சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சேப்பாக்கத்தில் உழைப்பை கொட்டி சூப்பரா ஸ்கோர் செய்த பேரன்.. கருணாநிதியையே விஞ்சிய உதயநிதி!

Google Oneindia Tamil News

சென்னை: தனது தாத்த கருணாநிதியை காட்டிலும் அதிக வாக்குகள் பெற்றும் அதிக வாக்குகள் வித்தியாசத்திலும் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். இதை ரசிகர்களும் ஆதரவாளர்களும் கொண்டாடி வருகிறார்கள்.

ரெட் ஜியன்ட் மூவிஸ் எனும் சினிமா தயாரிப்பு நிறுவனத்தை கடந்த 2008ஆம் ஆண்டு முதல் தொடக்கி வைத்து நடத்தி வந்தார். சில படங்களிலும் கதாநாயகனாக நடித்துள்ளார்.

முகமெல்லாம் வெற்றி பூரிப்பு... அப்பாவுக்கு மகன் மகளோடு போய் உதயநிதி கொடுத்த முகமெல்லாம் வெற்றி பூரிப்பு... அப்பாவுக்கு மகன் மகளோடு போய் உதயநிதி கொடுத்த "அந்த பரிசு" செம

தாத்தா கருணாநிதியின் மறைவுக்கு பின்னர் திமுகவில் இணைந்த உதயநிதி, முதலில் திமுக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்.

இளைஞரணி

இளைஞரணி

பின்னர் அரசியல்வாதிகள் குறித்து சூடான விமர்சனங்களை முன்வைத்து வந்தார். 2019ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதன் பலனாக தமிழகத்தில் திமுக கூட்டணி 38 இடங்களில் வென்றது. இதையடுத்து அவருக்கு இளைஞரணி தலைவர் பதவியை பெற்றது.

உதயநிதி

உதயநிதி

இதையடுத்து சட்டசபைத் தேர்தலிலும் கடுமையாக பணியாற்றினார். மோடி முதல் எடப்பாடி பழனிச்சாமி வரை பெரும்பாலானோரை விமர்சித்தார். இதையடுத்து அவருக்கு சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது. இதில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் உதயநிதி வென்றார்.

புதிய அத்தியாயம்

புதிய அத்தியாயம்

கருணாநிதி போட்டியிட்ட சேப்பாக்கத்தில் போட்டியிட்டதன் மூலம் தாத்தாவின் தொகுதியிலிருந்தே தனது தேர்தல் அத்தியாயத்தை தொடங்கிவிட்டார் உதயநிதி. இவர் 91,776 வாக்குகளை பற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளரை விட 68,133 வாக்குகளை பெற்றுள்ளார். கருணாநிதி பெற்ற வாக்கு வித்தியாசத்தை விட உதயநிதி அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்று சாதனை படைத்துள்ளார்.

வித்தியாசம்

வித்தியாசம்

கடந்த 1996 ஆம் ஆண்டு சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி 35 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வென்றார். அது போல் 2001 ஆம் ஆண்டு 4,834 வாக்குகள் வித்தியாசத்திலும் 2006 இல் 8,526 வாக்குகள் வித்தியாசத்திலும் 2011 ஆம் ஆண்டு 50,249 வாக்குகள் வித்தியாசத்திலும் கருணாநிதி வென்றார். ஆனால் உதயநிதியோ 68, 133 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று தனது தாத்தாவையே முறியடித்துள்ளார்.

English summary
Udhayanidhi Stalin breaks his grandfather's vote difference victory in Chepauk Assembly constituency.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X