கோவை தெற்கில் மக்கள் ஆதரவு யாருக்கு.. குஷியில் செந்தில் பாலாஜி.. திகைக்க வைத்த தவெக
கோவை: கோவை தெற்கு தொகுதியில் அதிமுக சார்பில் அம்மன் அர்ஜூனன் போட்டியிடுகிறார். கடந்த முறை வானதி சீனிவாசனுக்காக விட்டுக்கொடுத்தவர், இந்த முறை நேரடியாக களம் இறங்கி உள்ளார். இங்கு திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி களம் இறங்கி உள்ளார். விஜய்யின் தவெக சார்பில் சம்பத்குமார் போட்டியிடுகிறார். இதில் சீமானின் நாம் தமிழர் சார்பில் பேரறிவாளன் போட்டியிடுகிறார். இதில் தொகுதியில் களம் நிலவரம் என்ன... மக்கள் யாருக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள் என்பதை ஒன் இந்தியாவின் நேரடி ரிப்போர்ட்டை பாருங்கள்.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில் வென்று ஆட்சியமைத்த திமுகவால் ஒரு தொகுதி கூட ஜெயிக்க முடியாமல் போன மாவட்டம் என்றால் அது கோவை மாவட்டம் தான். கோவை மாவட்டத்தில் மொத்தம் 10 சட்டசபை தொகுதிகள் உள்ளன. கடந்த 2021 சட்டசபை தேர்தலில் 9 தொகுதிகளில் அதிமுகவும், கோவை தெற்கு தொகுதியிலும் பாஜகவின் வானதி சீனிவாசனும் வெற்றி பெற்றனர்.

கடந்த முறை கமல்ஹாசன் களம் இறங்கியதால் கோவை தெற்கு தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்றது. ஆனால் வெறும் ஆயிரத்து 728 வாக்குகள் வித்தியாசத்தில் வானதி சீனிவாசன் வென்றார். கடந்த முறை வானதி சீனிவாசனுக்காக விட்டுக்கொடுத்த அம்மன் அர்ஜூனன் நேரடியாக களம் இறங்கி உள்ளார்.
இந்த முறை கோவையில் ஜெயித்தே ஆக வேண்டும் என்று விரும்பிய திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின், செந்தில் பாலாஜியை களம் இறக்கி உள்ளார். அதனால் போட்டி கடுமையாக இருக்கிறது. கோவை தெற்கை பொறுத்தவரை, முக்கியமான நகர்புறங்ககளை உள்ளடக்கிய தொகுதியாகும். இங்கு மக்களின் ஆதரவு யாருக்கு என்பதை பொதுமக்கள் கூறிய தகவல்களை அப்படியே பார்ப்போம்.
ஒரு வயதான பெண்மணியிடம் கோவை தெற்கில் உங்கள் ஆதரவு யாருக்கு என்று கேட்டோம். அதற்கு அந்த பாட்டி, என் ஓட்டு தாமரைக்கு என்று கூறினார். எதனால் என்று கேட்ட போது, தங்களுக்கு உதவி செய்ததாக கூறினார். எங்கள் தந்தை இறந்த போது, அவரை உடலை தகனம் செய்ய பாஜகவினர் உதவி செய்தனர். அந்த நன்றி காரணமாக பாஜகவிற்கு வாக்களிப்பேன் என்றார்.
அடுத்ததாக ஒரு ஆட்டோ டிரைவரிடம் கேட்டோம்.. அவர் கோவை தெற்கில் என் ஆதரவு திமுகவிற்கு என்று கூறினார். இளைஞர் ஒருவரிடம் கேட்ட போது, அதிமுக நிறைய செய்திருக்கிறது, பாலம் கட்டியிருக்கிறது. உள்கட்டமைப்பை மேம்படுத்தியிருக்கிறது.. எதுஎன்றாலும் உடனே வருவார்கள்.. எல்லாம் ஓகே.. ஆனால் இப்போது செந்தில் பாலாஜி புதிதாக கரூரில் இருந்து வந்துள்ளார். என்னை பொறுத்தவரை புதிய வேட்பாளராக இங்கு வரும் செந்தில் பாலாஜிக்கு வாய்ப்பு கொடுக்கலாம். என் தனிப்பட்ட விருப்பம் செந்தில் பாலாஜிக்கு தான் ஓட்டுப்போடுவேன் என்றார். இன்னொரு வயதானவரிடம் கேட்ட போத அவரும் திமுகவிற்கே ஆதரவு என்றார். எதனால் என்று கேட்ட போது, நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளார்கள் என்றார்.
இளம் பெண் ஒருவரிடம் கேட்ட போது, தவெகவிற்கு ஓட்டு போடுவேன் என்றார். எதனால் என்று கேட்ட போது, விஜய் முதல் முறை வருகிறார். புதுசாக இருக்கும் என்று நினைக்கிறேன்.. ஒரு வாய்ப்பு கொடுத்து பார்ப்போம் என்று நினைக்கிறேன் என்றார். ஒரு வயதானவரிடம் பேசிய போது, அவர் திமுகவை ஆதரிப்பதாக கூறினார். 8000 கூப்பன், மகளிர் உரிமை தொகை 2000 என பல திட்டங்களை அறிவித்திருப்பதாக அவர் கூறினார். இன்னும் பலர் நம்மிடம் பேசினார்கள். அதனை வீடியோவில் பாருங்கள்.














Click it and Unblock the Notifications