ஆதவ் அர்ஜுனாவுக்கு பறந்த விஜய் போன்.. உடனே சர்வே ரிப்போர்ட் அனுப்புங்க! மென்று விழுங்கிய 3 பேர் யார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் போட்டியிடும் 2 தொகுதிகளிலும் பிரச்சாரம் சரிவர செய்ய முடியாத நிலைமை உள்ளது.. இந்நிலையில், விஜய்யை நிழல் போலச் சுற்றி வரும் அந்த 3 முக்கிய நபர்கள், யாருக்கும் தெரியாமல் பல ரகசியங்களை மூடி மறைப்பதாக கூறப்படுகிறது.. இதுகுறித்த புதிய மற்றும் ஸ்பெஷல் தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.

தவெக தலைவர் நடிகர் விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி மேற்கு என 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். பல்வேறு சிக்கல்களை அவர் எதிர்கொண்டதால், தமிழகம் முழுவதும் அவரால் பிரச்சாரம் செய்ய முடியவில்லை.

Aadhav Arjuna

தவெக விஜய்

நிறைய பிரச்சாரங்களை விஜய் ரத்து செய்து விட்டார்.. அதற்கான காரணங்கள் தவெக மா.செ.க்கள் முதல் மாநில நிர்வாகிகளுக்கே தெரியவில்லை.. ஆனால், அவையெல்லாம் ஏன் ரத்து செய்யப்படுகிறது என உண்மையான காரணம் தெரிந்தவர்கள், விஜய்யை சுற்றியிருக்கும் முக்கியமான 3 நபர்கள் தானாம்.. ஆனால் அவர்களால்கூட இதனை வெளிப்படுத்தாமல் மூடி மறைக்கும் நிலைமை உள்ளதாம்.

2 பெரிய விஷயங்கள்

இந்த நிலையில், தொகுதி பொறுப்பாளர்களை அழைத்து ஆலோசனை நடத்தியிருக்கிறார் விஜய். உங்களின் பல தொகுதிகளுக்கு என்னால் பிரச்சாரத்துக்கு வர இயலவில்லை. அதற்காக உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு, தொகுதி நிலவரம் குறித்து கேட்டறிந்துள்ளார்.

பொறுப்பாளர்களின் பெரும்பாலான கருத்துக்கள், "உங்களுக்கு செம மாஸ் இருக்கிறது ; அது மட்டும் தான் ஜெயிக்க வைக்கும்... காரணம், தொகுதியில் நம்முடைய வேட்பாளர்களை மக்களுக்கு அவ்வளவாக தெரியாது. வேட்பாளர்களை மக்களிடம் அறிமுகம் செய்து வைக்க பல வழிகளிலும் நாங்கள் முயற்சிக்கிறோம். ஆனால் அது முடிவதே இல்லை.

ஆளும் கட்சியினர் அந்தளவுக்கு எங்களுக்கு சிக்கலை ஏற்படுத்துகிறார்கள். ஆளும் கட்சிக்காக உழைக்கும் அதிகாரிகள் தான் சிக்கலை ஏற்படுத்துகிறார்கள். இதையும் தாண்டித்தான் வாக்கு சேகரித்து வருகிறோம்" என ஆதங்கப்பட்டு கூறினார்களாம்.

ஆதவ் அர்ஜுனாவுக்கு பறந்த போன்

இதற்கு என்ன பதில் சொல்வது என தெரியாத விஜய், "உங்கள் உழைப்பைப் போடுங்கள். நிச்சயம் ஜெயிப்போம். பூத்தில் ஸ்ட்ராங்கான நபர்களை நியமியுங்கள். இதுவரை ஆளும் கட்சியை நாம் எதிர்த்ததெல்லாம் பிரச்சனை இல்லை. இனி 2 பெரிய விஷயங்களை நாம் எதிர்கொள்ள வேண்டும்.

ஒன்று, வாக்குப்பதிவு அன்றைக்கு பூத்தில் ஆளும் கட்சி செய்யும் அரசியலை எதிர்கொள்ள வேண்டும். அடுத்து வாக்கு எண்ணிக்கையின் போது இதைவிட அதிக சிரமங்களை நாம் எதிர் கொள்ள வேண்டியதிருக்கும். அதனால் ஸ்ட்ராங்கா இருங்கள். பார்த்துக்கொள்ளலாம்" என்றெல்லாம் விஜய் சொன்னாராம்.

இந்த ஆலோசனை முடிந்ததுமே தன்னுடைய வீட்டுக்கு சென்ற விஜய், ஆதவ் அர்ஜுனாவுக்கு போனை போட்டுள்ளார்.. "நான் போட்டியிடும் 2 தொகுதிகளில் கடைசி கட்ட கள நிலவரம் எப்படி இருக்கிறது" என சர்வே எடுத்து அனுப்புங்க" என்றும் உத்தரவிட்டுள்ளாராம்...!!

- எழில்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+