இன்றே வருகிறது புதிய வருமான வரி சட்டம்! அடியோடு நீக்கப்படும் பழைய Regime? மத்திய அரசின் பிளான்
சென்னை: இன்று நாடாளுமன்றத்தில் வருமான வரி சட்ட திருத்தம் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது புதிய வருமான வரி சட்டம் கொண்டு வரப்பட உள்ளது. இந்த சட்டத்தின் கீழ் முக்கியமான சில விஷயங்கள் மாற்றப்பட உள்ளன. அவை என்னென்ன விஷயங்கள் என்று இங்கே பார்க்கலாம்.
இந்தியாவில் நடைமுறையில் உள்ள தற்போதைய வருமான வரிச் சட்டம் 1961 ஆம் ஆண்டு நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டது, தற்போது புதிய வருமான வரிச் சட்டம் 21 ஆம் நூற்றாண்டின் தேவைக்கேற்ப தற்போதுள்ள வழக்கில் உள்ள சட்டத்திற்குப் பதிலாக உருவாக்கப்பட்டு வருகிறது. இதில் பின்வரும் முக்கியமான மாற்றங்களை செய்ய உள்ளனர்.

1. வருமான வரி சட்டத்தை எளிமையாக்க உள்ளனர். எல்லோரும் புரிந்துகொள்ளும் படி வருமான வரி மாற்றப்படும்.
2. வருமான வரி தாக்கல் செய்வது எளிமையாக்கப்படும். புதிய தளம், செயலி உருவாக்கப்படும்.
3. தனி நபர் வருமான வரி மேலும் எளிமையாக்கப்படும்.
4. பிஸ்னஸ் வருமான வரி இப்போது சிக்கலாக உள்ளது. இதை மிக எளிமையாக எல்லோரும் புரிந்துகொள்ளும்படி மாற்றுவார்கள்.
5. பழைய வருமான வரி regime நீக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் அதில் உண்மை இல்லை என்கிறார்கள்.
6. இப்போது நடைமுறையில் உள்ள பழைய வருமான வரி regime, புதிய வருமான வரி regime இரண்டும் வழக்கத்தில் இருக்கும். ஆனால் பழைய முறையில் உள்ள சலுகைகள் நீக்கப்படலாம்.
7. பட்ஜெட்டில்தான் ஸ்லாப் மாற்றப்பட்டது என்பதால் வருமான வரி ஸ்லாப் இந்த சட்டத்தில் மாற்றப்படாது.
8. அதே சமயம் புதிய வருமான வரி regimeல் புதிதாக சலுகைகள் சேர்க்கப்படலாம். அதாவது வீட்டு லோன் சலுகை போன்ற சலுகைகள் சேர்க்கப்படலாம்.
9. நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாட்டிற்கு புதிய வருமான வரி சட்டம் தேவை என்றும், இதற்கான மசோதா இந்த கூட்டத்தொடரில் பிப்ரவரி 6-ம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறினார்.
10. முந்தைய சிக்கலான சட்டத்திற்குப் பதிலாக நாட்டில் புதிய வருமான வரிச் சட்டத்தை கொண்டு வர சமீபத்தில் ஆய்வுக் குழு ஒன்று உருவாக்கப்பட்டது. குழுவின் பரிந்துரையின் பேரில் புதிய வருமான வரி மசோதாவை அரசு தயாரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதைத்தான் தாக்கல் செய்ய உள்ளனர்.
தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல்மயமாக்கலின் பெருக்கம் காரணமாக, வரி செலுத்துவோர் ஆன்லைனில் பல விஷயங்களைச் செய்ய முடியும். இதுபோன்ற சூழ்நிலையில், ஆன்லைனில் தடையின்றி வரி விவரங்களை புரிந்துகொள்ளக்கூடிய வகையில் சட்டத்தை மாற்ற உள்ளனர். எல்லோரும் ஆன்லைனில் வருமான வரியை தாக்கல் செய்யும் விதமாக அனைத்தையும் எளிமையாக்க உள்ளனர்.
கடந்த சில வருடங்களுக்கு முன் ஆன்லைனில் வருமான வரி தாக்கல் செய்யும் பக்கத்தை எளிமையாக்கினர். இதையடுத்து மக்கள் வருமான வரி தாக்கல் செய்வது அதிகரித்தது. அதேபோல் மீண்டும் செயல்பாடுகளை எளிமையாக்க உள்ளனர். மற்றபடி பழைய வருமான வரி regime நீக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் அதில் உண்மை இல்லை என்கிறார்கள். இதன் சலுகைகள் குறைக்கப்படலாம் ஆனால் நீக்கப்படாது என்று அரசு தரப்பு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications