தோசைக் கல்லில் ஏன் தண்ணீர் தெளிக்கிறோம் தெரியுமா? மொறு மொறுனு தோசைக்கு ரகசியத்தை சொன்ன மெட்ராஸ் ஐஐடி
சென்னை: தோசை என்றால் யாருக்குதான் பிடிக்காது.. அதிலும் மொறு மொறு தோசைக்கு அடிமையாகாதவர்களே கிடையாது.. தோசையை சுட்டு எடுத்தால் அதன் வெளிப்புறம் மொறுமொறுப்பாகவும், உட்புறம் மென்மையாகவும் காணப்படும். இப்படியான கிரிஸ்பி தோசைக்கு பின்னால் விஞ்ஞானம் இருக்கிறதென்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், இப்படியான அறிவியலை நம்முடைய IIT மெட்ராஸ் ஆய்வாளர்கள் விளக்கியுள்ளனர்.
தென்னிந்திய உணவு லிஸ்ட்டை எடுத்துக் கொண்டால், அதில் டாப்பில் உள்ளது, "தோசையம்மா தோசை, இது அம்மா சுட்ட தோசை"யாகத்தான் இருக்க முடியும்..

தோசைக்கல்லில் தண்ணீர்
மொறு மொறு தோசைக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அடிமை என்றாலும், எல்லாருக்குமே தோசை மொறுமொறுவென வருவதில்லை.. தோசைக்கல்லிலிருந்து தோசையை புரட்டிப்போடும்போது அது உடைந்துவிடக்கூடும்.. அல்லது பல துண்டுகளாக கிழிந்து வரக்கூடும். அல்லது கருகி அப்பளமாய் நொறுங்கிவிடக்கூடும். அந்தவகையில் மொறு மொறு தோசையை சுடுவது என்பதே, ஒருவித தனி கலை என்றே சொல்லலாம்.
இந்த கலையிலும் ஒரு அறிவியல் உள்ளதாக விஞ்ஞானிகள் கூறுவது வியப்பை கூட்டி வருகிறது.. இதுகுறித்து IIT மெட்ராஸ் ஆய்வாளர்கள் சில தகவல்களை வெளிப்படுத்தி உள்ளனர்.
லீடென்ஃப்ரோஸ்ட் விளைவுதான் ரகசியம்
இதுகுறித்து ஐஐடி மெட்ராஸைச் சேர்ந்த பேராசிரியர் மகேஷ் பஞ்சாக்னுலா சொல்லும்போது, "தோசை மாவை ஊற்றும் முன்பு, தோசை கல் சூடாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.. அதற்காகத்தான் வீட்டில் அம்மாக்கள் தோசைக்கல்லில் தண்ணீரை தெளித்து பார்ப்பார்கள்..
தோசைக்கல்லில் தண்ணீர் தெளித்ததுமே, அந்த நீர் தோசை கல்லுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளாமல், ஒரு நீராவி குமிழியாக மாறி மிதப்பதை காணலாம்.. இதன்மூலம் மெல்லிய நீராவி தடுப்பு உருவாகிவிடும். இப்போது மாவு ஊற்றினால், அது நேரடியாக தோசைக்கல்லில் ஒட்டாமல் மிகவும் மெல்லிய அடுக்காக சீராகப் பரவுவதற்கு உதவுகிறது. இதுவே தோசையின் வெளிப்புறம் கிரிஸ்பியாகவும், உள்புறம் மென்மையாகவும் இருக்க முக்கிய காரணம். இதற்கு Leidenfrost Effect (லீடென்ஃப்ரோஸ்ட்) என்று பெயர்.
ஒருவேளை, தோசை கல் போதுமான அளவுக்கு சூடாகாவிட்டால், மாவு சரியாக பரவாது.. இதனால் தோசை மென்மையாகவும் இருக்காது, கிரிஸ்பியாகவும் இருக்காது.. அதற்காக அதிக வெப்பத்திலும் தோசையை வைத்துவிடக்கூடாது. அப்படி வைத்தால் தோசை கருகிவிடும்.. எனவே சரியான வெப்பத்தில் அதாவது தோசைக் கல் சுமார் 160°C வெப்பநிலையில் உள்ளதா என்பதை கண்டறிந்து தோசை ஊற்றுவதுதான், மொறு மொறு தோசைக்கான சீக்ரெட் ஆகும்..
இதுதான் அந்த சீக்ரெட்
மாவு இப்படி மெல்லியதாக பரவுவதால், கல்லின் அதிக வெப்பம் காரணமாக அதிலுள்ளஈரப்பதம் விரைவாக ஆவியாகி, வெளிப்பகுதி விரைவில் காய்ந்துவிடுகிறது.. இதுதான் நமக்கு மொறுமொறுப்பாக மாறுகிறது.
அதேசமயம் மாவில் உள்ள நீராவி, உட்புறத்திலுள்ள லேசான தடிமன் காரணமாக, மையப்பகுதி முழுமையாகக் காய்ந்து விடாமல் மென்மையாக நமக்கு கிடைக்கிறது. எனவே நாம் சாதாரண உணவாக கருதும் தோசையின் சுவை, அமைப்பு போன்றவற்றுக்கு பின்னால் லீடென்ஃப்ரோஸ்ட் விளைவு என்ற நுட்பமான அறிவியல் காரணம் உள்ளது: என்கிறார் IIT மெட்ராஸ் விஞ்ஞானிகள்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications