ரத்தத்தால் கடிதம்.. விஐபி பெண்ணின் மண்டைக்கேறிய லவ் வெறி.. இன்ஸ்பெக்டருக்கு டார்ச்சர் தந்த பிரமுகர்
சென்னை: பெங்களூரு ராமமூர்த்திநகரில் நடந்த விசித்திரமான சம்பவம், கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லவ் டார்ச்சர் என்றாலே பெண்களே காலம் காலமாக பாதிக்கப்பட்டு வரும்போது, பெங்களூரில் ஒரு ஆண் அதுவும் போலீஸ்காரர் சிக்கியிருக்கிறார்.. சஞ்சனா என்ற 38 வயது பெண் செய்த காதல் டார்ச்சர் என்ன?
பெங்களூர் ராமமூர்த்திநகர் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சதீஷ்.. கடமை தவறாத போலீஸ்காரர்.. ஆனால், எதிர்பாராத விதமாக அவரது வாழ்க்கையில் குபீர் காதல் குறுக்கிட்டது.

இன்ஸ்பெக்டருக்கு லவ் டார்ச்சர்
அதே பகுதியில் வசித்து வரும் 38 வயது சஞ்சனா என்பவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரமுகர்... சமீபத்தில் இவரும் இன்ஸ்பெக்டர் சதீஷூம் அறிமுகமாகியிருக்கிறார்கள்.. அதற்குள் சஞ்சனா திடீரென தன் காதலினை வெளிப்படுத்தினார்.. ஆனால் நேரடியாக காதலை சொல்லாமல் வேறு வேறு போன் நம்பர்களிலிருந்து போலீஸ்காரருக்கு மெசேஜ் அனுப்ப துவங்கினார்..
'நான் உங்களை காதலிக்கிறேன், நீங்களும் என்னை காதலிக்க வேண்டும்" என்று செல்போனில் கூறியுள்ளார். முதலில், யாரோ விளையாட்டாக பேசுகிறார்கள் என்று சதீஷ் பெரிதாக அதை எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், அதே நம்பரில் இருந்து போன் செய்து பேசவும்தான் அது சஞ்சனா என்று சதீஷூக்கு தெரியவந்தது. உடனே அந்த நம்பரில் வந்த அழைப்பை தவிர்த்தார்.
11 வித்தியாசமான போன் நம்பர்கள்
ஆனாலும் சஞ்சனா விடவில்லை.. தொடர்ச்சியாக 11 வித்தியாசமான நம்பர்களில் இருந்து சதீஷூக்கு போன் செய்தார்.. அந்த அனைத்து அழைப்புகளையும் இன்ஸ்பெக்டர் சதீஷ் தவிர்த்தார். இது சஞ்சனாவுக்கு ஆத்திரத்தை தந்துவிட்டது..
பிறகு சதீஷை மிரட்ட ஆரம்பித்தார்.. முக்கிய அரசியல்வாதிகளுடன் நெருங்கிய தொடர்பு தனக்கு உள்ளதாக கூறி, அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கருடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட போட்டோக்களை சதீஷூக்கு அனுப்பி வைத்தார்.. அப்போதும் சதீஷ் மனம் மாறவில்லை..
பிறகு முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் எனக்குத் தெரியும். அதனால் என்னை காதலிக்க வேண்டும்" என்று இன்ஸ்பெக்டர் சதீஷை சஞ்சனா கட்டாயப்படுத்தினார்.. அப்போதும் சதீஷ் மனம் மாறவில்லை.
ரத்தத்தால் கடிதம்
ஒருகட்டத்தில் பொறுமை இழந்த சஞ்சனா, நேரடியாக சதீஷ் பணிபுரியும் சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனுக்கே சென்றார். அங்கே டியூட்டியில் இருந்த சதீஷை சந்தித்து, தன்னுடைய ரத்தத்தால் எழுதப்பட்ட காதல் கடிதத்தை தந்தார்..
அந்த கடிதத்தில், "நீங்கள் என்னை காதலிக்க மறுத்தால் தற்கொலை செய்கிறேன்" என மிரட்டலும் இருந்தது. இதைப்பார்த்து இன்ஸ்பெக்டர் சதீஷ் அதிர்ச்சியடைந்தார்..
சதீஷ் உடனே போலீசில் இதுகுறித்து புகார் அளித்தார். இதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து சஞ்சனாவை கைது செய்தனர்...
மனைவி, குழந்தைகள்
சதீஷ் இதுகுறித்து சொல்லும்போது, "அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது.. விவாகரத்து பெற்று தனியாக வாழ்கிறார். ஆனால், எனக்கு மனைவி, குழந்தைகள் இருக்கிறார்கள்.. ஏன் எனக்கு இப்படியெல்லாம் தொல்லை தந்தார் என்பது புரியவில்லை" என்று கூறுகிறார்..
பெங்களூரு முழுவதும் இந்த சம்பவம்தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.. ஒருபக்கம் அரசியல்வாதிகளுடன் தொடர்புள்ளவர், மறுபக்கம் போலீஸ்காரருக்கு லவ் டார்ச்சர் என்று சலசலப்பை தந்த 38 வயது பெண்மணி சஞ்சனாவை நினைத்து, சிலர் தங்களது பரிதாபத்தையும் வெளிப்படுத்தி வருகிறார்கள்..!
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications