அரசு பங்களாவில் குடியேறும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.. தந்தையைப் போல் அதில் ஒரு சென்டிமெண்ட்
சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் தந்தை ஸ்டாலினுடன் வசித்து வரும் உதயநிதி, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அரசு பங்களாவில் குடியேற உள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் வசித்து வருகிறார். அவர் முதல்வருக்கு ஒதுக்கப்படும் பங்களாவில் வசிக்கவில்லை. மாறாக தான் வசிக்கும் சித்தரஞ்சன் சாலை வீட்டையே முதல்-அமைச்சரின் முகாம் அலுவலகமாக பயன்படுத்தி வருகிறார்.
இதனால் முதல்வர் ஸ்டாலினை காண்பதற்காக தினசரி ஏராளமான அரசு அதிகாரிகள், அரசியல் கட்சி தலைவர்கள் தினமும் வந்து செல்கின்றனர். இதனால் அந்த சாலை எப்போது பரபரப்பாகவே காணப்படும். வாகன நெருக்கடியும் அந்த சாலையில் அதிகமாக உள்ளது.

இட நெருக்கடி
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலினின் மகனான உதயநிதி தனது தந்தையுடனே வசித்து வருகிறார். அண்மையில் உதயநிதி அமைச்சரானார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றதில் இருந்து தினசரி அவரையும் அதிகாரிகள் தினசரி வந்து சந்திக்கிறார்கள்., கட்சி நிர்வாகிகள் தினமும் வந்து பார்க்கிறார்கள். எனவே அந்த பகுதியில் இட நெருக்கடி ஏற்படுகிறது.

உதயநிதி முடிவு
எனவே அமைச்சர்களுக்காக அரசு வழங்கும் பங்களாவில் குடியேற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். அதன்படி ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அரசு பங்களாவில் குடியேற போகிறாராம். அவருக்காக கிரீன்வேஸ் சாலையில் உள்ள குறிஞ்சி என்ற அரசு பங்களா புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இந்த பங்களாவில் இதுவரை சபாநாயகர் அப்பாவு வசித்து வந்தார். கடந்த ஜனவரியில் அவர் அந்த பங்களாவின் அருகில் உள்ள மலரகம் என்ற பங்களாவுக்கு மாறிச்சென்றார்.

அப்பா வசித்த பங்களா
தற்போது குறிஞ்சி பங்களா வேகமாக புதுப்பிக்கப்பட்டு வண்ணம் பூசப்பட்டு தயாராகி வருகிறது. அடுத்த மாதம் ஏப்ரலில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அந்த அரசு பங்களாவுக்கு குடும்பமாகச் சென்று குடியேற போகிறாராம். கடந்த தி.மு.க. ஆட்சியில் துணை முதல்-அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் இந்த குறிஞ்சி பங்களாவில்தான் குடியிருந்தார். இந்நிலையில் அப்பாவை போலவே உதயநிதி ஸ்டாலினும் குறிஞ்சி பங்களாவில் குடியேறப்போகிறார்.

விஐபிக்கள் பகுதி
சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கிரீன்வேஸ் சாலையில் உள்ள அரசு பங்களாக்களில் தான் அனைத்து அமைச்சரும் தங்கி உள்ளனர். உயர்நீதிமன்ற நீதிபதிகள், முக்கிய அரசு அதிகாரிகள், ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட பலர் தங்கி உள்ளனர். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும் இங்கு தான் வசித்து வருகிறார்.












Click it and Unblock the Notifications