அமெரிக்காவுடன் நோ டீலிங்.. ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் சொன்ன மேட்டர்! டிரம்புக்கு நெருக்கடி
தெஹ்ரான்: ஈரான் நாடாளுமன்ற சபாநாயகரும், அந்த நாட்டின் முக்கிய பேச்சுவார்த்தை அதிகாரியுமான முகமது பாகர் காலிபாப், அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை மற்றும் தற்போதைய பதற்றமான சூழல் குறித்து அரசு செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்திருக்கிறார்.
அதில், அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதை அவர் ஒப்புக்கொண்டார். இருப்பினும், இறுதி உடன்பாட்டை எட்டுவதற்கு இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இரு தரப்பிற்கும் இடையே இன்னும் கேப் இருப்பதாகவும், இறுதி ஒப்பந்தத்தைப் பற்றி விவாதிக்கும் நிலைக்கு இன்னும் பேச்சுவார்த்தை வரவில்லை என்றும் கூறியுள்ளார்.

ஈரான் சபாநாயகர் இப்படி சொல்லியிருப்பது, டிரம்புக்கு பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனெனில், சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்த கதையாக.. ஈரானுடன் சண்டைக்கு போய், தற்போது ஹார்முஸ் நீரிணையை மூட வைத்திருக்கிறார் டிரம்ப். இதன் காரணமாக சர்வதேச அளவில், கச்சா எண்ணெய் விலை உயர்ந்திருக்கிறது. ஐரோப்பிய நாடுகள் இந்த விஷயத்தில் அமெரிக்கா மீது பயங்கர டென்ஷனில் இருக்கின்றன.
இதெல்லாம் தெரிந்தும் கூட, நிலைமையை சரி செய்யாமல் மேலும் பஞ்சாயத்தை பெருசுபடுத்தும் விதமாக, ஈரானின் துறைமுகங்களை அமெரிக்க கடற்படையை கொண்டு முற்றுகையிட்டிருக்கிறார் டிரம்ப். இதை காரணம் காட்டி, நீரிணை முழுவதுமாக லாக் செய்வதாக ஈரான் சொல்லிவிட்டது.
தற்போதைய நிலைமை குறித்து விரிவாக பேசியிருக்கும் காலிபாப், "எதிரியை நாங்கள் இன்னும் அழிக்கவில்லை. அவர்களிடம் இப்போதும் பணமும் ஆயுதங்களும் உள்ளன. ஆனால், எங்களை எதிர்கொள்வதில் அவர்கள் வியூக ரீதியாகத் தோல்வியடைந்துவிட்டனர்" என்று கூறியிருக்கிறார்.
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே நிலவி வரும் தற்காலிகமான இரண்டு வாரப் போர் நிறுத்தம் வரும் புதன்கிழமையுடன் (ஏப்ரல் 22) முடிவுக்கு வருகிறது. இது நீட்டிக்கப்படுமா என்பதில் இன்னும் உறுதியற்ற சூழல் நிலவுகிறது. இது உலகளாவிய எரிசக்தி சந்தை மற்றும் கப்பல் போக்குவரத்தில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவுக்கு நெருக்கடி
ஏற்கெனவே ஈரான் போர் காரணமாக இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. தனியார் பெட்ரோல் விற்பனையாளர்களான ஷெல் மற்றும் நயாரா ஆகியவை விலையை ஏற்றியிருக்கின்றன. விரைவில் HP, இந்தியன் ஆயில் உள்ளிட்ட நிறுவனங்களும் பெட்ரோல் விலையை ஏற்றி இருக்கின்றன. அதற்குள் நிலைமை சரியாகிவிடுமா? என்று இந்தியா எதிர்பார்த்திருந்த நிலையில், அமெரிக்கா குட்டையை குழப்பியிருக்கிறது.
இதே நிலை நீடித்தால் இந்தியாவில் நிலவி வரும் எல்பிஜி தட்டுப்பாடு பிரச்சனை சரியாக, வருட கணக்கில் கூட ஆகலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்த பிரச்சனை போதாது என்று, ஈரானின் புரட்சிகர காவல்படை வேற.. நம்ம நாட்டு கப்பல் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறது. எனவே நிலைமை எப்போது சரியாகும் என்று எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.














Click it and Unblock the Notifications