செம தில்லு.. முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் டிஆர்பி ராஜாவை புகழ்ந்த மத்திய அமைச்ச்சர் பியூஷ் கோயல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: "தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சகோதரர் டி.ஆர்.பி.ராஜாவும், தமிழ்நாட்டை மாற்றியமைப்பதில் தைரியமான முடிவுகளை எடுக்கின்றனர்" என மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் பாராட்டியுள்ளார்.

2030ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக மாற்ற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக இன்றும் நாளையும் உலக முதலீட்டாளர் மாநாடு சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெறுகிறது. இந்த உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் ரூ. 5.50 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்க தமிழக அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

Union Minister piyush goyal praises cm stalin and trb rajaa in global investors meet

இந்த உலக முதலீட்டாளர் மாநாட்டில் பல முக்கிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. முக்கியமான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அனைத்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. சிங்கப்பூர், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, தென்கொரியா, ஜப்பான், ஜெர்மனி, டென்மார்க், மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.

இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில், ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல், தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் முக்கிய விருந்தினர்களாக பங்கேற்றனர். இந்த மாநாட்டில் "1 டிரில்லியன் அமெரிக்க டாலருக்கான தமிழ்நாட்டின் பார்வை" ("Tamil Nadu Vision $1 Trillion") எனும் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது.

Union Minister piyush goyal praises cm stalin and trb rajaa in global investors meet

உலகின் முன்னணி மின்வாகனத் தயாரிப்பு நிறுவனமான VinFast தமிழகத்தில் ரூ.16,000 கோடி முதலீடு செய்கிறது. தமிழ்நாட்டில் JSW எனர்ஜி நிறுவனம் ரூ.12,000 கோடி முதலீடு செய்யவும், டாடா நிறுவனம் ரூ.12,000 கோடி முதலீடு செய்யவும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. மேலும் டிவிஎஸ் நிறுவனம் கூடுதலாக ரூ.5000 கோடி முதலீடும், ஹூண்டாய் நிறுவனம் கூடுதலாக ரூ.6,000 கோடி முதலீடு செய்யவும் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் தமிழ்நாட்டில் Pagatron நிறுவனம் ரூ.1,000 கோடி முதலீடு செய்வதற்கான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.

இந்த மாநாட்டில் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், "கலாச்சாரம், வரலாற்றில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய நீங்கள் வந்திருக்கிறீர்கள். காஞ்சி பட்டு போல பல வண்ணங்களில் குவிந்திருக்கும் அனைவரையும் காண்பதில் மகிழ்ச்சி. ஒவ்வொரு மாநிலமும் இந்தியாவின் வளர்ச்சிக்கு பங்களிக்க வேண்டும். மாநிலங்கள் முன்னேறாமல் நாடு முன்னேறாது என பிரதமர் மோடி கூறியுள்ளார். ஒரு ட்ரில்லியன் டாலர் இலக்கு வைத்து செயல்படும் முதல்வர் ஸ்டாலினைப் பாராட்டுகிறேன். 2030ம் ஆண்டுக்குள் 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை அடைய வாழ்த்துகிறேன்.

சூரியனை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பிய ஆதித்யா L1 திட்டத்தின் இயக்குநர் நிகர் ஷாஜி தமிழ்நாட்டின் தென்காசி என்ற சிறிய நகரில் இருந்து வந்தவர். அவருக்கு எழுந்து நின்று பாராட்டை தெரிவிப்போம். நாட்டில் உள்ள பணி செய்யும் பெண்களில் 43% பேர் தமிழ்நாட்டில் பணியாற்றுகின்றனர். மேலும் இந்த எண்ணிக்கை அதிகரித்து, நாட்டின் பொருளாதார உயர்வில் பெண்கள் பங்களிப்பு உயர வேண்டும் என விரும்புகிறேன்.

உலகிலேயே முதலீடு செய்ய சிறப்பான மாநிலம் தமிழ்நாடு. வளமான கலாச்சாரம் கொண்ட தமிழ்நாட்டில் உலக முதலீட்டாளர்களின் கவனம் குவிந்துள்ளது. முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா இருவரையும் கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும். தமிழ்நாட்டை மாற்றியமைப்பதில் தைரியமான முடிவுகளை எடுக்கின்றனர். . இதன்மூலம் நாட்டின் தொழில் வளர்ச்சியும், பொருளாதாரமும் முன்னேறும்." எனப் பேசியுள்ளார் பியூஷ் கோயல்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+