தாத்தா.. தாத்தா.. அவர் மட்டும் இப்ப இருந்திருந்தா.. பேசும்போதே உணர்ச்சிவசப்பட்ட உதயநிதி.. உருக்கம்!
சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் பிரசாரம் செய்து வரும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மிகவும் உணர்ச்சிகரமாக பேசியது பெரிய அளவில் வைரலாகி வருகிறது.
தமிழக சட்டசபை தேர்தலில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுகிறார். இவர் முதலில் தேர்தலில் போட்டியிடுவது சந்தேகமாக இருந்தது.
கட்சிக்கு உள்ளேயே இவருக்கு எதிராக சிலர் குரல் கொடுத்ததாக செய்திகள் வந்தது. ஆனால் எந்த விதமான எதிர்ப்பும் இன்றி திமுக சார்பாக சேப்பாக்கம் தொகுதியில் தற்போது உதயநிதி களமிறக்கப்பட்டுள்ளார்.

உதயநிதி
இந்த தொகுதியில் போட்டியிடுவதற்கு உதயநிதி சுயமாக விருப்பம் தெரிவித்து இருந்தார். இங்கு போட்டியிட திமுகவில் இருந்து வேறு யாரும் விருப்பம் தெரிவிக்கவில்லை. இதையடுத்து திமுக சார்பாக உதயநிதி இங்கு களமிறக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக உதயநிதி தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார்.

தாக்கல்
சேப்பாக்கம் தொகுதியில் வீடு வீடாக சென்று உதயநிதி தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்று முதல்நாள்தான் உதயநிதி இதற்காக வேட்பு மனு தாக்கல் செய்தார். பிரசாரத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி.. சேப்பாக்கம் தொகுதியில் திமுகவின் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. ஆட்சி அமைப்போம் என்ற நம்பிக்கை உள்ளது.

நியமன பதவி
எனக்கு திமுகவில் போட்டியிட மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது நியமன பதவி கிடையாது. என்னை சட்டசபை அனுப்புவது மக்களின் முடிவு. அவர்கள்தான் இதில் முடிவு எடுக்க வேண்டும். இந்த தொகுதி மக்கள்தான் எனக்கு வாக்களிக்க வேண்டுமா, வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டும்.

வாரிசு
என்னை வாரிசாக பார்ப்பதும், அவர்களின் சேவகனாக பார்ப்பதும் அவர்களின் சொந்த விருப்பம் .இப்போது என் தாத்தா கருணாநிதி இருந்திருந்தால் மகிழ்ச்சி அடைந்து இருப்பார்.. திமுகவிற்கு மக்கள் பெரிய அளவில் ஆதரவு கொடுக்கிறார்கள். செல்கிற இடங்களில் எல்லாம் சிறப்பான வரவேற்பு கொடுக்கிறார்கள்.

வரவேற்பு
இப்போது மட்டும் தாத்தா இருந்திருந்தால் இதை எல்லாம் பார்த்து மகிழ்ந்து இருப்பார். தாத்தா முதல்வராக இருந்த போது கொண்டு வந்த திட்டங்களை பற்றித்தான் பேசிக்கொண்டு இருக்கிறோம். அதை வைத்துதான் வாக்கு கேட்கிறோம். அவர் மட்டும் இதை பார்த்தால் சந்தோசப்பட்டு இருப்பார்.. என்று உதயநிதி மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.
-
மீண்டும் மீண்டும் அதே தவறு.. கோட்டை விடும் ஸ்டாலின், உதயநிதி.. குமுறும் திமுகவினர் -
ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ சரவணனை கட்சியில் இருந்து நீக்க வேண்டும்.. உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்!












Click it and Unblock the Notifications