மகளிர் உரிமை தொகை.. பறந்து வந்த எஸ்எம்எஸ் .. திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த உதயநிதி ஸ்டாலின்
சென்னை: மாதந்தோறும் மகளிர் உரிமை தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில், இவ்வளவு நாட்களாக இந்த துறை சார்பாக முதல்வர் ஸ்டாலின் தரப்பில் தான் மக்களுக்கு உரிமை தொகை எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டு வந்தது. இப்போது ஸ்டாலினுக்கு பதில் உதயநிதி ஸ்டாலின் பெயரில் எஸ்எம்எஸ்கள் வருகின்றன. வீடியோவுமே உதயநிதி பெயரில் வந்துள்ளது.
திராவிட முன்னேற்ற கழகம் கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அறிவித்த மாதம் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமை தொகையை கடந்த 2023 செப்டம்பர் மாதம் முதல் வழங்கி வருகிறது. கலைஞர் உரிமை தொகை என்ற பெயரில் ஒவ்வொரு மாதமும் குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் இணைந்து கொள்ள கடந்த ஆண்டே 1 கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் அரசுக்கு வரப்பெற்ற நிலையில், அவற்றில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டது. அந்த எண்ணிக்கை தற்போது 1 கோடியே 7 லட்சத்து 50 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இந்நிலையில் ஏராளமானோர் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்துள்ள நிலையில், அவர்களுக்கு ரேஷன் கார்டு கிடைத்து, கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிப்பார்கள்.
அப்படி விண்ணப்பிக்கும் போது இந்த எண்ணிக்கை வரும் ஆண்டில் பெரிய அளவில் அதிகரிக்கும்.. எனவே அதற்கு ஏற்ற வகையில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு 2024-25ம் நிதியாண்டில் 13720 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகையை வைத்து தற்போது 1 கோடியே 7 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு தாராளமான மாதம் மாதம் 1000 ரூபாய் வழங்கிவிட முடியும்.
அதுமட்டுமல்ல கூடுதலாக சுமார் 8 லட்சம் பேருக்கு மகளிர் உரிமை தொகையை அரசால் வழங்க முடியும். எனவே வரும் மாதத்தில் புதிதாக குடும்ப அட்டை பெற்றவர்கள் மற்றும் புதிதாக யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு வர வாய்ப்பு உள்ளது. லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் விரைவில் இதற்கான அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே மாதந்தோறும் வழங்கப்படும் மகளிர் உரிமை தொகைக்கு இத்தனை நாட்களாக முதல்வர் ஸ்டாலின் பெயரில் தான் எஸ்எம்எஸ்கள் வந்தன. இப்போது முதல்முறையாக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெயரில் வீடியோ உடன் எஸ்எம்எஸ் வந்துள்ளது. மகளிர் உரிமை தொகை நேற்று வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது குறித்து எஸ்எம்எஸ் வந்தது. அதில், நான் உங்கள் உதயநிதி ஸ்டாலின், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பிப்ரவரி மாதத்திற்கான தொகை ரூ.1000 உங்கள் கணக்கிற்கு வரவு வைக்கப்பட்டுள்ளது. இது மாதந்தோறும் தொடரும். இத்தொகையினை அத்தியாவசிய தேவைகளுக்குப் பயன்படுத்திப் பயனடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் உதயநிதி ஸ்டாலின் மகளிர் உரிமை தொகை குறித்து மக்களுடன் பேசும் வீடியோவும் வந்திருக்கிறது. விளையாட்டு துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின், சிறப்பு திட்டங்கள் செயலாக்க அமைச்சராகவும் தொடர்கிறார். சிறப்பு திட்டங்கள் செயலாக்கம் என்பது முதல்வர் ஸ்டாலின் கைவசம் உள்ள துறையாகும். கிட்டத்தட்ட அனைத்து துறைகளும் இந்த துறையின் கீழ் வரும்.. இந்த துறைக்கு உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக உள்ளதால், மகளிர் உரிமை தொகை எஸ்எம்எஸ் உதயநிதி பெயரில் வந்திருப்பதாக தெரிகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications