சென்னையில் மெட்ரோ போட்டோம்.. சொன்ன மோடி.. 2 வருடமாக சல்லி காசு தராத மத்திய அரசு.. போட்டுடைத்த திமுக
சென்னை: சென்னை மெட்ரோ 2ம் கட்ட பணிகளுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியதாக நேற்று சென்னை ரோட் ஷோவிற்கு இடையே பிரதமர் மோடி ட்விட் செய்து இருந்தார். இந்த நிலையில் மெட்ரோ இரண்டாம் கட்ட பணிகளுக்கு மத்திய அரசு 2 வருடமாக பணமே தரவில்லை என்று திமுக போட்டுடைத்துள்ளது.
நேற்று பாண்டி பஸாரில் ஊர்வலம் சென்ற பிரதமர் மோடி, வந்தே பாரத் விரைவு ரயில் மூலம் சென்னை-கோவை மற்றும் சென்னை-மைசூரு இடையேயான இணைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் பணிபுரியும் தொழில் வல்லுநர்களுக்கு உதவும் வகையில், சென்னை மெட்ரோ நெட்வொர்க் விரிவாக்கம் செய்யப்படுகிறது. சென்னை-பெங்களூரு விரைவுச்சாலை போன்ற முக்கிய சாலைத் திட்டங்கள் மற்றும் தற்போதுள்ள மற்ற சாலைத் திட்டங்களின் விரிவாக்கம் வணிகம் மற்றும் இணைப்பை மேம்படுத்தும்., என்று கூறி இருந்தார்.

சென்னை மெட்ரோ 2ம் கட்ட பணிகளுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியதாக நேற்று சென்னை ரோட் ஷோவிற்கு இடையே பிரதமர் மோடி ட்விட் செய்து இருந்தார். இந்த நிலையில் மெட்ரோ இரண்டாம் கட்ட பணிகளுக்கு மத்திய அரசு 2 வருடமாக பணமே தரவில்லை என்று திமுக போட்டுடைத்துள்ளது.
பாஜக அரசு சென்னை மெட்ரோ 2-வது கட்டத்திற்கான நிதியை வெளியிடவில்லை, தமிழக முதல்வர் ஸ்டாலின் மாநில பட்ஜெட்டில் இருந்து ₹9000 கோடியை வெளியிட்டு திட்டத்தின் தொடர்ச்சியை உறுதி செய்தார். ரேக்குகளின் எண்ணிக்கையை 4ல் இருந்து 6 ஆக உயர்த்த உங்கள் அரசு அனுமதிக்கவில்லை., என்று திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் சரவணன் குறிப்பிட்டுள்ளார்.
காசு தராத மத்திய அரசு: ஏற்கனவே சென்னை மெட்ரோ 2ம் கட்ட பணிகளுக்கு இப்போதைக்கு பணம் கொடுக்க முடியாது, நிதியை விடுவிக்க வாய்ப்பு இல்லை என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ 3 வழித்தடங்களில் கொண்டு வரப்பட உள்ளது. 118.9 கிமீ தூரத்திற்கு இந்த மெட்ரோ பாதை கொண்டு வரப்பட உள்ளது. முதல் கட்டத்திற்கு ஆலந்தூர் எப்படி மையமாக இருந்ததோ இரண்டாம் கட்டத்திற்கு ஓஎம்ஆர் மையமாக இருக்கும். இந்த நிலையில்தான் ஓஎம்ஆர் சாலையில் அமைக்கப்படும் மெட்ரோ 2 பணிகள் முடிந்து 2027ல் இங்கே போக்குவரத்து தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 2027க்குள் சிறுசேரி முதல் பெருங்குடியில் உள்ள நேரு நகர் வரை மெட்ரோ இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதில் 20-கிமீ நீளம் கொண்ட மாதவரம் முதல் சிப்காட் வரை - 45.4 கிமீ பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இங்கு நேரு நகர், கந்தஞ்சாவடி, பெருங்குடி, தொரைப்பாக்கம், மேட்டுக்குப்பம், பிடிசி காலனி, ஒக்கியம்பேட்டை, காரப்பாக்கம், ஒக்கியம் தொரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், சோழிங்கநல்லூர் ஏரி I மெட்ரோ, சோழிங்கநல்லூர் ஏரி II மெட்ரோ, செம்மஞ்சேரி 1 மெட்ரோ, செம்மஞ்சேரி 2 மெட்ரோ, காந்தி நகர், நாவலூர் மெட்ரோ, சிறுசேரி, சிறுசேரி SIPCOT I மெட்ரோ மற்றும் சிறுசேரி SIPCOT II மெட்ரோ ஆகிய நிலையங்கள் இந்த பாதையில் அமைக்கப்படும். மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 44.6 கிமீ நீளம் (காரிடார் 5) மற்றும் லைட் ஹவுஸ்-பூந்தமல்லி வரையிலான 26.1 கிமீ ஆகியவை இரண்டாம் கட்ட திட்டத்தில் உள்ள மற்ற இரண்டு வழித்தடங்களாகும்.
இதில் மாதவரம் மற்றும் தரமணி இடையே பாதை அண்டர் கிரவுண்ட் பாதையாகவும், சிறுசேரியில் உள்ள சிப்காட்டின் கடைசி நிலையம் வரை மேலே பாலம் அமைக்கப்பட்ட உயரமான பாதையாகவும் இருக்கும். அண்டர் கிரவுண்ட் பாதை அமைக்க அதிக நேரம் எடுக்கும். இன்னொரு பக்கம் மேலே பாலம் அமைக்கும் பணிகள் வேகமாக முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மத்திய அரசு நிதி: இந்த நிலையில் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகளுக்கு மத்திய அரசு இன்னும் நிதி ஒதுக்கவில்லை. மத்திய அரசு நிதி இல்லாமலே வெறும் மாநில அரசின் நிதியிலேயே மெட்ரோ கட்டப்பட்டு வருகிறது.
மத்திய அரசு நிதி ஒதுக்காமல் கைவிரித்து வரும் நிலையில் கூடுதல் நிதிகளை பல்வேறு சர்வதேச வங்கிகளிடம் இருந்து தமிழ்நாடு அரசு பெற்று வருகிறது. இவர்களின் உதவியுடன்தான் தமிழ்நாடு அரசு மெட்ரோ சேவை கட்டுமானங்ளை மத்திய அரசின் உதவி இல்லாமலே மேற்கொண்டு வருகிறது.
மெட்ரோவிற்கு பணம் இல்லை: இந்த நிலையில்தான் சென்னை மெட்ரோ 2ம் கட்ட பணிகளுக்கு இப்போதைக்கு பணம் கொடுக்க முடியாது, நிதியை விடுவிக்க வாய்ப்பு இல்லை என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் திமுக ராஜ்யசபா எம்பி வில்சனின் கேள்விக்கு மத்திய அரசு அளித்த பதிலில், சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டத்திற்கான தமிழ்நாடு அரசின் முன்மொழிவை இன்னும் ஆய்வு செய்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. சென்னை மெட்ரோவின் 118.9 கிமீ கட்டம்-II கட்டுமானப் பணிகள் ஏற்கனவே மாநில நிதி மற்றும் JICA இன் வெளி நிதியுதவியுடன் தொடங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. திட்டத்தின் முதல் ரயில் டிசம்பர் 2025 இல் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications