வருமான வரி தாக்கல் செய்பவர்களுக்கு புதிய சட்டம்! தவறு செய்தால் 100% அபராதம்! நிர்மலா மேஜர் அறிவிப்பு
சென்னை: புதிய வருமான வரிச்சட்டங்கள் ஏப்.,1 முதல் அமல்படுத்தப்படும், வருமான வரி தாக்கல் செய்வதற்கான நடைமுறை எளிமையானதாக மாற்றப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். வருமானத்தை மறைத்தால் 100 சதவீதம் அபராதம் விதிக்கப்படும்,புதிய வருமான வரிச் சட்டத்தின் கீழ் வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கு கடந்த காலங்களில் இருந்ததைவிட அதிக அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதில் குறைவான முறைகேடுகள் கிரிமினல் குற்றமாக கருதப்படாது என்று நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். வாகன விபத்துக்கான இழப்பீட்டிற்கு வரி விலக்கு வழங்கப்படும். விபத்து கால காப்பீடுகளுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
வருமான வரியில் மாற்றம்
ITR-1 மற்றும் ITR-2 படிவங்களைக் கொண்டவர்கள் ஜூலை 31 வரை வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யலாம். சிறு கட்டணம் செலுத்தி வரி வருமானக் கணக்குகளைத் திருத்துவதற்கு கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தனிநபர்கள் போல் நிறுவனங்களுக்கும் வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசரம் நீட்டிக்கப்படுகிறது.

அதேபோல் இதுவரை பல்வேறு குழப்பங்களுக்கு உள்ளாகி வந்த 'மேன்பவர்' சேவைகளுக்கான கட்டணம், இனி வரி விதிப்பிற்காக "ஒப்பந்தக்காரர்களுக்கான கொடுப்பனவு" (Payment to Contractors) என்ற பிரிவின் கீழ் கொண்டு வரப்பட உள்ளது. TDS விகிதம்: இதன்படி, இச்சேவைகளுக்கான கட்டணத்தில் 1% அல்லது 2% என்ற விகிதத்தில் வரி (TDS) பிடித்தம் செய்யப்படும்.
குறைந்தபட்ச வரி பிடித்த சான்றிதழ் (Lower TDS Certificate):
குறைந்த வருமானம் கொண்ட சிறு வரிதாரர்கள் (Small Taxpayers), தங்களுடைய வருமானத்திற்கு வரி பிடித்தம் தேவையில்லை அல்லது குறைவாக இருக்க வேண்டும் என நினைத்தால், இனி வருமான வரி அதிகாரியிடம் (Assessing Officer) நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை.
இதற்குப் பதிலாக, விதிகளின் அடிப்படையில் இயங்கும் ஒரு தானியங்கி ஆன்லைன் முறை (Rule-based Automated Process) அறிமுகப்படுத்தப்படும். இதன் மூலம் மிக எளிதாக 'Lower or NIL deduction certificate'-ஐப் பெற முடியும்.
இதன் நன்மைகள் என்ன?
நிர்வாகச் சிக்கல்கள் குறையும்: வரி அதிகாரிகளைச் சந்தித்து விண்ணப்பம் தாக்கல் செய்யும் நடைமுறை நீக்கப்படுவதால், கால விரயம் தவிர்க்கப்படும்.
வெளிப்படைத்தன்மை: தானியங்கி முறை என்பதால், தகுதியுள்ளவர்களுக்கு உடனுக்குடன் சான்றிதழ் கிடைக்கும்.
தொழில் புரிவது எளிதாகும்: சிறு நிறுவனங்கள் மற்றும் மனிதவள முகமைகளுக்கு (Manpower Agencies) இது பெரும் நிம்மதியை அளிக்கும்.
மத்திய பட்ஜெட்
மத்திய பட்ஜெட் உரையை தாக்கல் செய்து உரையாடிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், புனிதமான தைப்பூச நாளிலும், ரவி தாஸ் ஜெயந்தி நாளிலும் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறேன். தன்னிறைவு இந்தியா என்ற இலக்கை நோக்கி நாம் வேகமாக முன்னேறி வருகிறோம். பணவீக்கத்தை முறையாக கட்டுப்படுத்தியதால் நாட்டின் வளர்ச்சி மேம்பட்டுள்ளது . புதிய தொழில்நுட்பங்கள் மூலம் உற்பத்தி துறை பலமடங்கு வளர்ச்சி. கர்த்தவ்ய பவனில் தயாரித்த முதல் பட்ஜெட் இதுவாகும்
மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருக்கும் நாட்டு மக்களுக்கு நன்றிகள் . அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்ற வகையில் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது. இளைஞர்களின் கரங்களை வலுப்படுத்தும் வகையில் இந்த பட்ஜெட் இருக்கும் . பல்வேறு நோய்களுக்கன மருந்தகள் இந்தியாவில் குறைந்த விலையில் கிடைக்கிறது.
தொடர் வளர்ச்சி, உற்பத்தி அதிகரிப்பு, பொருளாதார மேம்பாட்டை அடிப்படையாக வைத்து பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. பயோ பார்மா சக்தி திட்டம் கொண்டு வரப்படும். இதற்காக ரூ.10,000 கோடியில் பயோ பார்மா சக்தி திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. செமி கண்டக்டர் துறைக்கு ரூ.40,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
உள்கட்டமைப்பு எந்திரங்களின் உற்பத்தி ஆலைகள் அமைக்க ரூ.10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஜவுளி துறையில் தன்னிறைவு பெறுவதற்கு புதிய திட்டம் அறிவிக்கப்படுகிறது. மகாத்மா காந்தி ஸ்வராஜ் திட்டம் என்ற பெயரில் 4 மெகா ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications