Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"செயல் தலைவர்".. உதயநிதிக்கு மிக முக்கிய அசைன்மென்ட்.. அள்ளிக்கொடுத்த ஸ்டாலின்.. திமுகவில் திக்திக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமைச்சர் பதவிக்கு இடையே கட்சிப்பணியை முழுமையாக கவனிக்கும்படி அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அறிவுறுத்தியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தமிழ்நாட்டில் ஆட்சியை கைப்பற்றி ஸ்டாலின் முதலமைச்சர் ஆனதும், கட்சி பணியை கவனிப்பதற்கு போதிய நேரம் ஒதுக்க முடியாது என்பதாலும், அறிவாலயத்தில் உள்ள முக்கிய நிர்வாகிகளை முழுமையாக நம்பமுடியாது என்பதாலும் தனது நண்பர் அன்பகம் கலையை அறிவாலயத்துக்குள் கொண்டுவந்தார் ஸ்டாலின்.

Udhayanidhi Stalin reportedly get an important role in the DMK party by CM Stalin

2021 ஜூலையில், திமுகவின் துணை அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார் கலை. தமிழ்நாடு முழுவதும் வருகிற கட்சி தொடர்பான புகார்களை கவனிக்க வும், அமைச்சர்கள், மா.செ.க்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டவர்கள் மீதான புகார்கள் இருப்பின் அதனை தனது கவனத்துக்கு கொண்டு வரவேண்டும் எனவும் கலைக்கு உத்தரவிட்டார் ஸ்டாலின்.

அதன்படி, கட்சி பஞ்சாயத்துகளை கவனித்து வந்தார் கலை. இந்தநிலையில், உதயநிதி அமைச்சரானதை அடுத்து, அரசு நிர்வாக ரீதியிலான முக்கிய விசயங்களை கவனிக்கும் பொறுப்பு உதயநிதிக்கு கொடுக்கப்பட்டது. அதற்கேற்ப சிறப்புத்திட்டங்கள் அமலாக்கத்துறை என்ற முக்கியமான துறை உதயநிதியிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சூழலில், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு முதல்வர் ஸ்டாலின் கவனித்து வரும் பல முக்கிய பொறுப்புகளையும், கட்சி ரீதியிலான பிரச்சனைகளை கூடுதலாக கவனிக்கும் படியும் உதயநிதியிடம் கேட்டுக்கொண்டார் ஸ்டாலின்.

அதன்படி, ஆட்சி நிர்வாகம், கட்சி நிர்வாகம் இரண்டையும் கவனித்து வந்தார் உதயநிதி. இதனால், உதயநிதி தங்கியிருக்கும் குறிஞ்சி இல்லத்தில் தினந்தோறும் அதிகாரிகளினுடனான ஆலோசனையும், கட்சி ரீதியிலான பஞ்சாயத்துகளும் நடந்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில்தான், தேர்தல் நெருங்கி வருவதால், கட்சி தொடர்பான முழுமையான பணிகளையும் பிரச்சனைகளையும் கவனிக்கவும் கூடுதல் கவனம் செலுத்த உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளாராம் ஸ்டாலின்.

இதனால், குறிஞ்சி இல்லத்தில் கட்சி பிரச்சனைகளை கவனிப்பதைவிட தினமும் அறிவாலயம் வந்து கவனிக்கச் சொல்லி ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் என்கிறது அறிவாலய தரப்பு. அதிகாரபூர்வமற்ற செயல் தலைவராக பணிகளை மேற்கொள்ளவிருகிக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

கூடுதல் பொறுப்பு: தேசிய அரசியலில் பாஜக கட்சி மற்றும் பாஜகவின் டாப் தலைவர்கள் திமுகவை அடுத்தடுத்து தாக்க தொடங்கி உள்ளனர். முக்கியமாக உதயநிதி ஸ்டாலின் தேசிய அரசியலில் கவனம் பெற்றுள்ள நிலையில்தான் அவருக்கு இந்த கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.

சமீபத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமுஎகச சார்பில் சென்னை காமராஜர் நேற்று முதல்நாள் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்றார். இந்த மாநாட்டில் பேசிய உதயநிதி ஸ்டாலின், இந்த மாநாட்டின் தலைப்பில் 'சனாதன எதிர்ப்பு மாநாடு' என்று போடாமல் 'சனாதன ஒழிப்பு மாநாடு' என்று நீங்கள் போட்டிருக்கிறீர்கள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது என்று கடுமையாக கூறினார்.

அதோடு, கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித் தான் இந்த சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம். சனாதனம் என்றால் என்ன? சனாதனம் என்கிற பெயரே சமஸ்கிருதத்தில் இருந்து வந்ததுதான். சனாதனம் சமத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரானது.

சனாதனம் என்பதன் அர்த்தம் என்ன? நிலையானது, அதாவது மாற்ற முடியாதது. யாரும் கேள்வி கேட்க முடியாது என்பதுதான் சனாதனத்திற்குரிய அர்த்தம். எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். எதுவுமே நிலையானது கிடையாது எல்லாவற்றுக்கும் நாம் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காக உருவான இயக்கம்தான் இந்த கம்யூனிஸ்ட் இயக்கமும், திராவிட முன்னேற்ற கழகமும் என்று பேசினார்.

சனாதனம் பற்றிய பேச்சு: சனாதனம் குறித்த அவரின் பேச்சு தேசிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. அவரின் பேச்சுக்கு எதிராக பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். பாஜகவினர் பலரும் அவரின் பேச்சால் அரண்டு போய் உள்ளனர். அவருக்கு ஆதரவாகவும் குரல்கள் வர தொடங்கி உள்ளன.

மோடி போட்ட ஆர்டர்: இந்த நிலையில்தான் அமைச்சர் உதயநிதிக்கு உரிய பதிலடி தர வேண்டும்' என்று பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். உதயநிதியின் சனாதன கருத்து குறித்து பதிலடி கொடுக்க மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கி உள்ளார். எந்த மதத்தையும் தவறாக பேசக்கூடாது; சனாதன தர்மத்தை யாரேனும் தவறாக பேசினால் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர்களுடன் பிரதமர் மோடி உரையாடியபோது சனாதனம் குறித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.

இப்படி உதயநிதி ஸ்டாலின் தேசிய அரசியலில் கவனம் பெற்றுள்ள நிலையில்தான் அவருக்கு இந்த கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+