எழுதி வைங்க.. ”உதயநிதி ஒரு நாள் ராஜேந்திர சோழனாக மாறுவார்” துரைமுருகன் சொன்னதும் கொடுத்த ரியாக்‌ஷன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்றைக்கு எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.. உதயநிதி ஸ்டாலின் ஒரு நாள் ராஜேந்திர சோழனாக மாறுவார் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறினார். மேலும் அவர் கூறுகையில், "தளபதி ஸ்டாலினை விட உதயநிதி அதிகளவு, பெயரையும் புகழையும் பெறுவார். எதை செய்தாலும் உதயநிதி ஸ்டாலின் சரியாகவே செய்கிறார்" என்று கூறினார்.

திமுகவின் 75வது ஆண்டையொட்டி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அறிவு திருவிழா நடந்தது. இதில் முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது துரைமுருகன் கூறியதாவது:-

udhayanidhi-stalin-will-one-day-become-a-modern-rajendra-cholan-durai-murugan

ஸ்டாலினை விட உதயநிதி புகழ் பெறுவார்

அண்ணா இந்த இயக்கத்தை ஆரம்பித்து, 1967-இல் ஆட்சியை பிடித்து அதை கலைஞர் கருணாநிதி கையில் ஒப்படைத்து போனார். கலைஞர் இதை மிக வேகமாக, சிறப்பாக நாட்டை ஆண்டார். இந்த இயக்கத்தை கட்டி காத்தார். அந்த தலைவர் மறையும் போது தளபதி ஸ்டாலினை கூப்பிட்டு, என் பாதையில் நட என அறிவுறுத்தி கட்சியை அவரிடம் ஒப்படைத்தார்.

என்னை பொறுத்தவரை நான் கலைஞருடன் 50 ஆண்டு காலம் இருந்தவன். ஆனால் இன்று நானே தளபதி ஸ்டாலின் பார்த்து வியக்கின்ற அளவுக்கு, போற்றுகிற அளவுக்கு சல்யூட் அடிக்கின்ற அளவுக்கு சிறப்பாக அவர் பணியை செய்துவருகிறார். இப்போது அதே இடத்துக்கு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இந்த இடத்துக்கு வருவார். தளபதி ஸ்டாலினை விட அதிகளவு, பெயரையும் புகழையும் பெறுபவராக உதயநிதி வருவார். நான் என்ன ஜோசியம் பார்த்து சொல்லவில்லை.

வார்த்தையை ஒரு காலத்தில் என்னிடம் கலைஞர் சொன்னார்.. அவன் என்னையை மிஞ்சிடுவான் என்று.. நான் இதனை இன்றைக்கு சொல்லவில்லை. காலம் காலமாக சொல்லி வருகிறேன். இந்த இயக்கத்தை அழியாமல் காக்க வேண்டும். வேறு எந்த இயக்கத்துக்கும் இப்படி எதிர்ப்புகள் கிடையாது. நம் கட்சிக்கு மட்டும் தான் எதையெடுத்தாலும் எதிர்ப்பு சொல்லிக்கொண்டு தான் இருக்கிறார்கள். இதையெல்லாம் கடந்து தான் நாம் கட்சி நடத்தி வருகிறோம்.

இன்றைக்கு எழுதி வைத்துக்கொள்ளுங்கள்

உதயநிதியை சொல்கிறேன்.. ராஜராஜ சோழனுக்கு பிறகு ராஜேந்திர சோழன். ராஜராஜ சோழன் மன்னனாக இருக்கும் போது அந்த பணியை ராஜேந்திர சோழன் ஏற்றுக்கொண்டான். ஆனால் ராஜராஜனுக்கு காந்தானூர் சாலை வரை தான் ஆட்சி இருந்தது. ஆனால் அவர் மகன் ராஜேந்திரன் பர்மா வரையில்லை.. தாய்லாந்து வரை தன்னுடைய ஆட்சிய நிறுவி காட்டியவன்.

இன்றைக்கு எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.. உதயநிதி ஒரு நாள் ராஜேந்திர சோழனாக மாறுவார் என்று.. என்னுடைய அரசியல் கணக்கு.. காரணம் தலைமைக்கே தெரியும். கிட்டத்தட்ட 60 ஆண்டு காலம் கலைஞர் குடும்பத்தோடு பயணித்து வருகிறேன். எதை செய்தாலும் உதயநிதி ஸ்டாலின் சரியாகவே செய்கிறார்.

தயாளு அண்ணி தான் காரணம்

நான் இன்றைக்கு சட்டமன்ற உறுப்பினராக இருக்கலாம். ஆனால் ஒரு காலத்தில் தலைவரும் நானும் வீட்டில் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தோம். அப்போ 1971 தேர்தல் நேரத்தில் என்னிடம் கேட்டார். எதாவது ஒரு தொகுதியில் நிற்க வேண்டியது தானே என்று கேட்டார்.. நான் வேண்டாம் என்று சொன்னேன்.

கை கழுவ வரும் போது அண்ணி தயாளு அம்மாள், ஏன்ப்பா நிற்க வேண்டியது தானே என்று சொன்னார்.. நான் என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்றேன்.. அப்போ தயாளு அண்ணி சொன்னாங்க.. நில்லுப்பா.. எல்லாம் அவர் கொடுப்பார்.. அப்படி நின்று தான் இன்றைக்கு நான்.. எம்.எல்.ஏ, அமைச்சர், கட்சியின் பொதுச்செயலாளர் என்று இருக்கிறேன். இதற்கு எல்லாம் அன்று அடித்தளம் போட்டவர் தயாளு அண்ணி தான்.. இவ்வாறு துரைமுருகன் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+