யுபிஐ பரிவர்த்தனை வரம்பு 10 லட்சமாக உயர்வு.. செப்டம்பர் 15 முதல் வரும் புதிய விதிகள் முழு விவரம்
சென்னை: யு.பி.ஐ. மூலம் ஒருவர் தனது வங்கிக்கணக்கில் இருந்து மற்றொரு வங்கி கணக்கிற்கும், பங்குச்சந்தை முதலீடு, கடனை திரும்ப செலுத்துதல் உள்ளிட்ட பிற பயன்பாட்டுக்காகவும் ஒரு நாளைக்கு அதிகபட்சம் எவ்வளவு தொகையை பரிவர்த்தனை செய்யலாம் என அமலில் இருந்த விதிமுறைகள் அடியோடு மாறி உள்ளது. யு.பி.ஐ. பரிவர்த்தனை வரம்பு ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 15-ந் தேதி முதல் அமலுக்கு வரும் விதிகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
இன்றைக்கு இணையதள வங்கி, மொபைல் பேக்கிங் என்று ஒன்று இருப்பதை பலரும் மறக்கும் அளவிற்கு யுபிஐ பயன்பாடு அதிகரித்துவிட்டது. அதேநேரம் உயர்ந்த பணப்பரிவர்த்தனைகள் இன்று வரை இணையதள வங்கி மற்றும் மொபைல் பேங்கிங் மூலமே மேற்கொள்ளப்படுகிறது. பல்வேறு முக்கிய பரிவர்த்தனைகளை இணையதள வங்கி எனப்படும் இண்டர்நெட் பேங்கிங் மூலம் மட்டுமே மேற்கொள்ள முடியும். அதேநேரம் தற்போது யுபிஐ பயன்பாடு தான் மக்களின் அன்றாட வாழ்க்கையில் அங்கமாகிவிட்டதால், அவ்வப்போது பரிவர்த்தனை வரம்பு உயர்த்தப்படுகிறது.

தேசிய பணப்பட்டுவாடா கழகம்
அந்த வகையில் யு.பி.ஐ. மூலம் ஒருவர் தனது வங்கிக்கணக்கில் இருந்து மற்றொரு வங்கி கணக்கிற்கும், பங்குச்சந்தை முதலீடு, கடனை திரும்ப செலுத்துதல் உள்ளிட்ட பிற பயன்பாட்டுக்காகவும் ஒரு நாளைக்கு அதிகபட்சம் எவ்வளவு தொகையை பரிவர்த்தனை செய்யலாம் என அமலில் இருந்த விதிமுறையை அவ்வப்போது இந்திய தேசிய பணப்பட்டுவாடா கழகம் (என்.பி.சி.ஐ.) மாற்றி உத்தரவிட்டிருந்தது. இதுதான் யுபிஐயின் கட்டுப்பாட்டு அமைப்பாகும். தற்போது ஒரு நாளைக்கு அதிகபட்சம் ரூ.2 பணபரிவர்த்தனை என்று உள்ளது. அதனை தற்போது 10 லட்சமாக உயர்த்தி அறிவித்துள்ளது.
வங்கிகள் நிதி நிறுவனங்கள் கோரிக்கை
என்ன சார், வரிசையாக வங்கிகள், நிதி நிறுவனங்கள், நகைக்கடைகளுக்கு சாதகமாகவே இந்த அறிவிப்பு உள்ளது என்று பார்க்கிறீர்களா.. ஆம், வங்கிகள், நிதி நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் காப்பீடு உள்பட பல்வேறு செயல்களுக்கு யுபிஐ பணப்பரிவர்த்தனை வரம்பை உயர்த்த கோரிக்கை வைத்தன. அதன்படியே உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை வரும் செப்டம்பர் 15ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
ஒரு லட்சம் வரை அனுமதி
அதேநேரம் தனிநபர் ஒருவர் தனது வங்கிக்கணக்கில் இருந்து மற்றொருவரின் கணக்கிற்கு அனுப்பும் பண பரிவர்த்தனையை பொறுத்தமட்டில் ஏற்கனவே அமலில் இருப்பது போன்று ரூ.1 லட்சமாகவே தொடரும் என்று இந்திய தேசிய பணப்பட்டுவாடா கழகம் அறிவித்துள்ளது. அதேபோல்
கல்வி கட்டணம், மருத்துவ கட்டணம், ஐ.பி.ஓ. (முதல் பங்கு வெளியீடு) போன்றவற்றுக்கான பரிவர்த்தனையும் ஏற்கனவே இருப்பது போன்று ரூ.5 லட்சமாக தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications