாக்லேட்டை தந்தனர். அந்த சமயத்தில் அவர்கள் பகுதியில் இருந்த கோயிலில் விழா நடந்து முடிந்திருந்தது.

    சாக்லேட்

    சாக்லேட்

    அதனை வாங்கி சாப்பிட்ட கார்த்திகா சிறிது நேரத்தில் மயக்கம் போட்டு விழுந்துள்ளார். உடனே 2 பேரும் யாரும் பார்க்காத வகையில் வீட்டுக்குள்ளேயே தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதை வீடியோவும் எடுத்து கொண்டனர். போற போக்கில் கழுத்தில் கிடந்த 3 பவுன் தாலி சங்கிலியையும் பறித்து கொண்டு சென்றுள்ளனர்.

    தாலி செயின்

    தாலி செயின்

    இதன்பின்னர், எடுத்த வீடியோவை, கார்த்திகாவுக்கு அனுப்பி வைத்தனர்.. இதை கண்டு மிரண்டு போன கார்த்திகா, பயந்து நடுங்கி உள்ளார். தாலி செயினை மட்டும் தந்துவிடும்படி அழுதுள்ளார். நேரில் வந்தால் தருகிறோம் என்று சொல்லவும், அதை நம்பி கார்த்திகா சென்றுள்ளார். ஆனால், திரும்பவும் 2 பேரும் சேர்ந்து பெண்ணை நாசம் செய்து திருப்பி அனுப்பினர்.. இவர்களை தவிர, மேலும் சில நண்பர்களையும் வரவழைத்து, கூட்டு பாலியல் கொடுமை நடந்துள்ளது.

    கதறி அழுதார்

    கதறி அழுதார்

    அந்த 2 பேருமே சைக்கோ நபர்களாம்.. ஒரு மாதத்துக்கு கார்த்திகாவை அங்கு வா, இங்குவா என்று சொல்லி திரும்ப திரும்ப சீரழித்துள்ளனர். இந்த சமயத்தில்தான் வெளியூர் போன கணவன் வந்ததும், நடந்தவைகளை சொல்லி கதறி அழுத கார்த்திகா, வீடியோவையும் காட்டி உள்ளார்.

    போலீசில் புகார்

    போலீசில் புகார்

    ஆத்திரமடைந்த கணவன், உடனடியாக விருகம்பாக்கம் ஸ்டேஷனில் புகார் செய்ய, நடவடிக்கை தாமதமானது என்பதால், சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் தர, இதையடுத்துதான், வடபழனி மகளிர் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர். சைக்கோ பாலியல் கொடூரர்கள் 2 பேர் மீதும் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். விஷயம் பெரிதாகிவிட்டது என்பதை அறிந்ததும், 2 சைக்கோவும் தப்பி ஓடிவிட்டனர்.

    சிக்கினர்

    சிக்கினர்

    அவர்களை தீவிரமாக தேடி வந்த நிலையில் நெசப்பாக்கம் பகுதியில் தலைமறைவாக இருந்த ஹரிஷ்குமார், ரமேஷ்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்தி பின்னர் புழலில் அடைத்தனர். இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+