ஒதுக்கி வைத்த ஆசிரியர்கள், சக மாணவிகள்..! மன உளைச்சலால்.. சென்னை கல்லூரி மாணவிகள் தற்கொலை முயற்சி!
சென்னை: சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் படிக்கும் 2 மாணவிகள் தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கே பள்ளி, கல்லூரி மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் மோசமான சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.
தற்போது தலைநகர் சென்னையில் கால்நடை மருத்துவக் கல்லூரியில் படிக்கும் இரு மாணவிகள் தற்கொலைக்கு முயன்றதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக அரசு
இதைத் தடுக்க தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாணவ, மாணவிகளுக்கு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், மன நல மருத்துவர்களும் குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை மாணவர்களைச் சந்தித்து ஆலோசனைகளைத் தரவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும், மாணவ- மாணவியர் தங்களுக்கு எந்த பிரச்சினை என்றாலும் ஆசிரியர்கள் அல்லது தலைமை ஆசியரிடம் மனம் விட்டுப் பேசலாம் எனக் கூறப்பட்டு உள்ளது.

கால்நடை மருத்துவக் கல்லூரி
சென்னை வேப்பேரியில் கால்நடை மருத்துவக் கல்லூரி அமைந்து உள்ளது. இங்குக் கல்லூரி விடுதியில் தங்கி, இரண்டாம் ஆண்டு படித்து வந்த இரு மாணவிகள் தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளனர். இருவரின் செயல்பாடுகள் காரணமாக இவர்கள் உடன் சக மாணவ- மாணவிகளும் கல்லூரி ஆசிரியர்களும் பேசாமல் ஒதுக்கி வைத்தாக என்று கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலால் இருவரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தற்கொலை முயற்சி
ஒரு கட்டத்தில் இதைத் தாங்க முடியாமல் மருத்துவக் கல்லூரி லேப்பில இருந்த மெர்குரிக் சல்பைடை சாப்பிட்டு இருவரும் தற்கொலைக்கு முயன்று உள்ளனர். இதை விடுதியில் இருந்த மற்றொரு மாணவி பார்த்துள்ளார். இதையடுத்து மாத்திரை உண்ட இரு மாணவிகளும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனைக்கு விரைந்து சென்ற போலீசார், இது தொடர்பாக விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.
Recommended Video

உதவி எண்கள்
எந்தவொரு பிரச்சினைக்கும் தற்கொலை செய்து கொள்வது தீர்வு இல்லை. தற்கொலை தொடர்பான எண்ணங்கள் எழுந்தால் கீழ்க்கண்ட எண்களைத் தொடர்பு கொள்ளலாம்
மாநிலத்தின் சுகாதார உதவி எண் 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044-24640050
ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு உதவிகளைப் பெறலாம்.
-
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
கேரளா Amusement park-ல் ஆகாய ஊஞ்சல் உடைந்து தமிழர்கள் உள்பட 7 பேர் காயம்! நடந்தது என்ன? -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications