Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நிலம் உள்ளோருக்கு அறிவிப்பு.. அனுமதியற்ற மனைப்பிரிவு வரன்முறைக்கு சான்ஸ்! தேதி வெளியிட்ட தமிழக அரசு

Subscribe to Oneindia Tamil

சென்னை: அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் இடம் வாங்கியவர்கள், ஜூலை 1 முதல் விண்ணப்பித்து, வரன்முறை செய்து கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.. அத்துடன், செய்திக்குறிப்பு ஒன்றையும் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறது. 20.10.2016-க்கு முன்பு அமைக்கப்பட்ட அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் தனி மனைகளை வரன்முறைப்படுத்த ஜூலை 1 முதல் விண்ணப்பிக்கலாம்' என்றும் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

தமிழகத்தில் அங்கீகாரம் பெறாத மனைப்பிரிவுகளை பதிவு செய்யக் கூடாது என்று கடந்த 2016-ல் பதிவுத் துறைக்கு சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டது.

unapproved land unauthorized subdivision

இதையடுத்து, அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளில் மனை வாங்கியவர்களின் நலனைக் காக்கவும், அந்த மனைப்பிரிவுகளுக்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகளை அளிக்கவும், கடந்த 2017-ம் ஆண்டு மனைகள் வரன்முறைப்படுத்தும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்கான காலக்கெடுவும் நிர்ணயிக்கப்பட்டு, அதன்படி விண்ணப்பங்கள் பெறப்பட்டன. குறிப்பிட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் மனைகள் வரன்முறைப்படுத்தப்படுகின்றன.

அனுமதியற்ற மனைப்பிரிவுகள்

இந்நிலையில், 20.10.2016-க்கு முன் அமைக்கப்பட்ட அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் தனி மனைகளை வரன்முறைப்படுத்த ஜூலை 1 முதல் விண்ணப்பிக்கலாம்' என்று நகர் ஊரமைப்பு இயக்குநர் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: "2025-2026-ம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையின்போது, "20.10.2016-க்கு முன் அமைக்கப்பட்ட அனுமதியற்ற மனைப்பிரிவுகளில், பதிவு செய்யப்பட்ட தனி மனைகளுக்கு எந்த காலக்கெடுவும் இல்லாமல் மனு பெறப்பட்டு வரன்முறை செய்து கொடுக்கப்படும்" என வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் அறிவித்தார்.

தனி மனை - அரசாணை

அதைத்தொடர்ந்து, அவ்வாறு தனி மனையாக வாங்கிய பொதுமக்கள், ஜூலை 1 முதல் onlineppa.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.

மேலும், அனுமதியற்ற மனைப்பிரிவு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் அமைக்கப்பட்ட மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த, ஏற்கெனவே வெளியிடப்பட்ட அரசாணைகளில் குறிப்பிடப்பட்ட விதிகளுக்கு உட்பட்டு எவ்வித மாற்றமும் இல்லாமல் 30.06.2026 வரை விண்ணப்பிக்க காலநீட்டிப்பு செய்து, 15.05.2025 அன்று வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையால் அரசாணை வெளியிடப்பட்டது.

அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகள்

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புவோர் ஜூலை 1 முதல் www.tcponline.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.

அதேபோல், மலையிடப் பகுதிகளில் உள்ள அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்துவதற்கான விண்ணப்பங்களை www.tnhillarealayoutreg.in என்ற இணையதளத்துக்குப் பதிலாக www.tcponline.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக 01.07.2025 முதல் 30.11.2025 வரை பதிவு செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பெயிரா தந்த விளக்கம்

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, பெயிரா எனப்படும்அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு, மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த ஆன்லைனில் விண்ணப்பிப்பது குறித்த விளக்கத்தை, பொதுமக்கள் நன்மை கருதி வெளியிட்டிருந்தது.

பெயிரா நிறுவனர் டாக்டர் ஹென்றி பதிவிட்டிருந்த அந்த அறிக்கையில், "வரன்முறை கோரி விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை, விதிகளுக்கு உட்பட்டு அடுத்த ஆண்டு ஜூன் 30வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.. இந்த திட்டத்தில் ஆன்லைனில் மட்டுமே மனை மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த விண்ணப்பிக்க முடியும்.

அனுமதியில்லாத மனைகள்

"நீங்கள் வசிக்கும் மனை, அல்லது நீங்கள் விற்க திட்டமிட்ட மனை, DTCP / CMDA அனுமதியில்லாததா? அப்படி என்றால், இது கடைசி வாய்ப்பு! தமிழ்நாடு அரசு, 2016-ம் ஆண்டு அல்லது அதற்கு முந்தைய காலத்தில் பதிவு செய்யப்பட்ட அனுமதியில்லாத மனைகள் மற்றும் மனைப்பிரிவுகள் ஆகியவற்றை சட்டபூர்வமாக வரன்முறை செய்ய ஜூன் 30, 2025 வரை காலநீட்டிப்பு வழங்கியுள்ளது.

மனை வாங்கிய பொதுமக்கள் - தற்போது அனுமதியில்லாத மனையில் வீடு கட்டியிருப்பவர்கள்

அபிவிருத்தியாளர்கள் - கடந்த ஆண்டுகளில் அனுமதி இல்லாமல் மனைகளைப் பிரித்து விற்றவர்கள்

விரைவில் விற்க திட்டமிடுபவர்கள் - அங்கீகாரம் இல்லாத மனையைச் சட்டபூர்வமாக மாற்றவேண்டிய கட்டாயத்தில் உள்ளவர்கள்.

எப்படி விண்ணப்பிப்பது

இதற்கான கால அவகாசம் ஜூன் 30, 2026 வரை மட்டுமே உள்ளது.. www.tnlayoutreg.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.. 20.10.2016 அல்லது அதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட மனைகள் மட்டுமே இதில் விண்ணப்பிக்க முடியும்..

வரன்முறை செய்யாத மனைகளாக இருந்தால், இதன்மூலம் பல்வேறு இடர்பாடுகள், சிக்கல்கள் உருவாகலாம்.. குறிப்பாக, வீட்டு மின், தண்ணீர் இணைப்பு பெற முடியாது, வங்கிக் கடன்கள் மறுக்கப்படும், சொத்து விற்பனை செய்வதில் தடைகள், எதிர்காலத்தில் அரசால் கைப்பற்றப்படும் அபாயம் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது.

கவனிக்க வேண்டிய விஷயங்கள்

1. உங்கள் மனையின் பதிவு தேதி மற்றும் பிரிவு விவரங்களை சரிபார்க்கவும்

2. மேற்கண்ட இணையதளத்தில் உங்கள் மனையை பதிவு செய்யவும்

3. தேவையான ஆவணங்களைத் தயார் செய்யவும்

4. சட்ட ஆலோசனை பெற்றால் சிறந்தது" என்று டாக்டர் ஹென்றி விளக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. .

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+