இரட்டை இலை சின்னம் எங்களுக்கே வேண்டும்.. தேர்தல் ஆணையத்திற்கு ஓபிஎஸ் திடீர் கடிதம்.. அப்போ எடப்பாடி
சென்னை: நிலுவையில் உள்ள சிவில் வழக்குகளால், இரட்டை இலைச் சின்னம் பெறுவதை இழக்க நேரிடும் என அச்சப்படுகிறோம். எனவே தேர்தல் ஆணையம் தலையிட்டு, தங்கள் தரப்புக்கு இரட்டை இலை ஒதுக்க வேண்டும் என்று ஓ பன்னீர் செல்வம் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதிமுகவில் தலைமை பதவியை கைப்பற்றுவதில் எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ பன்னீர் செல்வத்துக்கும் போட்டி ஏற்பட்டது. இதில் பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரவு இருந்ததால், எடப்பாடி பழனிசாமி அதிமுகவை கைப்பற்றினார். ஓ பன்னீர் செல்வமும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.

அதிமுகவில் இருந்து தன்னை நீக்கிய பொதுக்குழு செல்லாது என்று ஓ பன்னீர் செல்வம் தொடர்ந்த வழக்குகளை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால், அதிமுக கட்சியும், சின்னமும் எடப்பாடி வசம் சென்றது உறுதியானது. எனினும் அதிமுக பொதுச்செயலளர் விவகாரம் தொடர்பாக சிவில் நீதிமன்றத்தில் ஓ பன்னீர் செல்வம் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
தேர்தல் ஆணையத்திற்கு கடிதம்: இந்த நிலையில், இந்த வழக்கை காரணம் காட்டி இரட்டை இலை சின்னத்தை தனக்கே ஒதுக்க வேண்டும் என்று ஓ பன்னீர் செல்வம் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு ஓ பன்னீர் செல்வம் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:- வழக்கு நிலுவையில் உள்ளதால் தமது கட்சி வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடியாத நிலை உள்ளது.
தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவிலை: எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்வானதை தேர்தல் ஆணையமோ நீதிமன்றமோ இதுவரை அங்கீகரிக்கவில்லை. சிவில் நீதிமன்றங்களில் அதிமுக தொடர்பான வழக்குகளில் இதுவரை இறுதி தீர்ப்பு வழங்கவில்லை. சட்டவிரோதமாக கூட்டிய பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி பொதுச்செயலாளாராக அறிவித்துக் கொண்டார்.
எனக்கு அதிகாரம் உள்ளது: 2022 ஜூலை 11-ல் சட்ட விரோதமாக அதிமுக பொதுக்குழுவைக் கூட்டி பழனிசாமி குழப்பத்தை ஏற்படுத்தி விட்டார். 2022 ஜூன் 28ல் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி விலகிவிட்டார். 2028 டிசம்பர் 28 வரை அதிமுக ஒருங்கிணைப்பாளராக தொடர்வதற்கு எனக்கு அதிகாரம் உள்ளது.
எனவே வேட்பாளர்களுக்கு ஏ பார்ம், பி பார்மில் கையெழுத்திடும் அதிகாரம் தனக்கு வழங்க வேண்டும். இரட்டை இலை சின்ன விவகாரத்தில் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தேர்தல் ஆணையத்த்திற்கு எழுதிய கடிதத்தில் ஓ பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
பாஜகவுடன் கூட்டணியா?: லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்து போட்டியிட ஓ பன்னீர் செல்வம் தரப்பு முடிவு செய்துள்ளது. பாஜக கூட்டணியில் அமமுகவிற்கு 4 தொகுதிகளும், ஓபிஎஸ் தரப்பிற்கு 4 தொகுதிகளும் ஒதுக்க பாஜக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடுவோம் எனக் கூறி வரும் ஓ பன்னீர் செல்வம் தேர்தல் ஆணையத்திற்கு சின்னம் கேட்டு கடிதம் எழுதியிருப்பது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது.
-
“எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை.. லாலலா”.. ஒன்று சேர்ந்த அணிகள்.. மீண்டும் எடப்பாடி பவர்! -
எடப்பாடிக்கு டிமிக்கி கொடுக்கும் 11 பேர்.. எஸ்கேப்பாகும் வேலுமணி.. அதிர்ச்சிக்கு ரெடியாகிறதா அதிமுக? -
வேலுமணி அணி வைத்த டிமாண்ட்.. எடப்பாடி பழனிசாமி என்ன சொன்னார்? அதிமுகவுக்கு குட் நியூஸ்! -
வந்துட்டேன்னு சொல்லு.. மீண்டும் எடப்பாடி கையில் அதிமுக? சிவிஎஸ் கூட்டிலிருந்து பறந்த எம்எல்ஏ.கள்! யார்? -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
அதிமுக இரு அணிகளின் வாபஸ் மனுக்கள் ஏற்கப்படுமா? இன்று அறிவிக்கும் சபாநாயகர்.. பரபரப்பில் ர.ரக்கள் -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
தேன்கூட்டில் கல்லெறிந்ததா தவெக? வேலுமணி கிட்ட சிவி சண்முகம் கேட்ட அந்த கேள்வி? அப்ப எடப்பாடி முடிவு? -
கண்கள் பனித்தது.. இதயம் இனித்தது! எடப்பாடி தான் எங்களுக்கு பொதுச் செயலாளர்! யூடர்ன் அடித்த வேலுமணி! -
சிவி சண்முகத்துக்கு கடைசி சான்ஸ் இதுதான்! எடப்பாடியின் முன் மண்டியிடும் 14 பேர்! பின்னணி காரணம் என்ன -
கொக்கு போல் காத்திருந்த எடப்பாடி.. சீனியர்களை சின்னாபின்னாம்மாக்கி மாஸ்! இப்படி ஒரு ப்ளானா? சூப்பர்! -
சிரித்து சமாளித்த எடப்பாடி.. வேலையைக் காட்டிய வேலுமணி! வெறுப்பில் சிவி சண்முகம்! இனிமே தான் ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications