மிஞ்சிட்டாரே உதயநிதி.. கவனிக்கும் டெல்லி.. இன்று திமுக அனைத்து அணிசெயலாளர்கள் கூட்டம்.. இதான் விஷயமா
சென்னை: நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி திமுக இளைஞரணி சார்பில் தமிழகம் முழுவதும், மாபெரும் கையெழுத்து இயக்கத்தினை, திமுக அமைச்சர் உதயநிதி துவக்கி வைத்துள்ள நிலையில், திமுகவின் அனைத்து அணிச்செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.. என்ன காரணம்?
கிராமப்புற மாணவர்கள், அரசுப் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருவதாககூறி தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தகோரிக்கையை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக வலியுறுத்தி வருகிறது.

உதயநிதி: இதை முன்னிறுத்தி, நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை திமுக இளைஞரணி கையில் எடுத்துள்ளது. அந்தவகையில், இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி, நேற்றுமுன்தினம், சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் கையெழுத்து போட்டு தொடங்கி வைத்திருந்தார்.
இந்நிலையில், திமுகவின் அனைத்து அணிச்செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இது தொடர்பாக, திமுக தலைமைக்கழகம் அறிக்கையையும் வெளியிட்டிருந்தது.
அந்த அறிக்கையில், "நீட்" தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற தமிழ்நாட்டு மக்களின் மனநிலையை மத்திய அரசுக்கு உணர்த்தும் வகையில், திமுக இளைஞர் அணிச் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் முன்னெடுப்பில், "நீட் விலக்கு, நம் இலக்கு" எனும் மாபெரும் கையெழுத்து இயக்கத்தை 21.10.2023 அன்று காலை சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கையெழுத்து இயக்கத்தை தொடக்கி வைத்து முதல் கையெழுத்திட்டார்.
அணிசெயலாளர்கள் கூட்டம்: நீட் தேர்வு விலக்கினை மக்கள் போராட்டமாக மாற்றும் வகையில், இக்கையெழுத்து இயக்கத்தை மாபெரும் மக்கள் இயக்கமாக, தமிழ்நாட்டில் உள்ள குக்கிராமம் முதல் பட்டணக்கரை கொண்டு சென்றிட ஏதுவாக, கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில், வருகிற 23.10.2023 திங்கட்கிழமை அன்று மாலை 6.30 மணியளவில், "தி.மு.கழகத்தின் அனைத்து அணிச் செயலாளர்கள் கூட்டம்" காணொலி காட்சி வாயிலாக நடைபெற உள்ளது.
இந்தக் கலந்தாலோசனைக் கூட்டத்தில் கழக அனைத்து அணிச் செயலாளர்களும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
கையெழுத்துக்கள்: அந்தவகையில், இன்றைய தினம் ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது.. தமிழகம் முழுவதும் தொடங்கியுள்ள கையெழுத்து இயக்கம், அடுத்த 50 நாட்களில், மாணவர்கள் பேராசிரியர்கள் கல்வியாளர்கள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் என 50 லட்சம் பேரிடம் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கையெழுத்து பெற திமுக முடிவு செய்திருக்கிறது..
திமுகவின் மாவட்ட,மாநகர அமைப்பாளர்கள் மற்ற நிலைகளில் உள்ள அமைப்பாளர்கள் மூலமாக கையெழுத்து இயக்கத்தை தீவிரப்படுத்தி 50 நாட்களுக்குள் பணியை செய்து முடித்திட வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் ஏற்கனவே அறிவுறுத்தியிருக்கிறார்.
ஆலோசனை கூட்டம்: அந்தவகையில், நீட் தேர்வை ரத்து செய்ய, மத்திய அரசை வலியுறுத்தி 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துக்கள் பெறப்படவுள்ளது. இந்த கையெழுத்து ஆவணங்கள் குடியரசுத் தலைவருக்கும் அனுப்பி வைக்கப்பட உள்ளது. இந்த கையெழுத்து இயக்கத்தை தமிழ்நாடு முழுவதும் கொண்டு சேர்க்கும் பணிகளில் ஈடுபடுவதற்காக, திமுகவில் உள்ள அனைத்து அணிகளின் செயலாளர்களுடனும் இன்றைய தினம் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட உள்ளதாக தெரிகிறது.
"மத்திய அரசு நீட் விவகாரத்தில் அலட்சியம் காட்டினால் ஜல்லிக்கட்டு போன்ற வீரமிக்க ஒரு போராட்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை எச்சரிக்கையாகவே சொல்கிறேன்" என்று நேற்றுமுன்தினம், உதயநிதி கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications