சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம்! மசோதாவை திருப்பி அனுப்பினார் குடியரசுத் தலைவர்
சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை நியமிக்கவும், நீக்கவும் அரசுக்கு அதிகாரம் அளிக்கும் சட்ட மசோதாவை, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு திருப்பி அனுப்பியுள்ளார்.
கடந்த 2022ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் சட்டப்பேரவையில் நிறைவேற்றி குடியரசுத் தலைவருக்கு இந்த மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. மசோதா கடந்த 3 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில் தற்போது திருப்பி அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.

குஜராத் பல்கலைக்கழக சட்டம் 1949, தெலுங்கானா துணைவேந்தரை நியமிக்கும் பல்கலைக்கழகங்கள் சட்டம் 1991, ஆகியவை பல்கலைக்கழகங்களுக்கு மாநில அரசே ஆளுநரை நியமிக்க வழிவகை செய்கிறது. அதேபோல், பக்கத்து மாநிலமான கர்நாடகாவில், அம்மாநில பல்கலைக்கழகங்கள் சட்டப்படி மாநில அரசின் ஒப்புதலுடன் வேந்தரால் துணைவேந்தர் நியமிக்கப்பட வேண்டும்.
இப்படி சில மாநிலங்களில் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இருப்பதை போன்று, தமிழ்நாட்டிலும் மாநில அரசின் துணைவேந்தரை நியமிக்க முடிவு செய்து, தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தரக்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு அளிக்க வழிவகை செய்யும் சட்ட திருத்த மசோதா கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இதில் சென்னை பல்கலைக்கழகத்தின் தனி சட்ட மசோதாவையும், ஏனைய 12 பல்கலைக்கழகங்களுக்கு பொதுவான சட்ட மசோதாவையும் நிறைவேற்றப்பட்டது.
தமிழகத்தில் உயர் கல்வித் துறையின் 13 பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகின்றன. இவை, பல்கலைக்கழகங்களுக்கு என வகுக்கப்பட்ட தனித்தனியான சட்டங்களின் மூலமாக செயல்பட்டு வருகின்றன. துணைவேந்தர்களை தமிழக அரசு நியமிக்க வகை செய்ய, 13 பல்கலைக்கழகங்களின் சட்டங்களிலும் திருத்தம் செய்யப்பட்டிருந்தது.
இந்த சட்டத்தின் படி துணைவேந்தர்களை நியமிக்க வழி வகுக்கும் சட்டத்தில், வேந்தர் எனும் சொற்றொடர் நீக்கப்பட்டு அதற்கு பதிலாக, அரசு எனும் சொற்றொடர் இடம் பெறும். மட்டுமல்லாது வேந்தர் மற்றும் அவர் எனும் சொற்றொடருக்கு, அரசு மற்றும் அவர்கள் என மாற்றியமைக்கப்படுதல் வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications