பாத்ரூமில் குளித்த பெண்ணை.. ஜன்னல் வழியாக வீடியோ எடுத்த இளைஞர்கள்... 2 பேருக்கு சரமாரி அடி!
பெண் குளிப்பதை வீடியோ எடுக்க முயன்ற 2 பேருக்கு தர்ம அடி விழுந்தது
Recommended Video
திருப்பூர்: திருப்பூர் அருகே பப்ஜி விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களுக்கு பொதுமக்கள் சரமாரியாக அடி உதை கொடுத்தனர். இதுகுறித்து போலீஸார் விசாரித்தபோது அவர்கள் குளித்து கொண்டிருந்த பெண்ணை வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது.
திருப்பூர் மாவட்டம் ராக்கியாபாளையம் என்ற பகுதியில் ஒரு இடத்தில் மின்சார வயரிங் வேலைக்காக 2 பேர் வந்திருந்தனர். அவர்களது பெயர் சக்திவேல் மற்றும் பாரத். இருவருக்கும் சொந்த ஊர் தர்மபுரி மாவட்டம் குட்டூர் ஆகும். திருப்பூர் அருகே தங்கி வயரிங் உள்ளிட்ட வேலையைச் செய்து வருகின்றனர்.

ராக்கியாபாளையத்திற்கு வேலைக்கு வந்த இடத்தில் மதிய உணவு இடைவேளையின்போது இருவரும் அமர்ந்து செல்போனில் பப்ஜி விளையாடியுள்ளனர். அப்போது திடீரென அங்கு வந்த சிலர் அவர்களை சரமாரியாக அடித்துள்ளனர். கம்பியால் அடிக்கவே இருவரும் அலறினர்.
இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் போனது. போலீஸார் வந்து என்ன ஏது என விசாரித்தபோது இருவரும் வீட்டில் குளித்துக் கொண்டிருந்த ஒரு பெண்ணை ஜன்னல் வழியாக செல்போனில் வீடியோ எடுத்ததாக கூறியுள்ளனர். இதையடுத்து போலீஸார் இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
சம்பந்தப்பட்ட பெண்ணும், தான் குளித்ததை இவர்கள் வீடியோ எடுத்ததாக புகார் ஒன்று கொடுத்தார். வேலைக்கு வந்த இடத்தில் இவர்கள் ஏன் பாத்ரூம் பக்கம் போனார்கள், வீடியோ எடுத்தார்கள் என்று தெரியவில்லை. நடந்தது என்ன, எது உண்மை என்று போலீஸார் தற்போது விசாரித்து வருகிறார்களாம்.












Click it and Unblock the Notifications