டிரம்பின் வரிவிதிப்பால் கடும் பாதிப்பு.. சம்பளம் கொடுக்க கூட திணறும் திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள்
சென்னை: அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரி (US Tariffs) விதிப்பால் திருப்பூரில் பல ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டு இருப்பதால், ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க கூட கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டு இருப்பதாகவும் மத்திய அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக தீர்வு காண வேண்டும் என்றும் திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் வலியுறுத்தியுள்ளன.
ரஷ்யாவிடம் இருந்து மலிவு விலையில் இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்துள்ளார்.

ஏற்றுமதி வர்த்தகம் நெருக்கடி
டிரம்ப் விதித்த இந்த வரி விதிப்பு நாளை (ஆகஸ்ட் 27) முதல் அமலுக்கு வர உள்ளது. அமெரிக்கா விதித்துள்ள இந்த வரி விதிப்பால், இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்க்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அமெரிக்க நிறுவனங்கள் இந்திய பொருட்கள் இறக்குமதியை குறைக்க தொடங்கியுள்ளன. இதனால், பின்னலாடைத்துறை உள்பட இந்தியாவின் பல்வேறு துறை ஏற்றுமதி வர்த்தகம் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
கடும் நிதி நெருகக்டி
இந்திய அளவில் பின்னலாடை தொழிலுக்கு பெயர் போன திருப்பூரில் மட்டும் ரூ.12,000 கோடி ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. திருப்பூரில் இருந்து வருடத்திற்கு சுமார் ரூ.45,000 கோடிக்குப் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் நடைபெற்று வருகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு திருப்பூரில் இருந்து பின்னலாடைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
அமெரிக்காவுக்கு மட்டும் 30 % முதல் 35 % வரை வரை பின்னாலடை ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்போது வரி உயர்வால் ஏற்றுமதி செய்து வந்த நிறுவனங்கள் கடும் நிதி நெருகக்டியை சந்திக்க தொடங்கியுள்ளன. எப்போதும் பிசியாக இயங்கி கொண்டு இருந்த சில நிறுவனங்களில் பகுதியளவு மட்டுமே தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன. அதுமட்டும் இன்றி தற்காலிக ஊழியர்களை காலவரையற்ற விடுப்பில் சில நிறுவனங்கள் அனுப்பியுள்ளதாக திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.
அப்படியே தேங்கி கிடக்கின்றன
அமெரிக்காவிற்கு உள்ளாடைகள் ஏற்றுமதி செய்யும் நிறுவனம் ,தற்போதய வரி விதிப்பால் கடுமயாக பாதிக்கப்பட்டுள்ளது. பண்டல் பண்டலாக உள்ளாடைகள் அடுக்கி வைத்தபடி அப்படியே தேங்கி கிடக்கின்றன. அந்த நிறுவனத்தின் உரிமையாளர் கூறும் போது, "அமெரிக்காவுடன் விரைவில் இந்தியா ஒப்பந்தம் மேற்கொள்ளும் என நம்புகிறோம். கடந்த மாதம் ஒட்டு மொத்த உற்பத்தி சங்கிலியும் முடங்கியுள்ளது. இது தொடர்ந்தால் ஊழியர்களுக்கு எப்படி சம்பளம் கொடுக்க முடியும் " என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு காரணமாக இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு அமெரிக்காவில் 10 டாலராக விற்பனையான ஒரு சட்டை, இனி 16.40 டாலராக உயரக்கூடும். சீனாவின் ஆடைகள் 14.20 டாலராகவும், வங்காளதேசத்தின் ஆடைகள் 13.20 டாலராகவும், வியட்நாமில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆடைகள் 12 டாலராகவும் உள்ளன.
உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
இந்திய ஆடைகள் மட்டும் இவ்வளவு விலை அதிகமாக இருந்தால் வாடிக்கையாளர்கள் வாங்க முன்வரமாட்டார்கள் என்பதால், அமெரிக்க சில்லறை விற்பனை நிறுவனங்களும் ஆர்டர்களை நிறுத்தி வைத்துள்ளது. இதனால், இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஆடைகள் தேக்கம் அடைந்துள்ளன.
எனவே, இந்த பாதிப்பை சரி செய்ய மத்திய அரசு விரைவான நடவடிக்கை வேண்டும் என்றும் உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைக்கிறார்கள். குறந்தபட்சம் உடனடி நடவடிக்கையாக ரா மெட்ரீயல்களின் இறக்குமதி வரியை குறைக்க வேண்டும். பிற நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி சந்தைகளை அங்கு திருப்பி விட வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள்.
-
ஈரான் மீது முழு வீச்சில் தாக்குதலை ஆரம்பித்த அமெரிக்கா.. ஹார்முஸ் ஜலசந்தியும் க்ளோஸ்.. ஒரே பதற்றம் -
"ஹார்முஸை நெருங்கினாலே சரமாரி தாக்குதல் நடத்துவோம்.." அச்சுறுத்தும் ஈரான்.. அமைதி ஒப்பந்தம் காலி -
அடங்காத போர் வெறி.. அமெரிக்க தாக்குதலில் பறிபோன 3 இந்தியர்களின் உயிர்! ஓமனில் அதிர்ச்சி! -
வாழ வைத்த இந்தியா! 22 வயசுல பெங்களூர் வந்த அமெரிக்கர்.. இன்னைக்கு டாப் கோடீஸ்வரர்! எப்படினு பாருங்க -
சுயம்புவாக வளர்ந்த திருப்பூர்.. இப்போ இந்தியாவுக்கு பாடம் கற்று தருகிறது! -
இந்தியர்களுக்கு குட்பை.. அமெரிக்காவிற்கே மூட்டையைக் கட்டிய பிரபல நிறுவனம்.. ஐடி ஊழியர்கள் ஷாக் -
பேரழிவு வர போகுது.. ஈரானுக்கு நேரடியாக டிரம்ப் தந்த மரண வார்னிங்.. மீண்டும் வெடிக்கும் போர் -
கடலோர மக்களுக்கு குடிநீர் இல்லை.. ஏரிகளை தகர்த்தது அமெரிக்கா.. ஈரான் பரபரப்பு குற்றச்சாட்டு -
ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல் -
"பதிலடி கொடுப்போம்.." நள்ளிரவில் ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த எச்சரிக்கை.. மீண்டும் வெடிக்க போகுது போர் -
திருப்பூர் மாநகராட்சி ஆபீஸில் அரசு அதிகாரிக்கு நம்பவே முடியாத மிகப்பெரிய பரிசு.. சரியான பாடம் -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்!












Click it and Unblock the Notifications