"உடம்பு சரியில்லை".. கோர்ட்டில் காரணம் சொன்ன பிரக்யா.. இந்தி பாடலுக்கு செம "டான்ஸ்".. பரபர வீடியோ!
சென்னை: பாஜக எம்பி பிரக்யா தாக்கூர் திருமண விழா ஒன்றில் டான்ஸ் ஆடிய பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. உடம்பு சரியில்லை என்று கூறி பெயில் பெற்று விடுதலை ஆன நிலையில் இவர் இப்படி டான்ஸ் ஆடியது சர்ச்சையாகி உள்ளது.
செப்டம்பர் 29, 2008ல் மும்பையில் இருந்து 270 கிமீ தொலைவில் இருக்கும் மலேகான் பகுதியில் இரண்டு பைக்குகளில் வைக்கப்பட்டு இருந்த வெடிகுண்டு வெடித்தது. இந்த மோசமான சம்பவத்தில் 7 பேர் பலியானார்கள். இதில் குற்றஞ்சாட்டப்பட்டு வழக்குகளை சந்தித்து வரும் ஒருவர்தான் சாத்வி பிரக்யா தாக்குர்.
உடல் நலமில்லை என்று கூறி பெயிலில் வெளியே வந்த பிரக்யா தாக்கூர் பாஜகவில் இணைந்து மத்திய பிரதேசத்தில் போபால் தொகுதியில் லோக்சபா தேர்தலில் வென்று எம்பி ஆனார்.

வழக்கு
இந்த நிலையில் மலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் கோர்ட் முன் ஆஜராக தொடர்ந்து பிரக்யா மறுத்து வருகிறார். எனக்கு உடல்நிலை சரியில்லை. என்னை கோர்ட்டுக்கு வர முடியாது, போலீஸ் கஸ்டடியில் எனக்கு இழைக்கப்பட்ட கொடூரத்தால் உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளன, என்னால் நடக்க முடியாது என்று காரணம் கூறி, கோர்ட்டில் ஆஜராவதை பிரக்யா தாக்கூர் தவிர்த்து வருகிறார்.

மோசம்
உடல்நிலை சரியில்லை, நடக்க முடியாது என்று பிரக்யா தாக்கூர் கூறிய நிலையில், அவர் வீட்டில் நடந்த திருமண விழா ஒன்றில் இந்தி பாடலுக்கு டான்ஸ் ஆடிய வீடியோ வெளியாகி உள்ளது. நேற்று நடந்த திருமண விழா ஒன்றில் பிரக்யா இந்தி பாடல்களுக்கு ஜாலியாக டான்ஸ் ஆடியது குறிப்பிடத்தக்கது.
|
உடல்நிலை
பிரக்யா தாக்கூருக்கு அளிக்கப்பட்டுள்ள அரசு வீட்டில், இரண்டு ஏழை குடும்பங்களுக்கு திருமணம் செய்து வைத்தார். இதில்தான் தனது தோழிகளுடன் சேர்ந்து பிரக்யா தாக்கூர் ஆடியுள்ளார். உடல்நிலை சரியில்லை என்று கூறி கோர்ட்டுக்கு கூட செல்லாமல் இருந்தவர் இப்படி உற்சாகமாக டான்ஸ் ஆடியது பெரிய சர்ச்சையாகி உள்ளது.

கூடைப்பந்து
கடந்த சில நாட்களுக்கு முன் போபாலில் இவர் கூடைப்பந்து விளையாடிய வீடியோவும் வைரலானது குறிப்பிடத்தக்கது. கோர்டுக்கு மட்டும்தான் இவரால் செல்ல முடியாது, ஆனால் இதெல்லாம் செய்வதில் பிரச்சனை இல்லை என்று காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் டிவிட்டரில் பிரக்யா தாக்கூரை விமர்சனம் செய்துள்ளனர்.

பீமா - கொரேகான்
2018ல் பீமா - கொரேகான் பகுதியில் வன்முறையை தூண்டியதாக ஸ்டான் சாமி கடந்த வருடம் கைது செய்யப்பட்டார். 80 வயது கடந்த இவர் உடல்நிலை மோசமாகி, வெண்டிலெட்டரில் சிகிச்சை பெற்று வந்த போது கூட அவருக்கு பெயில் வழங்கப்படவில்லை. தொடர்ந்து பெயில் கிடைக்காமல், சிகிச்சை மட்டும் பெற்று வந்த நிலையில், ஸ்டான் சாமி 3 தினங்களுக்கு முன் மரணம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல்












Click it and Unblock the Notifications