உலகப்போரை உருவாக்கும் 6 ஏவுகணை! எங்க எல்லைக்குள் அமெரிக்க ஏவுகணை வந்துவிட்டது! கண்கள் சிவந்த புடின்
சென்னை: எங்கள் எல்லைக்குள் அமெரிக்காவின் ஏவுகணைகள் உக்ரைன் மூலம் ஏவப்பட்டு உள்ளன.. முதல்முறையாக எங்கள் நாட்டின் எல்லையில் அமெரிக்க ஏவுகணைகள் ஏவப்பட்டு உள்ளன என்று ரஷ்ய அதிபர் புடின் எச்சரித்து உள்ளார். உக்ரைனின் இந்த செயல் காரணமாக உலகப்போர் உருவாகும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
மாஸ்கோ வெளியிட்ட அறிக்கையின்படி, உக்ரைன் ரஷ்யாவின் பிரையன்ஸ்க் பகுதியில் தாக்குதல் நடத்தி உள்ளது. அமெரிக்கா வழங்கிய ஆறு ஏடிஏசிஎம்எஸ் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தி உள்ளது. இத்தனை காலம் உக்ரைன் தனது சொந்த ஏவுகணைகளை மட்டுமே ரஷ்யா மீது பயன்படுத்தியது. இப்போது அமெரிக்க நாட்டு ஏவுகணைகளை பயன்படுத்தி உள்ளது.

இதன் அர்த்தம் அமெரிக்கா ஒரு ஏவுகணையை உருவாக்கி. அதை உக்ரைன் மூலமாக ரஷ்யா ஏவி உள்ளது. இது கிட்டதட்ட மறைமுக போர் பிரகடனம். கிட்டத்தட்ட 6 ஏவுகணைகள் இப்படி ஏவப்பட்டு உள்ளன. இதன் மூலம் அமெரிக்கா கிட்டத்தட்ட ரஷ்யாவுடன் போருக்கு சென்றுவிட்டது என்றுதான் கூற வேண்டும். இந்த 6 ஏவுகணைகள் காரணமாக உலகப்போர் உருவாகும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
உக்ரேன் அரசு ரஷ்யாவின் எல்லைப் பகுதியில் மேற்கத்திய நாடுகளால் வழங்கப்பட்ட ஏவுகணைகளைப் பயன்படுத்தி முதல் தாக்குதலை நடத்தி உள்ளது. ரஷ்யா மீது உக்ரைன் நீண்ட தூரம் செல்ல கூடிய ஏவுகணைகளை பயன்படுத்தலாம்.. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு உலக நாடுகள் அனுப்பிய ஏவுகணைகளை பயன்படுத்தலாம் என்று அமெரிக்க அதிபர் பிடன் அனுமதி அளித்து இருந்தார்.
அமெரிக்க அதிபர் பிடன் அனுமதி அளித்த 24 மணி நேரத்தில் உக்ரேன் அரசு ரஷ்யாவின் எல்லைப் பகுதியில் மேற்கத்திய நாடுகளால் வழங்கப்பட்ட ஏவுகணைகளைப் பயன்படுத்தி முதல் தாக்குதலை நடத்தி உள்ளது. இதற்கு விரைவில் ரஷ்யா பதிலடி தரலாம். ஏனென்றால் நேட்டோ படையை சேர்ந்த ஒரு நாடு அனுப்பிய ஏவுகணையை.. உக்ரைன் ரஷ்யா மீது பயன்படுத்தி உள்ளது.
இது கிட்டத்தட்ட மறைமுகமாக நேட்டோ ரஷ்யா மீது நடத்திய தாக்குதலாக ரஷ்யா நினைக்கும் பட்சத்தில் நிலைமை கைமீறி போகும் சூழல் ஏற்பட்டு உள்ளது. இன்றுதான் அணு சக்தி இல்லாத நாடுகளுக்கு எதிராகவும் அணு ஆயுதங்களை பயன்படுத்த ரஷ்ய அதிபர் புடின் ஒப்புதல் அளித்தார். அதன்படி உக்ரைன் உள்ளிட்ட அணுசக்தி இல்லாத நாடுகளுக்கு எதிராகவும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டும்.. என்று புடின் ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் ரஷ்யாவின் கொள்கை மாற்றத்திற்கு அதிபர் புடின் ஒப்புதல் அளித்துள்ளார்.
புடின் உத்தரவு: இதற்கெல்லாம் காரணம் என்று பார்த்தால் ஒரு வகையில் அமெரிக்க அதிபர் ஜோ பிடன்தான். அமெரிக்க அதிபர் ஜோ பிடன் செய்த தவறு காரணமாக.. உலக அளவில் அணு ஆயுத போர் மூளும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. அதன்படி அமெரிக்காவின் நீண்ட தூர ஏவுகணைகளை ரஷ்யா மீது பயன்படுத்த உக்ரைனுக்கு அமெரிக்க அதிபர் பிடன் அனுமதி அளித்துள்ளார். அவரின் இந்த முடிவை ரஷ்ய அதிபர் புடின் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
ரஷ்ய அதிபர் புடினின் விமர்சனத்தில், அமெரிக்காவின் இந்த முடிவிற்கு உடனடியாக பதிலடி தரப்படும். அமெரிக்காவின் இந்த முடிவு நாங்கள் நேட்டோவுடன் நேரடி போரில் இருக்கிறோம் என்பதை உணர்த்துகிறது, என்று கூறி உள்ளார். அமெரிக்காவின் நீண்ட தூர ஏவுகணைகளை ரஷ்யா மீது பயன்படுத்த உக்ரைனுக்கு அனுமதி வழங்கினால் நாங்கள் நேட்டோவுடன் நேரடி போரில் இருக்கிறோம் என்று அர்த்தம் என்று புடின் ஏற்கனவே கூறி இருந்த நிலையில்தான் பிடன் இந்த முடிவை எடுத்துள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications