நல்லகண்ணுவிடம் நலம் விசாரித்த உதயநிதி ஸ்டாலின்... வீடு தேடிச்சென்றதால் நெகிழ்ந்த தோழர்கள்..!
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான நல்லகண்ணுவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.
சென்னை தியாகராயர் நகரில் உள்ள நல்லகண்ணுவின் இல்லத்திற்கு சென்ற உதயநிதி ஸ்டாலின், கொரோனா பரவல் காரணமாக கட்சியினரை தவிர்த்து தாம் மட்டும் சென்று நல்லகண்ணுவிடம் உரையாடினார். 10 நிமிடங்களுக்கும் குறைவான சந்திப்பு என்றால் கூட இருவரும் பரஸ்பர நலம் விசாரித்துக் கொண்டனர்.

மு.க.ஸ்டாலின் உடல்நலம் பற்றி உதயநிதியிடம் கேட்டறிந்த நல்லகண்ணு, கொரோனா காலத்தில் தகவல் தொழில்நுட்ப வசதி உதவியுடன் ஸ்டாலின் மேற்கொண்டு வரும் கட்சிப்பணிகளை பற்றியும் குறிப்பிட்டு பேசியிருக்கிறார். பதிலுக்கு உதயநிதியும் நல்லக்கண்ணுவின் உடல்நலம் பற்றி கேட்டறிந்ததோடு வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்த்து பாதுகாப்பாக இருந்துகொள்ளுமாறு கோரிக்கை விடுத்தார்.
வழக்கமாக கட்சியின் முன்னணி நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சி தலைவர்கள் யாரேனும் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் அவர்களை வீடு தேடிச்சென்று நலம் விசாரிப்பது மு.க.ஸ்டாலின் வழக்கம். இப்போது அதேபோல் அந்த வழக்கத்தை பின்பற்றத் தொடங்கியிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.
திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் செயல்பாடுகள் நாளுக்கு நாள் அரசியலில் அவர் முதிர்ச்சியும் பக்குவமும் அடைந்து வருவதை எடுத்துக்காட்டுவதாக கூறுகின்றனர் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் வட்டாரத்தினர்.
-
“திமுக - அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க சதி திட்டம் தீட்டியது யார்?” ஸ்டாலினுக்கு செங்கோட்டையன் கேள்வி -
பெப்பே காட்டிய விஜய்.. விஷத்தை கடைந்த ராகுல்.. திமுக, காங்கிரஸ் பந்தம் டோட்டலாக க்ளோஸ் ஆயிருச்சே -
தண்ணீர் பாட்டில் வீசுனாங்க.. ஆனால் இன்னைக்கு! ஓபிஎஸ் சொன்னதுமே ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன் -
வெளியே போறோம்..புரட்சி செய்யும் புதுக்கோட்டை மும்மூர்த்திகள்! சி.விஜயபாஸ்கருக்கு சிக்கல்! என்னாச்சு? -
ஆட்டம் போடாதீங்க! சிறுபான்மை மக்களும் நிரந்தரமாக குட்பை சொல்லிடுவாங்க.. திமுகவை எச்சரித்த காங்கிரஸ் -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
தவெகவுக்கு தாவும் திண்டுக்கல் திமுக கவுன்சிலர்.. அவங்க அப்பா பெரிய புள்ளியாச்சே! பிரம்மாண்ட ப்ளான்! -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
அண்ணா அறிவாலயத்தில் ஆட்டம் போட்ட மகளிரணி.. ரீல்ஸ் போடச் சொல்லும் ஸ்டாலின்! தவெகவைப் பார்த்து சூடு? -
ஆடிய ஆட்டமென்ன? குறுநில மன்னர்களாக அமைச்சர்கள்! அடங்காத மா.செ.க்கள்! ஆக்ஷனுக்கு தயாரான ஸ்டாலின்! -
அஸ்திவாரத்தை ஆட்டும் விஜய்.. அலற போகும் அறிவாலயம்! திமுக ‘மாஜி’ புள்ளிகளுக்கு செக்! களமிறங்கிய டீம்! -
"24 மணி நேரத்தில் 12 பாலியல் வன்கொடுமைகள்".. முதல்வரிடம் உதயநிதி சரமாரி கேள்வி












Click it and Unblock the Notifications