எங்கே அண்ணாமலைக்கு தைரியம் இருந்தால் அண்ணா சாலைக்கு வரச் சொல்லுங்கள்! உதயநிதி சவால்
சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை முடிந்தால் அண்ணா சாலை பக்கம் வரச் சொல்லுங்கள் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.
இதுகுறித்து உதயநிதி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது: என்னை ஒருமையில் அண்ணாமலை பேசியிருக்கிறார். அவர்களது தரம் அதுதான். என் வீட்டில் போஸ்டர் ஒட்டுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். ஏற்கெனவே அண்ணா அறிவாலயத்தை ஏதோ செய்வதாக தெரிவித்திருந்தார். தைரியமிருந்தால் அண்ணாமலையை அண்ணா சாலை பக்கம் வரச் சொல்லுங்கள்.

உதயநிதி, அண்ணாமலையின் தனிப்பட்ட பிரச்சினை இல்லை. கல்வி நிதி தொடர்பானது. நிதியை பெற்றுத் தர துப்பில்லாதவர்கள் பேசுகிறார்கள். தமிழகத்தின் நிதி உரிமையை திசை திருப்பவே இப்படி செய்கிறார்கள்.
தனியார் பள்ளி
தனியார் பள்ளிகளை யாராவது சட்டவிரோதமாக நடத்துகிறார்களா என்ன? மத்திய அரசிடம் போதிய அனுமதியை பெற்றுத்தானே நடத்துகிறார்கள். தனியார் பள்ளிகளில் யாராவது இலவச உணவையோ இலவச சீருடையையோ தருகிறார்களா என்ன?
தனியார் பள்ளிகளில் இந்தி
தனியார் பள்ளியில் இந்தி கற்றுக் கொடுக்கிறார்கள் என மும்மொழிக் கொள்கையுடன் தொடர்புபடுத்த வேண்டாம். மும்மொழி கொள்கை என்பது அரசுப் பள்ளியோடு தொடர்புடையது. உ.பி. கும்பமேளாவில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் பாஜக திணறி வருகிறது. எத்தனை பேர் பலியானார்கள், எத்தனை பேர் காயமடைந்தனர் என்பது குறித்து அறிக்கையேதும் வெளியிடப்படவில்லை.
காசியில் தமிழக வீரர்கள்
காசியில் தமிழக வீரர்கள் சிக்கி வரும் சம்பவம் குறித்து இன்று காலை எனக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் தமிழகம் திரும்ப போதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.
திமுக தீயசக்தி
கரூரில் 2025 மத்திய பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டம் நடந்தது. அப்போது அண்ணாமலை பேசுகையில், சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த முறை மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். தீயசக்தி திமுகவை வேரோடு அகற்ற வேண்டும் என்ற முடிவில் மக்கள் இருக்கிறார்கள்.
கள்ளை குடித்த குரங்கு
திமுகவின் ஆட்சி எப்படி இருக்கிறது என்றால் ஒரு பானையில் இருந்த கள்ளை குரங்கு குடித்து விடுகிறது. இதனால் தடுமாடிக் கொண்டிருந்த போது அதனை தேள் கொட்டி விடுகிறது. கள்ளை குடித்த குரங்கை தேள் கடித்துவிட்டால் அந்த குரங்கு எப்படி நடந்து கொள்ளுமோ அப்படித்தான் திமுக ஆட்சி இருக்கிறது.
தற்குறிகள்
திமுகவின் உதயநிதி, அன்பில் மகேஷ் போன்ற தற்குறிகளை போல் அதே பாணியில் நான் பேச போகிறேன். நீ (உதயநிதி)சூரியனை 11.30 மணிக்கு பார்க்கிறவன், நாங்கள் அதிகாலை 3 மணிக்கு பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குளித்துவிட்டு 5 மணிக்கு கோப்புகளை எடுத்து பார்ப்பவர்கள்.
கெட் அவுட் மோடி
கெட் அவுட் மோடி என தைரியம் இருந்தால் உதயநிதி சொல்லட்டுமே! உலகத் தலைவரை மதிக்கத் தெரியாத நபராக உதயநிதி இருக்கிறார். இதுவரையில் எந்த மேடையிலும் நான் யாரையும் அவமரியாதையாக பேசியதே இல்லை.
ஆங்கிலத்தில் பேசிய மோடி
2026 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் மீண்டும் திமுக வென்று ஆட்சி அமைத்தால் பஞ்சம் பிழைப்பதற்காக நாம் எல்லாரும் மாநிலத்தை விட்டு வெளியே செல்ல வேண்டிய நிலை ஏற்படும். பிரதமர் மோடி இந்தியை எங்கே திணிக்கிறார், தமிழகத்திற்கு அவர்வந்தால் ஆங்கிலத்தில்தான் பேசுகிறார்.
விஜய் வித்யாஸ்ரம் பள்ளி
உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்கு மூன்று மொழிகளை படிக்க வையுங்கள் என்பதைத்தான் மோடி சொல்கிறார். அவர் இந்தியை திணிக்கவில்லை. அன்பில் மகன் பிரெஞ்ச் படிக்கிறார். நடிகர் விஜய், படூரில் சொந்தமாக விஜய் வித்யாஸ்ரம் நடத்தி வருகிறார். இவ்வாறு அண்ணாமலை தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications