உளுந்தூர்பேட்டை ரோட்டில் என்னவாம்.. சல்லுனு போய்ட்டே இருக்கலாம் போலயே.. துள்ளி குதிக்கும் பாமக..வாவ்
சென்னை: உளுந்தூர்பேட்டை - சேலம் ரோடு படுபிஸியாகிவிட்டது.. விரைவில் ஒரு நல்ல செய்தி வரப்போவதாக எதிர்பார்க்கப்படுகிறது.
சேலம் - உளுந்தூர்பேட்டை இடையே தேசிய நெடுஞ்சாலையில் நாளுக்கு நாள் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்தபடியே வருகிறது..
இந்த சாலையில் 8 இடங்களில் அமைந்துள்ள புறவழிச்சாலைகளில், 4 வழிச்சாலை திடீரென இரு வழிச்சாலையாக மாறி விடும் நிலையில், அதை கவனித்து சமாளிக்க முடியாமல் அந்த சாலையில் பயணிப்பவர்கள் தடுமாறி விடுகிறார்கள்.. இதன்காரணமாகவே, அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன... கடந்த 2011 முதல் 2022 வரையிலான 11 வருடங்களில், 1036 பேர் உயிரிழந்திருக்கிறார்களாம்.

பாமக அதிரடி: இதையடுத்து, பாமக இந்த விவகாரத்தை கையில் எடுத்தது.. இந்த நெடுஞ்சாலையில் விபத்துகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, இதற்கு உடனடியாக முடிவு காண வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி முயற்சி எடுத்தார்.. இதற்காக கடந்த செப்டம்பர் 2-ம் தேதி மத்திய நெடுஞ்சாலை அமைச்சர் நிதின் கட்கரிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.
அதில், சேலம் - உளுந்தூர் தேசிய நெடுஞ்சாலை பாதையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படும் 8 இடங்களில் உள்ள இருவழி புறவழிச்சாலைகளையும் 4 வழிச்சாலைகளாக மாற்றும் பணிகளை உடனடியாக தொடங்க வேன்டும் என்று அன்புமணி கேட்டுக் கொண்டிருந்தார்.. இதையடுத்து கட்கரியிடமிருந்து, அன்புமணிக்கு நவம்பர் 2-ஆம் தேதியிட்ட பதில் கடிதம் வந்திருந்தது.
கடிதம்: அந்த கடிதத்தில், சேலம்- உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள 8 புறவழிச் சாலைகளில் முதற்கட்டமாக ஆறு புறவழிச் சாலைகள் அடுத்த வருடம் ஜூலை மாதத்திற்குள்ளாகவும், மீதமுள்ள இரு புறவழிச் சாலைகள் 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள்ளாகவும் 4 வழிச்சாலைகளாக விரிவுபடுத்தப்படும் என்று மத்திய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருந்தார்..

புறவழிச் சாலைகளை 4 வழிப்பாதையாக மாற்ற டாக்டர் ராமதாஸ் மேற்கொண்ட நடவடிக்கைகள் ஏராளம்.. அத்துடன், அன்புமணியும் இதையே வலியுறுத்தி மத்திய அரசுக்கு கடிதம் எழுதவும், அதற்கு சாதகமான பதில் கிடைத்திருந்தது பாமக தரப்பில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.. அதற்கேற்றவாறு, சாலை விரிவாக்க பணிகளும் தேசிய நெடுஞ்சாலையில் ஆரம்பமாகின. ஆனால், திட்டமிட்டபடி பணிகளை முடிக்க முடியவில்லை.. பணிகள் இன்னமும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது.
மகிழ்ச்சி: முத்தம்பட்டி, செல்லியம்பாளையம், உடையாப்பட்டி போன்ற 8 இடங்களிலும் இருவழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணிகள் முழுவீச்சில் நடந்து கொண்டிருக்கின்றன.. அதனால் எப்படியும் 4, 5 மாத காலத்திற்குள் மொத்த பணியும் முடிக்கப்படும் என்று சொல்லப்பட்டுள்ளதால், முன்பைவிட இபபோது அதிக வேகம் எடுத்துள்ளது.. இது லட்சக்கணக்கான வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications