தமிழகத்தில் இனி பள்ளி மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் வர தடை.. பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு
பெற்றோர்களே கவனம்.. இனி பள்ளி மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் வர தடை.. அதிரடி உத்தரவிட்ட தமிழக பள்ளிக் கல்வித் துறை
சென்னை : தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் பள்ளிகளுக்கு இருசக்கர வாகனத்தில் வர தடை என தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு இருப்பது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இருசக்கர வாகனங்கள் உள்பட எந்த வாகனத்தையும் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் இயக்க அனுமதி இல்லை என்பது தெரிந்ததே.
18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டுமே லைசென்ஸ் வழங்கப்படும் என்றும் லைசென்ஸ் பெற்றவர்கள் மட்டுமே இருசக்கர வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களையும் இயக்க உரிமையுள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது .

பள்ளிக் கல்வித்துறைக்கு புகார்
இந்த நிலையில் பல பள்ளிகளில் மாணவர்கள் பள்ளிக்கு இருசக்கர வாகனங்களில் வருவதாக தகவல் வந்ததையடுத்து இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறைக்கு புகார்கள் வந்தது. இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை சற்று முன்னர் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் வர அனுமதிக்கக் கூடாது என்றும் 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் வாகனங்களை இயக்குவதற்கு பெற்றோர்கள் அனுமதி தரக்கூடாது என்றும் சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.

2 சக்கர வாகனங்களுக்கு அனுமதியில்லை
தமிழகத்தில் மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் வர அனுமதிக்கக் கூடாது என்றும் 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் வாகனங்களை இயக்குவதற்கு பெற்றோர்கள் அனுமதி தரக்கூடாது என்றும் தெரிவித்துள்ளது. இதேபோல் மற்றொரு அறிவிப்பில், பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு ஆகிய மூன்று வகுப்பு மாணவர்களை தவிர மற்ற வகுப்பு மாணவர்களுக்கு உடற்கல்வி பீரியட் தொடங்கப்பட அனுமதி அளித்து பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

உடற்கல்வி வகுப்புகள்
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து பள்ளிகள் திறக்கப்பட்ட காலத்திலும் உடற்கல்வி வகுப்புகள் என்று அழைக்கப்படும் பி.டி. பீரியடுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படவில்லை இந்த நிலையில் மூன்றாவது அலைக்கு பின்னர் பள்ளி திறக்கப்பட்டு சில மாதங்கள் ஆன பின்னர் தற்போதுதான் உடற்கல்வி பீரியடுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் மகிழ்ச்சி
ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பிடி பீரியடில் மாணவர்கள் விளையாட அனுமதிக்கப்படுவார்கள் என்றும் ஆனால் அதே நேரத்தில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெற உள்ளதால் அவர்களுக்கு மட்டும் உடற்கல்வி பாடத்திட்டம் பீரியடில் அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications