முதல் கூட்டம்.. முகம் முழுக்க புன்னகை.. அதிரடி உதயநிதி.. பரபரத்த அன்பாலயம்!
சென்னையில் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய முதல் கூட்டத்தை நடத்தினார்
Recommended Video
சென்னை: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய முதல் கூட்டத்தையே அசரடித்து விட்டார்.
நேற்று முன்தினம் உதயநிதி ஸ்டாலினுக்கு புதிய பொறுப்பு தரப்பட்டது. இதன் மீதான சர்ச்சை இன்னும் அடங்கவில்லை.
ஒரு பக்கம் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் இதை கொண்டாடி வருகிறார்கள் என்றால், உதயநிதி இப்போது கட்சியில் என்ன சாதனை செய்து படைத்துவிட்டார் என்பதற்காக இந்த பதவி என்று மறுபக்கம் சர்ச்சைகளும் எழுந்து வருகின்றன.

வரவேற்பு
புதிய பொறுப்பு தந்த அடுத்த செகண்டே அறிவாலயமே கோலாகலமாகி விட்டது. தமிழகம் முழுவதும் போஸ்டர்கள், பேனர்கள், கட்அவுட்கள் என கலகலத்தது. ஸ்டாலினுக்குகூட இப்படி ஒரு வரவேற்பு அன்றைக்கு இல்லை.

ஆலோசனை கூட்டம்
இதையெல்லாம் மனசார ஏற்றுக் கொண்டாலும், பதவியேற்ற மறுநாளே ஆலோசனை கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார் உதயநிதி. அதன்படி இன்று கூட்டம் அன்பகத்தில் நடந்தது. அனைத்து மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர். திமுகவின் புதிய இளைஞரணி செயலாளர்தான் இந்த கூட்டத்தை நடத்தினார்.

இளைஞரணி
உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிப்பது, இளைஞர் அணியின் செயல்பாடுகளை எப்படி பலப்படுத்தி கொள்வது, கட்சிக்கு கைகொடுக்கும் விதத்தில் இளைஞரணியின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தெல்லாம் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

சுற்றுப்பயணம்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, "இன்று நடந்தது வெறும் கலந்துரையாடல்தான். நிர்வாகிகள் ஒவ்வொருவரும் பல கருத்துக்களை தெரிவித்தனர். நிறைய எதிர்பார்ப்புகள் உள்ளது. அனைத்தையும் நிறைவேற்ற முயற்சிப்பேன். தேதி முடிவான பிறகு தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணத்தை தொடங்கி இளைஞரணியை பலப்படுத்துவேன்" என்றார்.

அன்பாலயம்
பதவியேற்ற 2-வது நாளே ஒரு கூட்டத்தை கூட்டி, அது சம்பந்தமாகவும் ஆலோசித்து, இந்த புதிய அரசியல்வாதி அதிரடி காட்டி அன்பாலயத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளதை நினைத்து திமுகவினர் புளகாங்கிதம் அடைந்துள்ளனர்.
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள்












Click it and Unblock the Notifications