சூட்கேஸில் பச்சை குத்தப்பட்ட ஹரியானா பெண்.. உப்பி கிடந்த உடம்பை கண்டு ஆடிப்போன மக்கள்
சென்னை: ஹரியானாவில் பேருந்து நிலையம் அருகே கிடந்த சூட்கேஸில் பெண் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் கடந்த மாதம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.. இறந்தவர் ஹரியானாவை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி என்று தெரிந்ததும் அந்த மாநில அரசியல் வட்டாரங்களிலும் பரபரப்பு தொற்றிக் கொண்டது.. இதோ இப்போது மீண்டும் ஒரு பரபரப்பு சம்பவம் ஹரியானாவில் நடந்துள்ளது. இது தொடர்பான விசாரணையையும் ஹரியானா போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.
ஹரியானா மாநிலம் கைத்தல் மாவட்டத்தில் உள்ளது ஷீலா கேரா என்ற கிராமம்.. இந்த கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் சிலர், நேற்று மதியம் 3 மணி அளவில் நாய்கள் ஒரு கால்வாயில் கிடந்த சூட்கேஸை இழுத்து சென்றதை பார்த்தனர்..

நீல கலர் சூட்கேஸில் இளம்பெண்
அந்த சூட்கேஸுக்குள் சடலம் ஒன்று கிடப்பதை கண்டு அனைவருமே அதிர்ச்சி அடைந்தனர்.. இதனால் உடனடியாக மகளிர் போலீசுக்கு தகவல் தந்தார்கள்.. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நீல நிற சூட்கேஸை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்..
அந்த சூட்கேஸில் பெண்ணின் சடலம் கிடந்தது. 28 முதல் 30 வயது மதிப்புடைய அப்பெண்ணின் கழுத்தில் கயிற்றால் இறுக்கப்பட்டதற்கான அடையாளங்கள் இருக்கிறதாம்.. எனவே, கயிற்றால் கழுத்தில் இறுக்கி அவரை கொன்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகிறார்கள்.
பச்சை குத்தப்பட்ட பெயர்
அதுமட்டுமல்ல, பெண்ணை கொலை செய்து, பல நாட்கள் ஆகியிருக்கும் என்கிறார்கள்.. காரணம், நீண்ட நாட்கள் தண்ணீரில் சூட்கேஸ் ஊறியிருந்ததால், பெண்ணின் உடல் உப்பிய நிலையில் காணப்படுகிறதாம்.. எனவே, இதுதொடர்பான விசாரணையை மேற்கொள்வது போலீசாருக்கு சவாலாகவே உள்ளதாக கூறுகிறார்கள்.
ஆனால், பெண்ணின் கையில் பச்சை குத்தப்பட்டுள்ளது.. அந்த அடையாளத்தையே ஆதாரமாக வைத்து, அடுத்தக்கட்ட விசாரணையை போலீசார் துவங்கி உள்ளனர்.. மேற்கண்ட அடையாளங்களை எல்லாம், சுற்றுவட்டாரத்தில் உள்ள காவல் நிலையங்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர்..
ஒரே ஒரு க்ளூ
இளம் பெண்ணின் சடலம் தற்போது அரசு மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.. தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் தடயங்கள் ஏதேனும் இருக்கிறதா? என்ற ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்கள்..
ஆனால், இதுவரை அந்த பெண் யார்? எப்போது, எப்படி, யார் அவரை கொன்றார்கள் என்பதற்கான க்ளூ எதுவுமே கிடைக்கவில்லை.. இப்போதைக்கு பெண்ணின் கையில் உள்ள டாட்டூ என்ற ஒரே ஒரு முக்கிய துப்பு மட்டுமே காவல்துறையிடம் உள்ளதால், அதை வைத்து விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. தடவியல் நிபுணர்களின் ஆய்வு நடந்து கொண்டிருக்கிறது.
காங்கிரஸ் பிரமுகர்
ஏற்கனவே இப்படித்தான் கடந்த மார்ச் மாதமும் சூட்கேஸில் பெண்ணின் சடலம் இதே ஹரியானா மாநிலத்தில் கண்டெடுக்கப்பட்டது.. ஹிமானி நர்வால் என்ற 22 வயது காங்கிரஸ் பெண் தொண்டரின் உடல், சாம்ப்ளா பஸ் ஸ்டாண்டு மேம்பாலம் அருகில் சூட்கேஸில் கிடந்ததை கண்டு, மக்கள் உறைந்து போனார்கள்..
அது போலவே மீண்டும் ஒரு சூட்கேஸ் சம்பவம் ஹரியானாவில் நடந்துள்ளது பெரும் அதிர்வலையை உண்டுபண்ணி வருகிறது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications