இனி சொத்து வாங்கலாமா? மொத்தமாகப் பறிபோகும் முதலீடு? பட்ஜெட் வைத்த ஆப்பு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசின் 2024 ஆண்டிற்காக பட்ஜெட் நீண்ட கால சேமிப்பை மனதில் வைத்து முதலீடு செய்தவர்கள் தலையில் இடியை இறக்கியுள்ளது என்று பங்குச் சந்தை நிபுணர் சுந்தர் ஒரு உண்மையைப் போட்டு உடைத்துள்ளார்.

ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாதம் மத்திய பட்ஜெட் வழக்கமாகத் தாக்கல் செய்யப்படும். ஆனால் இம்முறை மக்களவைத் தேர்தல் காரணமாக , கடந்த பிப்ரவரி மாதமே ஒரு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இப்போது பிரதமர் மோடி தலைமையில் அரசு 3ஆவது முறையாக மத்திய அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து முழு பட்ஜெட்டையும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 23ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

Nirmala Sitharaman

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயரே இல்லை என்றும், தங்களின் மாநிலத்தை மத்திய அரசு முற்றாகப் புறக்கணித்துள்ளது என்று திமுக எம்பிக்கள் மக்களவையில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆந்திராவுக்கும் பீகாருக்கும் அதிக நிதியை மத்திய பட்ஜெட் ஒதுக்கியுள்ளதை தாங்கள் எதிர்க்கவில்லை, ஆனால், முற்றிலுமாக கேரளா, தமிழ்நாடு, தெலங்கானா, கர்நாடகா ஆகிய தென் மாநிலங்களை மத்திய அரசு புறக்கணித்துள்ளது என்று திமுக எம்பிக்கள் குரல் எழுப்பிவருகின்றனர்.

இந்நிலையில் இந்தப் பட்ஜெட் மாத ஊதியம் பெறுபவர்களை மட்டும் இல்லை, வருமானவரி கணக்காக வரிச்சலுகை வேண்டி நீண்ட கால முதலீட்டில் பணம் போட்டவர்களையும் கடுமையாகப் பாதித்துள்ளது என்று ஒரு பெரிய உண்மையைப் போட்டு உடைத்துள்ளார் பங்குச் சந்தை நிபுணர் பி.ஆர். சுந்தர். அவர் இது குறித்த சந்தேகங்களை விளக்கும் விதத்தில் ஒரு பேட்டியை அளித்துள்ளார்.

அதில் அவர், "என்னைப் பொறுத்தவரை மத்திய அரசின் பட்ஜெட் மிகவும் ஏமாற்றத்தை அளிக்கிறது என்றுதான் சொல்வேன். நான் மட்டுமல்ல; எந்தத் தரப்பு மக்களும் இந்தப் பட்ஜெட் சிறப்பானது என்று சொல்லவில்லை. சொல்ல வாய்ப்பும் இல்லை. சில பட்ஜெட்களில் சிலதை கொடுத்திருக்கிறார்கள். சிலதை எடுத்திருக்கிறார்கள். ஆனால், இந்த 2024 பட்ஜெட்டில் கொடுத்ததைவிட எடுத்ததுதான் அதிகம்.

Nirmala Sitharaman

மாதச் சம்பளம் பெறுபவர்களுக்காக 25 ஆயிரம் ரூபாய் கூட்டி இருக்கிறார்கள். அதைத்தவிரப் பெரிதாக எந்தச் சலுகையும் அளிக்கப்படவில்லை. விலைவாசி ஏற்றம் அதிமகாகி இருக்கிறது. இதர செலவுகள் உயர்ந்துள்ளன. அப்படிப் பார்த்தால் பட்ஜெட்டில் அளிக்கப்பட்ட சலுகை என்பது சிறிய பலனைத்தான் வழங்கும். பழைய வரி விதிப்பு முறையைப் பயன்படுத்தலாமா? புதிய நடைமுறையைப் பயன்படுத்தலாமா? என்பதில் சிலரிடம் குழப்பம் உள்ளது.

எல்லோரும் ஒரே வரி முறையைப் பயன்படுத்த முடியாது. அவர்களின் வருமானத்தைப் பொறுத்தே எது தேர்வு செய்யலாம் என்று முடிவெடுக்க வேண்டும். அதைத்தரப்புக்கும் ஒன்றே வழிமுறை போதும் என்றால், ஒரே வரி விதிப்பு நடைமுறையே இருந்திருக்குமே? பிறகு எதற்கு புதியதாக ஒன்றை அரசு கொண்டுவர வேண்டும். ஆகவே, வருமானத்திற்கு ஏற்ப வரி விதிப்பு முறையை தேர்வு செய்வதே நல்லது.

அடுத்த எதிர்கால பாதுகாப்பு வேண்டிப் பல நீண்ட காலத்திற்காக முதலீட்டைச் செய்துள்ளனர். அந்தத் தரப்பினருக்கு 2024 பட்ஜெட் பெரிய ஏமாற்றத்தை மட்டும் அல்ல, இழப்பையும் கொடுத்துள்ளது. முதலீடு என்றாலே 3 விதங்களில்தான் செய்வார்கள். முதலில் ரியல் எஸ்டேட். 2வது தங்கம். 3வது பங்குச் சந்தை. போன பட்ஜெட் வரை Long-Term Capital Gains என்பது 3 ஆண்டுகள் வரை என்று இருந்தது. அதை 2 ஆண்டுகள் எனக் குறைத்திருக்கிறார்கள்.

இதற்கு முன்பு 20% வரி விதிப்பு இருந்தது. இதை 12.5% எனக் குறைத்திருக்கிறார்கள். இவை ஒரு நல்ல அம்சம். இதில் மிகப்பெரிய அடையையும் கொடுத்திருக்கிறார்கள். 3 ஆண்டுகள் வரை முன்பு ஒரு சொத்தை வைத்திருந்தால் Induction benefits வழங்கிவிட்டு, அதன்பின்னர் வரும் லாபத்திற்கு மட்டும்தான் வரி விதிப்பார்கள். இந்த பட்ஜெட்டில் Induction benefits நீக்கிவிட்டார்கள்.

இதைக் கொஞ்சம் விளக்கமாகச் சொல்கிறேன். ஒரு 20 ஆண்டுகள் முன்னால் 10 லட்ச ரூபாய்க்கு ஒரு சொத்தை வாங்கி இருக்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அது 25 ஆண்டுகள் கழித்து தோராயமாக 40 லட்ச ரூபாய்க்கு விற்கிறோம் என்றால், Inflation கணக்கிடுவார்கள். அதாவது பணவீக்கம். ஒரு செய்த முதலீடு 10 லட்சம் 40 லட்சமாக உயரும்போது அதன் பணவீக்கத்தைக் கணக்கிட்டு வரி விதிக்கமாட்டார்கள். ஆனால், இப்போது 10 லட்சத்திற்கு வாங்கி 40 லட்சத்திற்கு விற்றால் லாபமாக வந்த 30 லட்சத்திற்கு 12.5% வரி செலுத்தியாக வேண்டும்.

அப்படிப் பார்த்தால் நீண்ட காலத்தை மனதில் கொண்டு சொத்தில் முதலீடு செய்தவர்களுக்கு இந்த பட்ஜெட் பெரிய அடியைக் கொடுத்துள்ளது. இது சொத்து முதலீடு மட்டும் அல்ல. தங்க முதலீடு, பங்குச் சந்தை முதலீடு என அனைத்திற்கும் Induction benefits இனிமேல் கிடையாது. இதில் தங்கமாக வாங்கியவர்கள் கொஞ்சம் தப்பித்தார்கள். பங்குச் சந்தையில் தங்க முதலீடு செய்தவர்கள் அதிகம் பாதிக்கப்பட்ட வேண்டி நிலை உருவாகியுள்ளது.

பங்குச் சந்தை முதலீட்டில் Future மற்றும் Option என்று 2 முறைகள் உள்ளன. அதில் Future மட்டும் கடந்த வருடம் மத்திய அரசு Securities transaction tax மூலம் மட்டுமே 18 ஆயிரம் கோடி சம்பாதித்துள்ளது. இப்போது 60% வரி உயர்த்தப்பட்டுள்ளது. அப்படிப் பார்த்தால் இதன்மூலம் அரசுக்கு அடுத்த ஆண்டு 25 ஆயிரம் கோடி கிடைத்துவிடும்" என்கிறார்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+