Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இரண்டு ரைடு அரண்டு போன எடப்பாடி.. அந்த கு.பொ.செ.வை எப்பதான் சொல்லுவீங்க சார்? அமைச்சர் ரகுபதி ஆவேசம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அண்ணா திமுக- பாஜக இடையே குறைந்தபட்ச பொது செயல் திட்டம் இருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி தெரிவிக்கிறார்; அந்த குறைந்தபட்ச பொது செயல் திட்ட ரகசியத்தை எப்போது.. 2026 தேர்தல் முடிந்த பின்னரா அறிவிப்பீர்கள்? என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு சட்ட அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கு அதிமுக- பாஜக இடையேயான கூட்டணி உறுதியாகி உள்ளது. இந்த கூட்டணியை திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான ஸ்டாலின் விமர்சித்திருந்தார். இதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தற்போது சட்ட அமைச்சர் ரகுபதி பதிலடி தந்துள்ளார்.

இது தொடர்பாக சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி கூறியிருப்பதாவது: இரடு ரைடுகளுக்கு அரண்டு போய் அமித்ஷா முன்னிலையில் ஒருவார்த்தை கூட பேசாமல் தலையாட்டி பொம்மை போல அமர்ந்து கூட்டணியை உறுதி செய்த பழனிசாமியின் யோக்கியதையை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சுட்டிக்காட்டிவிட்டார் என்றவுடன் ரோஷம் வாந்தவரைப் போல வீண் அவதூறுகளை மட்டும் அள்ளிவிட்டு X தளத்தில் பதிவிட்டுள்ளார் பழனிசாமி.

regupathy edappadi palaniswami aiadmk dmk

முஸ்லிம்களின் முதுகில் குத்திய அதிமுக

பாரபட்சமான GST வரிப்பகிர்வை ஏற்றுக்கொண்டு பொருளாதார உரிமையை விட்டுக்கொடுத்தது, உதய் மின்திட்டத்தில் கையெழுத்திட்டு மின்கட்டண நிர்ணய உரிமையை விட்டுகொடுத்தது, CAA வை ஆதரித்து முஸ்லீம் மக்களின் முதுகில் குத்தியது இப்படி தமிழ்நாட்டின் உரிமைகளை ஒன்றிய பாஜகவிடம் விட்டுக்கொடுத்தது அடிமை அதிமுக ஆட்சியில் தான்.

நிபந்தனையே விதிக்காமல் கூட்டணி

அதோடு அடிமை அதிமுக ஆட்சியில் தான் நீட் நுழைவு தேர்வு தமிழ்நாட்டில் திணிக்கப்பட்டது என்பது தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்கு தெரியும். தன் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள பாஜக கூட்டணியில் ஒட்டிக்கொண்டு தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்தவர் பழனிசாமி. சரி இப்போதாவது அதற்கு பிராயச்சித்தம் செய்யும் வகையில் நீட் விலக்களித்தால் கூட்டணி வைக்கிறேன் என்றாவது பாஜக அரசிடம் வலியுறுத்தினாரா அதுவும் இல்லை. எந்த வித நிபந்தனையும் பழனிசாமி விதிக்கவில்லை என்று அமித்ஷா அவர்களே போட்டுடுடைத்துவிட்டார்.

அடிமை சாசனம் எழுதி தந்த அதிமுக

இப்படி தமிழ்நாட்டு நலனுக்கான எந்தவித உறுதியையும் பாஜகவிடம் கேட்காமல் அடிமை சாசனம் எழுதி கொடுப்பது போல கூட்டணிக்கு சரி என தலையாட்டி பொம்மையாய் பேச்சின்றி தலையைமட்டும் ஆட்டி கூட்டணியை உறுதி செய்துள்ளார் பழனிசாமி.

ஸ்டாலின் விமர்சனத்தில் என்ன தவறாம்?

இதை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சுட்டிக் காட்டி தமிழ்நாட்டை அடமானம் வைக்க துடிக்கிறார்கள் என்று கூறியதில் என்ன தவறு. ஏதோ "குறைந்த பட்ச செயல்திட்டம்" உள்ளது என்கிறார். அந்த ரகசியத்தை எப்போது சொல்வார்கள் தேர்தல் முடிந்த பின்னா..?

என்னது குறைந்தபட்ச செயல் திட்டமா? எப்ப சொல்லுவீங்க?

அந்த செயல்திட்டத்தில் தமிழ்நாட்டு மக்கள் நலன் சார்ந்த செயல்திட்டம் உள்ளதா..? நீட் தேர்வு விலக்கு, மும்மொழி என்ற இந்தி திணிப்பு, மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை , நிதி பகிர்வில் பாரபட்சம் இப்படியான மத்திய பாஜக அரசின் வஞ்சகத்திற்கு என்ன செயல் திட்டத்தை மேற்கொள்ள போகிறார் பழனிசாமி என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கேள்வி கேட்டால் அதற்கு பதில் சொல்ல துப்பில்லை.

துரோகி அதிமுக- விரோதி பாஜக

"சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வருவதற்கு" மக்கள் நலனைப் பற்றி பழனிசாமி சிந்தித்தால் தானே அதை பற்றி செயல்திட்டம் வகுக்க.. உங்களது அந்த செயல்திட்டம் எல்லாம் இனி அமலாக்கத்துறை அதிமுக வினர் வீட்டுக்கதவை தட்டக் கூடாது என்பதுதான் என தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும். துரோகி அதிமுகவும், விரோதி பாஜகவும் சேர்ந்த கூட்டணியை வரும் தேர்தலில் விரட்டி அடிப்பார்கள் தமிழ்நாட்டு மக்கள். இவ்வாறு அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி சொல்லி இருந்தது என்ன?

முன்னதாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: .மு.க. தலைவரும், விடியா திமுக அரசின் முதல்வருமான ஸ்டாலின், , தினமும் என்ன பிரச்சனை வரப்போகிறது என்று தன் தூக்கம் தொலைந்துவிட்டதாக ஒருமுறை திமுக பொதுக்குழுவில் சொன்னார். அவருடைய அமைச்சர் பொன்முடியின் அருவருக்கத்தக்க ஆபாசப் பேச்சு அவர் தூக்கத்தை கெடுத்தது.

ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி பதில்

இன்றோ, அஇஅதிமுக-வின் கூட்டணி அறிவிப்பு இடிபோல் வந்து அவருக்கு இறங்கியுள்ளது போலும்! பீதியின் உச்சத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். தி.மு.க. செய்த வரலாற்றுப் பிழைகள் இந்த கூட்டணி மூலம் திருத்தி எழுதப்படும் என்று நேற்று நான் எனது எக்ஸ் பதிவு வாயிலாக தெரிவித்தேன்.

ஸ்டாலினின் வெற்று அறிக்கை

தமிழ்நாட்டு நலனுக்கான "குறைந்தபட்ச செயல் திட்டம்" இருக்கும் என மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்திருந்தார்.
"என்னவா இருக்கும்?" என்று இரவு முழுக்க தூக்கத்தை தொலைத்த ஸ்டாலின், காலையில் தனது மொத்த வரலாற்றுப் பிழைகளையும் வெற்று நாடகங்களையும் தொகுத்து அதனை அறிக்கையாக வெளியிட்டுவிட்டார்.

தமிழக மக்கள் மீது அக்கறை இருக்கிறதா?

மணிப்பூர் மாநிலப் பிரச்சனைகள் பற்றி உங்களுக்கு இருக்கும் அக்கறை, துளியாவது உங்களுக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள், குறிப்பாக பெண்கள் மீது இருந்ததா? அவர்கள் பாதுகாப்பை குழிதோண்டி புதைத்த உங்களுக்கு சட்டம் ஒழுங்கு பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது?

நீட் ரீல் முடியும் நேரம்

"NEET என்றால் என்ன? அதனை இந்திய நாட்டிற்கே அறிமுகப்படுத்தியது யார்? அதனை உச்சநீதிமன்றம் வரை வாதாடி நிலைபெறச் செய்தது எந்த கூட்டணி?"- இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட்டு, பிறகு நீட் பற்றி பேசுங்கள்!
முதல்வர் ஸ்டாலின் அவர்களே- நீங்கள் ஓட்டிய திரைப்பட ரீல் முடியும் நேரம் வந்துவிட்டது!

உரிமைகளை அடகு வைத்தது திமுகதான்!

அதிமுக, ஒருபோதும் தமிழ்நாட்டை, நம் மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்காது! மாறாக, நமக்கான மாநில உரிமைகளை பெற்றுத் தரவே செய்யும்! காவிரி உரிமையை பெங்களூரிலும், முல்லைப் பெரியாறு அணை உரிமையை திருவனந்தபுரத்திலும் அடகு வைத்த தி.மு.க.வின் தலைவர் அதைப் பற்றி கவலைப் பட வேண்டாம்! தமிழ்நாடு விரோத தி.மு.க. வின் ஊழல் ஆட்சியை தோலுரித்து, மக்களின் பேராதரவோடு அதிமுக தலைமையிலான கூட்டணி 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி வாகை சூடும்!

ரெய்டுக்கு பயந்த ஸ்டாலின்

(பி.கு. : ரெய்டுகளுக்கு பயந்து, "தொட்டுப் பார்- சீண்டிப் பார்" வீடியோ கூட வெளியிட முடியாத அளவிற்கு தொடை நடுங்கிக் கொண்டிருப்பது யார் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள்!) இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்.

Take a Poll

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+