Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செங்கல்லை காரில் எடுத்து வைத்த போது கூட இருந்தவர்களே குழம்பிப் போனார்கள் -உதயநிதி ஸ்டாலின் கடிதம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேர்தல் பிரச்சாரத்தின் போது செங்கல்லை காரில் எடுத்து வைக்குமாறு கூறி வாகனத்தை நிறுத்திய போது, தன்னுடன் இருந்தவர்கள் குழம்பிப் போனார்கள் என திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    கைராசியில் எனக்கு நம்பிக்கை இல்லை.. மரநடுவிழாவில் உதயநிதி ஸ்டான் பேச்சு - வீடியோ

    திமுக இளைஞரணிச் செயலாளராக பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து தனது நினைவலைகளை பகிர்ந்தபடி கடிதம் ஒன்று எழுதியிருக்கிறார்.

    அதன் விவரம் வருமாறு;

    இளைஞர் அணி

    இளைஞர் அணி

    கழக இளைஞர் அணி செயலாளராகப் பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்து நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன். முடிந்த இந்த மூன்று ஆண்டுகளை திரும்பிப் பார்க்கையில், என்னால் முடிந்த அளவுக்கு இளைஞர்களை சரியான பாதையில் ஒருங்கிணைத்து வருகிறேன் என்ற நம்பிக்கை உள்ளது. மக்களுக்காக, கழகத்துக்காக இன்னும் வெகுதூரம் செல்லவேண்டும் என்பதையும் இப்பயணம் உணர்த்துகிறது.

    அரசியல்-அரசு

    அரசியல்-அரசு


    அரசியலை-அரசை அருகில் இருந்து கவனிக்கும் வாய்ப்பை பெற்றிருந்தாலும், 2019 ஊராட்சி சபைக் கூட்டங்கள் - நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரங்களுக்காக தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் சுற்றிவரும்போதுதான் மக்களை, அவர்களின் உணர்வுகளை, தமிழகத்தின் புவியியல் தன்மையை இன்னும் நெருங்கிச் சென்று பார்க்கும் வாய்ப்பைப் பெற்றேன், மக்கள் என்னை தங்களில் ஒருவனாகவே ஏற்றுக்கொண்டனர் என்பதை இந்தப் பயணத்தின் மூலம் உணர்ந்தேன்.

    ஜூலை 4

    ஜூலை 4

    மக்களின் இந்த அன்பும், என் மீது கழக நிர்வாகிகள் வைத்த நம்பிக்கையும்தான் இளைஞர் அணி பொறுப்புக்கு என்னை கொண்டுவரலாம் என்ற எண்ணத்தைத் தலைமைக்கு ஏற்படுத்தியிருக்க வேண்டும். தான் வளர்த்தெடுத்த 'இளைஞர் அணி' என்ற பெருமைமிகுந்த, கடமை மிகுந்த அணிக்கு
    2019 ஜூலை 4-ம் தேதி தலைவர் அவர்கள் என்னை செயலாளர் ஆக அறிவித்தார்கள்.

    சவால்கள் என்னென்ன

    சவால்கள் என்னென்ன

    கழகம் அப்போது எதிர்க்கட்சி. 'உங்கள் முன் உள்ள சவால்கள் என்னென்ன' என்று பத்திரிகையாளர்கள் கேட்டனர். 'நிறைய சவால்கள். கூடவே விமர்சனங்களும். அனைத்துக்கும் என் செயல்பாடுகள் மூலம் பதிலளிப்பேன்" என்றேன். விமர்சனங்கள் உருவாக்கப்பட்டு, பரப்பப்பட்டன. ஆனால், அவை எவற்றுக்கும் நான் பதிலளிக்கவில்லை.

    உறுப்பினர் சேர்க்கை

    உறுப்பினர் சேர்க்கை

    அனைத்துத் தொகுதிகளிலும் உறுப்பினர் சேர்க்கையை விரைவுபடுத்துவது, அந்த உறுப்பினர்களில் இருந்து ஆர்வம் உள்ள தகுதியான இளைஞர்களை ஒன்றிய கிளை, மாநகர-நகர-பேரூர் வட்டங்களில் நிர்வாகிகளாக நியமிப்பது என்ற தெளிவான திட்டமிடலுடன் பணிகளைத் தொடங்கினோம். அதன்படி 2019-ம் ஆண்டு செப்டம்பரில் உறுப்பினர் சேர்க்கை முகாமை சென்னையில் தொடங்கினோம்.

    234 தொகுதிகளில்

    234 தொகுதிகளில்

    தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் தாய்க்கழக நிர்வாகிகளின் ஒருங்கிணைப்பில் உறுப்பினர் சேர்க்கைப் பணிகள் வேகமெடுத்தன. அதன்பயனாக தமிழகத்தின் 234 தொகுதிகளில் இருந்தும், சுமார் 25 லட்சம் உறுப்பினர்கள் அணியில் இணைந்தனர். அவர்கள் அனைவருக்கும் அன்பகத்தில் இருந்து, உறுப்பினர் உரிமைச் சீட்டு அச்சடிக்கப்பட்டு வழங்கப்பட்டன.

    3.5 லட்சம் பேர்

    3.5 லட்சம் பேர்

    அவர்களிடம் இருந்து சுமார் 3.5 லட்சம் பேர் கழகத்தின் 77 மாவட்டங்களில் இளைஞர் அணி நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டனர். தலைவர் அவர்களிடம் அனுமதி பெற்று, ஒவ்வொரு மாவட்டத்துக்குமான அணி நிர்வாகிகளின் பெயர்-முகவரி விவரங்கள் அடங்கிய 'முரசொலி சிறப்பிதழ்" அச்சடித்து வழங்கப்பட்டன. இளைஞர் அணியில் புதிதாக இணைந்த உறுப்பினர்கள்-நிர்வாகிகளின் உற்சாகமும் உழைப்பும் 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கழகத்துக்கு மிகப்பெரிய அளவில் வலுசேர்த்தது என்பதை யாரும் மறுக்க முடியாது.

    மாநாடு போல்

    மாநாடு போல்


    என் பிரச்சாரக் கூட்டங்கள் ஒவ்வொன்றும் மாநாடு போல் அமைந்ததற்கு இந்த புதிய உறுப்பினர்கள்-புதிய நிர்வாகிகளின் பங்கேற்பும் ஒரு காரணம்.
    உறுப்பினர் சேர்க்கையைத் தொடர்ந்து கரூர்-நாமக்கல்-ஈரோடு-திருப்பூர்-கோவை உள்ளிட்ட தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நீர்நிலைகளை தூர்வாரும் பணிகளைத் தொடங்கிவைத்தோம். அதுநாள் வரை அமைதியாக இருந்த ஆளும் அ.தி.மு.க அரசு, தூர்வாருவதற்கு அனுமதி மறுத்தது. ஆனால், நம் நிர்வாகிகள் போராடி அவற்றை தூர்வாரினர்.

    தீவிரவாதியை போல்

    தீவிரவாதியை போல்

    விடியலை நோக்கிய தலைவரின் குரலை தமிழகம் முழுவதும் எதிரொலிக்கச் செய்யும் வகையில் அமைந்தது சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம், திருச்சியில் திருமணம், கழகக் கொடியேற்றுதல் உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு முத்தமிழறிஞர் கலைஞரின் திருக்குவளை இல்லத்தில் இருந்து தேர்தல் பிரச்சாரம் கிளம்பலாம் என்பது எங்கள் திட்டம். ஆனால், ஏதோ தீவிரவாதியைப் பிடிப்பதுபோல் ஆயிரக்கணக்கான போலீசாரை நிற்கவைத்து பிரச்சாரத்தை தடுத்த நினைத்தது அன்றைய எடப்பாடி அரசு

     கைதாகி சிறை

    கைதாகி சிறை

    முதலில் திருக்குவளையில் கைது. அடுத்து நாகையில், அடுந்து குத்தாலந்தில். இப்படி தொடர் கைது, விடுதலை என்றே தொடர்ந்தது முதல் நாள்கைந்து நாள் பிரச்சாரம். அதாவது கைது செய்வோம் என்று மிரட்டினால் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு கிளம்பிவிடுவேன் என்று நினைத்தார்கள்.'ஒன்று பிரச்சாரத்துக்கு செல். இல்லையேல் கைதாகி சிறைக்குச் செல்' என்ற தலைவர் அவர்களின் உத்தரவின்படி, திட்டமிட்டபடி பிரச்சாரத்தைமுடித்துவிட்டுத்தான் சென்னை திரும்பினேன்.

    ஒரு செங்கல்

    ஒரு செங்கல்

    பிரச்சாரத்துக்கு இடையே வண்டியை நிறுத்தி ஒரு செங்கல்லை எடுத்து வாகனத்தில் வைக்கச் சொன்னேன். வண்டியில் இருப்பவர்களுக்கு குழப்பம். "அடிக்கல் நாட்டியதோடு நின்றுபோன மதுரை எய்ம்ஸ்'ஐ உணர்த்தும் வகையில் 'AIIMS' என்று அதில் எழுதி, 'மோடி அடிக்கல் நாட்டிய எய்ம்ஸை கையோடு எடுத்துவந்துவிட்டேன்' என்று அந்த செங்கல்லைத் தூக்கிக் காட்டியபோது கூட்டம் ஆர்ப்பரித்தது, மோடியின் பா.ஜ.சு அரசு தமிழகத்துக்குச் செய்தது இந்த ஒற்றைச் செங்கல் மட்டுமே என்பதை மக்கள் எளிதில் புரிந்துகொள்ள உதவியது அந்த செங்கல். அந்தச் செங்கல்லை தலைவர் அவர்களிடத்தில் ஒப்படைத்து வாழ்த்துபெற்றது வாழ்வில் மறக்கமுடியாத தருணம்.

    வெறும் 5 நாட்கள்

    வெறும் 5 நாட்கள்

    தேர்தலில் கழகம் வெற்றிபெற்று நம் தலைவர் அவர்கள் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி மக்களால்
    நாள் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டேன். தொகுதியில் வெறும் 5 நாட்கள் மட்டுமே பிரச்சாரம் செய்த என்னை பெருவாரியான வாக்கு
    வித்தியாசத்தில் வெற்றிபெறவைத்தனர் தொகுதி மக்கள். இந்த மூன்றாண்டு பணிகளில் சிலவற்றை மட்டுமே இங்கே நினைவுகூர்ந்துள்ளேன். எனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை என்னால் இயன்றவனர சிறப்பாகப் பயன்படுத்தியுள்ளேன் என்றே நம்புகிறேன்.

    வாழ்த்துங்கள்

    வாழ்த்துங்கள்


    கழகத்தின் நாற்றங்காலாக விளங்கும் இளைஞர் அணியினரான எங்களை மூத்த முன்னோடிகள், நிர்வாகிகள் வாழ்த்துங்கள், வழிநடத்துங்கள்.
    நாங்கள் கழகத்துக்காக உழைத்திட என்றும் தயாராக இருக்கிறோம். இளைஞர் அணி செயலாளர் என்ற கடமை மிகுந்த பொறுப்பை வழங்கிய தலைவர் உள்ளிட்ட அனைவருக்கும் மீண்டும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+