குன்றக்குடி அடிகளாரின் விபூதியை பெரியார் பூசினாரா? உதயநிதி பேச்சு- பெரியாரிஸ்டுகள் சொல்லும் வரலாறு!
சென்னை: திராவிட இயக்கத்தின் ஆக்கப் புள்ளியாக இருந்த நீதிக்கட்சியின் ஆட்சியின் போது தான் இந்து சமய அறநிலையத்துறை பாதுகாப்பு சட்டம் உருவாக்கப்பட்டு வழிபாட்டு உரிமை உறுதி செய்யப்பட்டது. குன்றக்குடி அடிகளார் தந்த விபூதியை நெற்றி நிறைய பூசி கொண்டவர் தான் தந்தை பெரியார்" என்று தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.

பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திராவிட இயக்கத்தின் ஆக்கப் புள்ளியாக இருந்த நீதிக்கட்சியின் ஆட்சியின் போது தான் இந்து சமய அறநிலையத்துறை பாதுகாப்பு சட்டம் உருவாக்கப்பட்டு வழிபாட்டு உரிமை உறுதி செய்யப்பட்டது. குன்றக்குடி அடிகளார் தந்த விபூதியை நெற்றி நிறைய பூசி கொண்டவர் தான் தந்தை பெரியார் அவர்கள். பேரறிஞர் அண்ணா அவர்கள் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று முழங்கினார்கள். ஓடாத திருவாரூர் தேரை ஓட வைத்தவர் தான் கருணாநிதி. இப்படி நம்முடைய தலைவர்கள் வழியில் முதலமைச்சர் அறநிலையத்துறையின் சார்பாக ஏராளமான

பெரியாரிஸ்டுகள் எதிர்ப்பு: ஆனால் " குன்றக்குடி அடிகளார் தந்த விபூதியை நெற்றி நிறைய பூசி கொண்டவர் தான் தந்தை பெரியார் அவர்கள்" என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருப்பது உண்மைக்குப் புறம்பானது என கொந்தளிக்கின்றனர் பெரியாரிஸ்டுகள். சென்னை தெற்கு மாவட்ட திமுக கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவை மாவட்ட துணை அமைப்பாளர் ஓ.சுந்தரம் தமது ஃபேஸ்புக் பக்கத்தில், தந்தை பெரியாருக்கு குன்றக்குடி அடிகளார் விபூதி கொடுக்கவுமில்லை; அதைப் பெற்றுக் கொண்டு நெற்றி நிறைய பெரியார் பூசிக் கொள்ளவும் இல்லை! இப்படித் தவறான தகவலை உதயநிதி பேசி, அது பதிவாகிறபோது நமது கொள்கை எதிரிகள் இதனை ஆதாரமாக்கி விமர்சிக்கக் கூடும் என்பதால் உண்மையை எடுத்துச் சொல்கின்றோம் என விவரித்திருந்தார்.

கொளத்தூர் மணி சொல்வது என்ன?: இது தொடர்பாக நமது ஒன் இந்தியா தமிழ் சார்பாக, திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் தா.செ.மணியைத் தொடர்பு கொண்டு கேட்ட போது தெரிவித்ததாவது: பொதுவாக ஆதீனங்களுக்கு யார் சென்றாலும் அங்குள்ள கட்டளைத்தம்பிரான்கள் திருநீறு வைத்து வரவேற்பது வழக்கம்தான். அப்படித்தான் தந்தை பெரியார் குன்றக்குடி அடிகளாரை சந்திக்கச் சென்ற போது கட்டளைத்தம்பிரான் தந்தை பெரியாருக்கு திருநீறு வைத்துவிட்டார். ஆனால் தந்தை பெரியார் அப்போது எதுவும் சொல்லாமல் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டார்.. அந்த தண்ணீரை குடித்துவிட்டு அப்படியே முகம் கழுவி விபூதியையும் அழித்துவிட்டார் என்பதுதான் வரலாறு. குன்றக்குடி அடிகளார், தந்தை பெரியாருக்கு விபூதி தரவும் இல்லை; அதை தந்தை பெரியார் வாங்கி பூசிக் கொள்ளவும் இல்லை என்பதுதான் வரலாறு. இதேபோல திருவிக தமது வீட்டுக்கு வந்த போது, எப்போதும் திருவிக குளித்தவுடன் திருநீறு வைப்பது வழக்கம் என்பதால் தந்தை பெரியாரே திருநீறு எடுத்து திருவிகவிடம் கொடுத்த நிகழ்வும் நடந்திருக்கிறது. மதுரை ஆதீனத்தை நாங்கள் சந்திக்க சென்ற போது, எங்களை முகம் பார்க்காமலேயே திருநீறை கையில் எடுத்தவர்.. எங்களைப் பார்த்தவுடன் ஓ, தாங்களா? என கேட்டு திருநீறை கொடுக்காமல் நிறுத்திக் கொண்டார். இவ்வாறு கொளத்தூர் தா.செ. மணி நமது ஒன் இந்தியா தமிழிடம் தொலைபேசியில் தெரிவித்தார்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications