பாஜகவிடமிருந்து கூட தப்பிக்கலாம்! ஆனால் முதல்வரிடமிருந்து தப்ப முடியாது! உதயநிதி ஸ்டாலின் உறுதி!
சென்னை: பாஜகவிடமிருந்து கூட எடப்பாடி பழனிசாமி தப்பிக்கலாம், ஆனால் முதல்வர் ஸ்டாலினிடமிருந்து தப்ப முடியாது என திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை மயிலாப்பூரில் நடைபெற்ற தமிழக பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் இதனைக் கூறினார்.
மேலும், தமிழகத்தில் ஓடும் அரசு நகரப்பேருந்துகளுக்கு பெண்கள் தான் உரிமையாளர்கள் எனவும் உதயநிதி தெரிவித்தார்.

பட்ஜெட் விளக்கம்
தமிழக பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டம் திமுக சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்றது. அந்த வகையில் சென்னை மயிலாப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தமிழகத்தில் என்னென்ன துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தை பட்டியலிட்டார். அதைத் தொடர்ந்து பேசிய அவர், எடப்பாடி பழனிசாமி பாஜகவிடமிருந்து கூட தப்பிக்கலாம் ஆனால் முதல்வர் ஸ்டாலினிடமிருந்து தப்ப முடியாது எனத் தெரிவித்தார்.

பெட்ரோல், டீசல்
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையிலும் பாஜகவுக்கு அதிமுக முட்டுக்கொடுத்து ஊடகங்களில் பேசி வருவதாக விமர்சித்தார். திமுகவை பொறுத்தவரை எந்த மொழிக்கும் எதிரான கட்சி கிடையாது என்றும் ஆனால் குறிப்பிட்ட ஒரு மொழியை திணிப்பதை மட்டும் ஏற்கமுடியாது எனவும் தெரிவித்தார். இந்தி தொடர்பாக அமித்ஷா பேசியதற்கு இளைய தலைமுறையினர் சமூக வலைதளங்கள் வாயிலாக பதிலடி கொடுத்துவிட்டதாக குறிப்பிட்டார்.

பெண்கள் உரிமையாளர்கள்
தமிழகத்தில் ஓடும் அரசு நகரப்பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லாமல் எங்கு வேண்டுமானாலும் ஏறி எங்கு வேண்டுமானாலும் இறங்கலாம் என்ற சூழல் உள்ளதாகவும் இதனால் பெண்கள் தான் அரசு நகரப்பேருந்துகளின் உரிமையாளர்கள் எனவும் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார். தமிழகத்தில் நடைபெறும் திமுக ஆட்சியை ஒட்டுமொத்த இந்தியாவும் பாராட்டி வருவதாக அவர் கூறினார்.

நல்ல செய்தி
தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் நேரடியாக கடிதம் கொடுத்திருப்பதாகவும் விரைவில் அது தொடர்பான நல்ல செய்தி நமக்கு கிடைக்கும் எனவும் உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார்.
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
"விஜய் கோட் போடுவது பிரச்சனை இல்லை... எல்லாத்தையும் கோட்டை விடுவது தான் பிரச்சனை!" உதயநிதி தாக்கு












Click it and Unblock the Notifications