அடிக்கப்பட்ட எச்சரிக்கை மணி! முதுகில் வசமாக குத்திய அமெரிக்கா! இந்தியாவிற்கு வார்னிங் தந்த வல்லுநர்
சென்னை: இந்தியா இனியும் அமெரிக்காவை நம்ப கூடாது.. அமெரிக்கா இந்தியாவின் முதுகில் குத்திவிட்டது என்று சர்வதேச அரசியல் வல்லுனர் பிரம்மா செல்லனி குறிப்பிட்டு உள்ளார்.
சர்வதேச அரசியல் வல்லுனர் பிரம்மா செல்லனி இந்தியாவிற்கு விடுத்த எச்சரிக்கையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் அதற்கு முன் பிடன் இரண்டு பேருமே அமெரிக்கா இனியும் இந்தியாவின் நட்பு நாடு இல்லை என்பதை நிரூபித்துவிட்டனர். முன்னதாக பிடன்தான் பாகிஸ்தான் ராணுவத்தை வலிமை செய்தார். F-16 போர் விமானங்களை அளித்தார். அதை உயர்த்த முடிவுகளை செய்தார்.
F-16 மூலம் பாகிஸ்தான் விமானப்படை புதிய பலம் பெற்றது. அடுத்து டொனால்ட் டிரம்ப் வந்தார். அவர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக நடந்து கொண்டார். பாகிஸ்தான் தனது பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக தங்களுக்கு 8,500 கோடி ரூபாய் கடன் வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியத்தை பாகிஸ்தான் நாடியது. இந்த வாக்கெடுப்பில் இந்தியாவால் எதிர்த்து வாக்களிக்க முடியாத நிலை இருந்தது. இதனால் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இந்தியா புறக்கணித்தது. இதனை அடுத்து தங்களுக்கு உடனடியாக 8500 கோடி ரூபாய் கடன் வழங்க ஐ எம் எப் ஒப்புதல் வழங்கி விட்டதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
இதற்கு அதிக நிதியை வழங்கும் அமெரிக்கா பாகிஸ்தானுக்கு ஆதரவாக நிதி வழங்க ஒப்புக்கொண்டு வாக்களித்தது. இதன் காரணமாக இந்தியாவின் ரூ.500 கோடி நிதி உட்பட 8,500 கோடி ரூபாய் பாகிஸ்தானுக்கு வழங்கப்படும். IMFல் பாகிஸ்தானுக்கு நிதி வழங்குவதற்கு சாதகமாக வாக்களித்ததற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆட்சி நிர்வாகம் வெட்கப்பட வேண்டும். இதில் அமெரிக்கா இந்தியாவின் முதுகை குத்தியது.

அதன்பின் இப்போது இந்தியா - பாக். போர் நிறுத்தத்தை ஏற்படுத்த வர்த்தகத்தை பெருமளவில் பயன்படுத்தினேன். என் தலையீட்டால்தான் தாக்குதல் நிறுத்தப்பட்டது. ஒப்பந்தம் செய்வோம், வர்த்தகம் செய்வோம் என அழைத்தேன் உடனே தாக்குதலை நிறுத்திவிட்டார்கள் என்று கூறி உள்ளார். இதில் எல்லாம் அமெரிக்கா இந்தியாவிற்கு எதிராகவே செயல்பட்டு உள்ளது. இதனால் இந்தியா இனியும் அமெரிக்காவை நம்ப கூடாது.. அமெரிக்கா இந்தியாவின் முதுகில் குத்திவிட்டது என்று சர்வதேச அரசியல் வல்லுனர் பிரம்மா செல்லனி குறிப்பிட்டு உள்ளார்.
பறிக்கப்பட்ட வெற்றி
அதோடு இந்தியா பாகிஸ்தான் போரில் இந்தியாவின் வெற்றி பறிக்கப்பட்டுவிட்டதாகவும் அவர் கூறி உள்ளார்.
சர்வதேச அரசியல் வல்லுனர் பிரம்மா செல்லனி செய்த போஸ்டில்,
1948: ஜம்மு காஷ்மீர் பிரச்சினைகளை இந்தியா ஐ.நா.விடம் எடுத்துச் சென்றது. தேவையின்றி இந்திய இராணுவம் வெற்றியை நோக்கிச் செல்லும்போது போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டது.
1954: எந்தவிதமான பிரதிபலனும் இல்லாமல், திபெத்தில் இந்தியா தனது எல்லைக்கு அப்பாற்பட்ட உரிமைகளை விட்டுக்கொடுத்தது. தேவையின்றி "சீனாவின் திபெத் பிராந்தியத்தை" இந்தியா அங்கீகரித்தது.
1960: சிந்து நதிப் படுகை நீரில் ஐந்தில் நான்கு பங்கை அதன் கீழ்நோக்கிய நாடான் பாகிஸ்தானுக்கு ஒதுக்கி வைக்கும் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது. இது பாகிஸ்தானுக்கு சாதகமாக அமைந்தது.
1966: 1965 போரின் போது மிகவும் முக்கியமான ஹாஜி பீர் என்ற இடத்தை இந்தியா பாகிஸ்தானிடம் வழங்கியது. இது பின்னர் பாகிஸ்தானுக்கு பயங்கரவாதிகளை இந்தியாவிற்குள் ஊடுருவச் செய்வதற்கான ஏவுதளமாக மாறியது.
1972: சிம்லாவில் நடந்த பேச்சுவார்த்தையில் பாகிஸ்தானிடமிருந்து எதையும் பெறாமல் இந்தியா தனது போர் ஆதாயங்களை விட்டுக்கொடுத்தது. இந்த பேச்சுவார்த்தை ஒப்பந்தம் போரை நிறுத்த காரணமாக இருந்தாலும், இந்தியாவிற்கு சாதகமாக அமையவில்லை.
2021: லடாக்கின் முக்கிய எல்லைப் பகுதிகளில் சீனா 2020ல் அத்துமீறியது. இதற்கு பிறகு நடந்த பேச்சுவார்த்தையில் இந்தியா கைலாஷ் ஹைட்ஸை காலி செய்து வெளியேறியது. லடாக்கில் சீனாவின் கை ஓங்க இது முக்கிய காரணமாக அமைந்தது. இது இந்தியாவிற்கு சிக்கலாக இப்போது மாறி உள்ளது.
2025: இப்போது பாகிஸ்தான் இந்தியா இடையிலான போரில் இந்தியா வெற்றிக்கு மிக அருகில் இருந்தது. பாகிஸ்தானின் உட்பகுதிக்குள் சென்று தாக்குதல் நடத்தும் அளவிற்கு இந்தியா முன்னேறி சென்றது. ஆனால் இந்தியா வெற்றிக்கு அருகே இருக்கும் போது போர் நிறுத்தம் செய்தது இந்தியாவிற்கு சிக்கலாக மாறி உள்ளது. சிறப்பாக தொடங்கப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் வெறும் 4 நாட்களில் நிறுத்தப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications