பிஎஃப்ஐ கோட்டையாக தமிழகம் மாறி வருகிறது! கனவு ஒருபோதும் நிறைவேறாது! அமைச்சர் அஸ்வினிகுமார் ஆவேசம்!
சென்னை : தமிழகம் பாப்புலர் ஃப்ரன்ட் ஆப் இந்தியாவின் கோட்டையாக மாறிவருகிறது எனவும், அவர்களின் கனவு ஒருபோதும் நிறைவேறாது என மத்திய இணை அமைச்சர் அஸ்வினி குமார் கூறியுள்ளார்.
சென்னை பாண்டி பஜாரில் அமைந்துள்ள ரேசன் கடைக்கு ((தியாகராயநகர் -3 )) சென்ற மத்திய அமைச்சர் அஸ்வினி குமார் அங்கு அரிசி , கோதுமை , பருப்புகள் , உப்பு , தூள் போன்றவற்றின் அளவு மற்றும் விலைகள் குறித்து கேட்டறிந்தார்.
மத்திய அரசின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் முறையாக உணவு தானியப் பொருட்கள் வழங்கப்படுகின்றனவா என்றும் அமைச்சர் கேட்டறிந்தார்.

அஸ்வினி குமார்
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்," " சென்னைக்கு 2 நாள் சுற்றுப்பயணமாக வந்துள்ளேன். சென்னை விமான நிலையத்தில் எனக்கு அமோக வரவேற்பு தந்தனர். அதை பார்த்தபோது 2024 ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்திலிருந்து நாடாளுமன்றத்திற்கு அதிகளவிலான உறுப்பினர்கள் செல்வது உறுதி என தெரிகிறது. மீண்டும் இந்தியாவின் பிரதமராக மோடி வருவதும் உறுதி.

பிஎஃப்ஐ
பயங்கரவாதம் நாட்டை பிளவுபடுத்துவதாக உள்ளது. PFI அமைப்பு இளைஞர்களை sleeper cells ஆக பயன்படுத்துகிறது , எனவே உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆணைப்படி அந்த இயக்கத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. மாநில அரசும் pfi அமைப்பின்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பாப்புலர் ஃப்ரன்ட் ஆப் இந்தியா போன்ற அமைப்புகள் வேரூன்ற ஒரு சில அரசியல் கட்சிகளின் கொள்கையே காரணமாகும். தமிழகம் பிஎஃப்ஐ கோட்டையாக மாறிவருகிறது. அவர்களின் கனவு ஒருபோதும் நிறைவேறாது. சதித் திட்டங்கள் அனைத்தும் தகர்த்தெறியப்படும்

தமிழக மக்கள் அமைதியானவர்கள்
தமிழக மக்கள் அமைதியானவர்கள் , ஆனால் இங்கு ஆட்சியில் இருப்போரின் செயல்பாடு வன்முறையையும் , தீவிரவாதத்தையும் ஊக்குவிக்கும் வகையில் உள்ளது. பிரதமர் நாட்டு முன்னேற்றத்திற்கான சூழலை ஏற்படுத்தி உள்ளார். பிரதமரின் திட்டங்கள் அரசியல் லாபத்திற்காக இல்லாமல் நாட்டை முன்னேற்றும் வகையில் உள்ளது. பாஜக சித்தாந்த ரீதியாக நாட்டை முன்னேற்றுவது பற்றி யோசிக்கிறது , எனவே pfi அமைப்பை இரும்புக் கரம் கொண்டு அடக்க முயற்சி செய்கிறோம்.

அண்ணாமலை
தமிழக முதல்வர் இதேபோல் செயல்பட்டால் அடுத்த தேர்தலில் மக்கள் அவருக்கு பாடம் புகட்டுவர் . அண்ணாமலை மீது தமிழக மக்கள் வைத்துள்ள நம்பிக்கை அபரிதமாக உள்ளது ,ராகுல் காந்தி மக்களை ஒருங்கிணைக்க பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார் , காங். தலைவர்களை முதலில் ஒருங்கிணைக்க வேண்டும். காங்கிரசால் தனது கட்சிக்கே தலைவரை உருவாக்க முடியவில்லை. பாஜக ஆட்சிக்கு வந்தபின் இதுவரை எந்த ஊழலும் நடக்கவில்லை , பயங்கரவாதத்தை முழுவதும் தடுக்க பிரதமர் நடவடிக்கை எடுத்துள்ளார்." என்றார்.












Click it and Unblock the Notifications