அசையா சொத்துக்களில் அள்ளி தரும் லாபம்! இனி NRI சொத்து வாங்க TAN தேவையில்லை! சூப்பர் சான்ஸ் தந்த அரசு
சென்னை: நம்முடைய நாட்டை பொருளாதாரத்தை தாங்கிப் பிடிக்கும் தூண்களாக வெளிநாடு வாழ் இந்தியர்கள் எப்போதுமே இருந்து வருகிறார்கள்... அவர்கள் உழைத்து அனுப்பும் பணம்தான், நம் இந்தியாவின் வளர்ச்சிக்கு உரமிட்டு கொண்டிருக்கிறது.. இந்நிலையில், இன்றைய 2026 பட்ஜெட்டில் NRI என்று சொல்லப்படும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு சில மிக முக்கியமான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன... அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்க்கலாம்..
பொதுவாக, வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் சொந்த மண்ணில் ஒரு இடத்தையோ, வீட்டையோ வாங்க வேண்டும் என்றால், அது சாதாரண வேலை கிடையாது.. இதற்கு குறுக்கே ஏகப்பட்ட "பேப்பர் வேலைகளும்" குறுக்கே நிற்கும்.. இப்படியான தடைகளை நொறுக்கும் விதமாகவே நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்..

சொத்துக்கள் - வருவாய் மாற்றம்
TAN என்பது வெளிநாட்டவரிடம் சொத்து வாங்கும்போது வரியை செலுத்துவதற்காகப் பெற வேண்டிய ஒரு தனித்துவமான வரி கணக்கு நம்பராகும்.. இனி இந்த தனி எண் நம்பர் தேவையில்லை, PAN கார்டை வைத்தே அந்த வரி நடைமுறைகளை மிக எளிதாக முடித்துக் கொள்ளலாம் என்ற மிக முக்கியமான அறிவிப்பை நிர்மலா இன்று வெளியிட்டுள்ளார்..
இதுவரை ஒரு வெளிநாடு வாழ் இந்தியரிடம் இருந்து நீங்கள் ஒரு சொத்தை வாங்குகிறீர்கள் என்றால், சாதாரண பான் கார்டு மட்டும் போதாது. அதற்காக டான் எனப்படும் தனி வரி நம்பரையும் பெற வேண்டும். ஆனால் இதை சாதாரண மக்களால் எளிதல் பெற முடியாது.. இதற்குதான் மத்திய அரசு தற்போது அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது..
சொத்து வாங்கும் வெளிநாட்டு இந்தியர்கள்
இனிமேல் பான் கார்டை வைத்தே அந்த வரி நடைமுறைகளை முடித்துக்கொள்ளலாம் சர்ப்ரைஸ் தந்துள்ளது.. வரும் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் இந்த மாற்றம், சொத்து வாங்குவதை எளிமைப்படுத்தி உள்ளது.. இதனால் நிர்வாக மாற்றம் மட்டுமல்ல, நடுத்தர மக்களின் அலைச்சலும் ஒருவழியாக குறையும்..
ஏனென்றால் வெளிநாடுகளில் உள்ள சொத்துக்களை காட்டுவதில், பலருக்கும் ஒருவித சட்ட ரீதியான பயம் இருக்கவே செய்கிறது.. அப்படியான பயத்தைதான் மத்திய அரசு இன்று நீக்கி உள்ளது.. 6 மாத கால அவகாசத்திற்குள் வெளிநாட்டு சொத்து கணக்கை தாக்கல் செய்ய ஒரு வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது... இதன் மூலம் வெளிப்படையான பொருளாதாரத்தை உருவாக்குவதோடு, NRI-களை சட்டச் சிக்கல்களில் அரசு பாதுகாக்கும் முயற்சியாகவும் இது பார்க்கப்படுகிறது..
பட்ஜெட் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
வெளிநாடுகளில் உள்ள சிறிய அளவிலான சொத்துக்கள் அல்லது வங்கி சேமிப்புகளை தெரியாமல் கணக்கில் காட்ட தவறியிருந்தால், அதற்கு விதிக்கப்படும் கடுமையான அபராதங்களில் இருந்தும் இப்போது விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அதாவது, உள்நோக்கம் இல்லாமல் செய்த பிழைகளை திருத்திக்கொள்ளவும், வெளிப்படையாக தகவல்களை தெரிவிக்கவும் NRIகளுக்கு ஒரு சூப்பர் சான்ஸையும் இந்த பட்ஜெட் அறிவிப்பு தந்துள்ளது..
ஆவணங்கள் - மத்திய அரசு
அதேபோல், வருமான வரித் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து கொண்டு உரிய ஆவணங்களைத் திரட்டி வரி தாக்கல் செய்வதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படும் NRI-களுக்கும், நடுத்தர வர்க்கத்தினருக்கும் இந்த கூடுதல் நாட்கள் மிகப்பெரிய நிம்மதியை அளித்துள்ளது."
மொத்தத்தில் இன்று நிதியமைச்சர் அறிவித்துள்ள இந்த அறிவிப்பானது, வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவோடு கொண்டுள்ள உறவை மேலும் வலுப்படுத்தும் முயற்சியாகவும் இது பார்க்கப்படுகிறது.. அத்துடன் டிஜிட்டல் இந்தியாவை நோக்கி தடம் பதிக்கும் இந்த பட்ஜெட், NRI-களின் முதலீடுகளை இந்தியாவுக்குள் ஈர்க்கும் சக்தியாகவும் பார்க்கப்படுகிறது....!!!
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications