இந்திய பன்முகத்தன்மை, கூட்டாட்சியை சிதைக்கும் பாசிஸ்ட்டுகள்- பாஜக மீது உதயநிதி கடும் பாய்ச்சல்!
சென்னை: இந்திய ஒன்றியத்தின் பன்முகத்தன்மை - கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும் பாசிஸ்ட்டுகளை வீட்டுக்கு அனுப்புவோம் என்று தந்தை பெரியார் பிறந்த நாளில் உறுதி ஏற்போம் என தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு உதயநிதி ஸ்டாலின் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: எண் 7, பவளக்காரத் தெருவில் போடப்பட்ட விதை, தி.மு.கழகம் எனும் ஆலமரமாக இன்று பவள விழா காண்கிறது.

பேரறிஞர் அண்ணாவால் ராபின்சன் பூங்காவில் தொடங்கி வைக்கப்பட்ட பயணம், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் வழிநடத்தப்பட்டு, மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையில் 75 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
ஆயிரமாயிரம் அடக்குமுறைகள் - எண்ணிலடங்கா போராட்டங்கள் கடந்து கடமை - கண்ணியம் - கட்டுப்பாட்டோடு தமிழ்நாடு காத்து நிற்கிறது நம் கழகம். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் - தமிழ் மக்களின் மேன்மைக்கும் கழகம் ஆற்றிய பணிகள் வரலாற்றின் பக்கங்களில் என்றென்றும் நிலைத்திருக்கும்.

இந்திய ஒன்றியத்தின் பன்முகத்தன்மை - கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும் பாசிஸ்ட்டுகளை, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் வீட்டுக்கு அனுப்ப கழகம் பிறந்த இந்நாளில் உறுதியேற்போம்! இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக சாத்திரம் - சம்பிரதாயமென மனிதனை மனிதனே இழிவு செய்த கொடுமைகளை உடைத்தெறிந்த ஈரோட்டு பூகம்பம். மானமும் - அறிவும் மனிதனுக்கு அழகு - சுயமரியாதை வாழ்வே சுக வாழ்வு என பகுத்தறிவு ஊட்டிய சமூக நீதி நாயகர், தந்தை பெரியாரின் 145 ஆவது பிறந்த நாளில் அவர்களது பணிகளை போற்றுவோம்.

சமூக நீதி நாளான இன்று தமிழ்நாட்டை பண்படுத்திய பெரியாரின் கொள்கைகளை, ஒட்டு மொத்த இந்திய ஒன்றியத்திற்கும் கொண்டு சேர்க்க அயராது உழைப்போம். வாழ்க பெரியார்! என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முன்னதாக தந்தை பெரியாரின் 145 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, சேலம் கோட்டை பகுதியில் அமைந்துள்ள பெரியார் திருவுருவச்சிலைக்கு இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications