அரியலூர் மருத்துவக் கல்லூரிக்கு அனிதா பெயர் சூட்டுக: பேரவையில் உதயநிதி கோரிக்கை
சென்னை : அரியலூர் மருத்துவக் கல்லூரிக்கு அனிதா பெயரை சூட்ட வேண்டும் என்று சட்டப் பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை வைத்தார்.
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி அனிதா நீட்தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று போராடியும், நீட் தேர்வுக்கு தடை வாங்க முடியாமல், தற்கொலை செய்து கொண்டார். இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உயிரிழந்த மாணவியின் வீட்டிற்கு சென்று ஆறுதல் தெரிவித்தார். இதேபோல் பலரும் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர்.

அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக , கடந்த சட்டசபை தேர்தலின் போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ஒழிக்க சட்டம் கொண்டுவருவாம் என்று உறுதி அளித்தது.
இதுபற்றி சட்டசபையில் இன்று தனது முதல் பேச்சின் போது உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பி பேசினார். இதுபற்றி அவர் ட்விட்டரில் கூறும் போது, சட்டப்பேரவையில் எனது முதல் உரையின் போது நீட் ஒழிப்பு போராளி தங்கை அனிதாவின் பெயரை அரியலூரில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக்கல்லூரிக்கு சூட்ட வேண்டும் என்றும் நீட்டுக்கு எதிராக போராடியவர்கள் மீது முந்தைய அதிமுக அரசு பதிந்த வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டேன்.
'நீட் தேர்வை ஒழிக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம்'என எனது பேரவை உரையில் குறிப்பிட்டு பேசினேன். அதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், 'நீட் தேர்வுக்கு எதிரான சட்ட முன்வடிவு இந்த கூட்டத்தொடரிலேயே தாக்கல் செய்யப்படும்' என்று அறிவித்தார். முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி" இவ்வாறு கூறினார்,
-
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
சிங்கப்பெண் நிகழ்ச்சியும் தள்ளி வச்சுட்டீங்க.. சட்டம் ஒழுங்குக்கும் அவகாசம் வேணுமா? விஜய்யை விமர்சித்த உதயநிதி -
நீட், சிபிஎஸ்இ தேர்வு குளறுபடிகள்.. பகிரங்க மன்னிப்பு கேட்கிறேன்! தர்மேந்திர பிரதான் உருக்கம்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு!












Click it and Unblock the Notifications