பெரியார், அண்ணா பெயரை ஆளுநர் வாசிக்காதது பற்றி.. அதிமுக வைகைச் செல்வன் சொன்னது என்ன தெரியுமா?
சென்னை: திராவிட மாடல் என்பதை ஆளுநர் ஆர்.என்.ரவி குறிப்பிடாததில் எங்களுக்கு பிரச்சினை இல்லை. ஆனால் சமூகநீதி, சமத்துவம் ஆகியவற்றின் உருவாக இருந்த பெரியார், அண்ணா ஆகியோரின் பெயரை தவிர்த்ததில் எங்களுக்கு முரண்பாடு உள்ளது என அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றிய போது அவர் சில வார்த்தைகளை தவிர்த்துவிட்டதாக திமுக கூட்டணி கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இதுகுறித்து அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச் செல்வன் கூறுகையில், இன்றைய ஆளுநரின் உரையில் திராவிட மாடல் என்ற வார்த்தை தவிர்க்கப்பட்டிருக்கிறது. திராவிட மாடல் வார்த்தை குறித்தான பல்வேறு சர்ச்சைகள் தொடர்ந்து வருகிறது.
திராவிட மாடல் வார்த்தையால் பிரச்சினை
எப்போதெல்லாம் திமுக அரசு திராவிட மாடல் என சொல்கிறதோ அப்போதோ அது குறித்தான விமர்சனங்களும் பிரச்சினைகளும் எழுந்துள்ளன. இருந்த நிலையிலும் கூட இந்த மாநிலத்திற்கு 1968 ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணாவால் கொண்டு வரப்பட்ட மசோதாவில் வெற்றிகரமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தமிழ்நாடு என்று இந்த மாநிலத்திற்கு மகத்தான பெயர் நின்று நிலைத்துவிட்டது.
1951 ஆம் ஆண்டு
1951 ஆம் ஆண்டு ஏறக்குறைய சென்னை என இருந்ததை 1956 இல் எல்லை போராட்டத்திற்கு பிறகு பிரிக்கப்பட்டதற்கு பிறகு இந்த மாநில உரிமைகளை நாம் வென்றெடுத்திருக்கிறோம். ஆகவே இந்த விஷயத்தில் அதிமுக என்ன கருதுகிறது என்றால் தமிழ்நாடு என்ற பெயரை ஆளுநர் சொல்லியிருக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு.
அது மாத்திரம் தமிழ்நாட்டினுடைய இட ஒதுக்கீட்டிலும் சமூகநீதியிலும் எப்போதுமே அக்கறை கொண்டிருக்க இயக்கமாக அதிமுக இருக்கிறது. 40 சதவீதமாக இருந்த இடஒதுக்கீட்டை 68 சதவீதமாக எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் மாற்றினார். அதன்பின்னர் ஒரு சதவீதத்தை கூட்டி 69 சதவீதமாக ஜெயலலிதா மாற்றினார். இந்த நிலையில் தொடர்நது சமூகநீதி மீது தொடர்ந்து அக்கறையுடன் செயல்பட்டு கொண்டிருக்கிற அதிமுக தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா ஆகியோரின் பெயர்களை ஆளுநர் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
இது வரலாற்றினுடைய பிழையாகவே நாங்கள் கருதுகிறோம். திராவிடம் என்பதில் அதிமுகவுக்கு உடன்பாடு உண்டு. திராவிட மாடல் என சொல்லிக் கொண்டு குடும்ப அரசியலை நடத்தி கொண்டு பல்வேறு குளறுபடிகளை செய்து சொன்ன வாக்குறுதிகளை தவறவிட்டுவிட்டு பல்வேறு பிரச்சினைகள் இருந்த காரணத்தினால்தான் அந்த திராவிட மாடல் என்ற வார்த்தையை தமிழக அரசு உச்சரிக்கும் போதெல்லாம் அது நீர்த்து போய்விட்டது.
நீர்த்து போன திராவிட மாடல்
ஆகவே நீர்த்து போன வெறும் மாடலை வைத்துக் கொண்டு திராவிட மாடல் என கூறுவதை அதிமுக ஏற்கவில்லை. நலலாட்சியின் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்று சொன்னால் பல்வேறு செயல்திறனை அரசு முன்வைக்க வேண்டும். அப்படி முன் வைக்கிற போது நம்முடைய ஈடு இணையற்ற தலைவராக விளங்கிய தந்தை பெரியாரையும் அதன் பிறகு தேர்தல் களத்தில் நின்று ஆட்சி அதிகாரத்திற்கு வந்த அண்ணாவினுடைய பெயரையும் உச்சரிக்கிற போது அவர்களுடைய கொள்கைகளை வென்றெடுக்கப்பட்டு மாநில உரிமைகள், இடஒதுக்கீடுகள் ,சமூகநீதி இவற்றினுடைய மொத்த வடிவமாக இருக்கிற அந்த தலைவர்களுடைய பெயர்களையும் அதை தாங்கி நிற்கிற பெருமைகளையும் ஆளுநர் சொல்லியிருக்க வேண்டும் என்பதுதான் அதிமுகவுடைய கருத்தாக உள்ளது. திராவிட மாடலை புறக்கணித்ததில் எங்களுக்கு எந்த வருத்ததமும் இல்லை, ஆனால் தமிழ்நாடு, பெரியார், அண்ணா ஆகியோரின் பெயர்களை பயன்படுத்தாதில் முரண்பாடு இருக்கிறது. இது குறித்து கட்சித் தலைமை அறிக்கையை வெளியிடும் என வைகைச் செல்வன் கூறியுள்ளார்.
-
இரட்டை இலை சின்னத்தில் ஆம்ஸ்ட்ராங் மனைவி போட்டி? எடப்பாடி போடும் அதிரடி பிளான்! -
டெல்லியில் அமித் ஷா உடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு.. தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சு! -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
பதவியைக் காக்க கருணாநிதியிடம் ஆதரவு கேட்ட ஜானகி? 1988இல் ஆட்சி கலைப்பு.. ஜெயலலிதா எடுத்த சபதம்? -
தொகுதிப் பங்கீடு என்னாச்சு? டெல்லிக்கு பறந்த எடப்பாடி பழனிசாமி.. நயினார் சொன்ன மேட்டர்! -
நள்ளிரவில் ‘செக்’ வைக்கும் காக்கிகள்.. சென்னையில் இரவு நேரத்தில் வெளியே போறீங்களா? இதை நோட் பண்ணுங்க -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
ஒன்றரை மாதத்தில் என்ன ஆகும்? அரியணை ஆட்டம்.. 2016 Vs 2021.. தமிழக தேர்தல் களத்தின் 'பவர்' ரிப்போர்ட் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
ரஜினிகாந்த் சொன்ன ஒற்றை வார்த்தை.. அதிமுகவை பாதாளத்துக்கு தள்ளிய ரிசல்ட்! 173 இடங்களில் திமுக வெற்றி -
இதுவரை 4 முறை டெல்லிக்கு பயணம் செய்த எடப்பாடி பழனிசாமி! அதிமுக பாணியையே மாற்றிய பாஜக! -
நாளை டெல்லிக்கு பறக்கும் தினகரன், அன்புமணி? அமித் ஷா முன்னிலையில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு டீல்?












Click it and Unblock the Notifications