Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜெர்மனில் சிகிச்சை பெற்றும் புற்றுநோயிலிருந்து மீளாத உம்மன் சாண்டி! பழைய நினைவலைகளை பகிர்ந்த வைகோ!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமான கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மறைவு தனக்கு அதிர்ச்சியளிப்பதாக வைகோ தெரிவித்துள்ளார். மேலும், உம்மன் சாண்டி உடனான தனது பழைய நினைவலைகளையும் அவர் பகிர்ந்துள்ளார். அதன் விவரம் வருமாறு;

''கோட்டயம் மாவட்டம், புதுப்பள்ளியில் இருந்து, 1970 ஆம் ஆண்டு முதல் 50 ஆண்டுகள் தோல்வியே சந்திக்காமல், அந்தத் தொகுதி மக்களால் தொடர்ந்து தேர்வு செய்யப்பட்டவர் உம்மன் சாண்டி ஆவார். அவரது 50 ஆண்டுகால சட்டசபை வரலாற்றில், நான்கு முறை மாநில அமைச்சராகவும், 2006 - 2011ல் எதிர்க்கட்சித்தலைவராகவும், 2004 - 2006 மற்றும் 2011 - 2016 என இரண்டு முறை முதல்வராகவும் பணியாற்றியுள்ளார்.

Vaiko condoles death of former Kerala Chief Minister Oommen Chandy

எளிமையான வாழ்க்கை வாழ்ந்த அவருக்கு, சில மாதங்களுக்கு முன், தொண்டை புற்றுநோய் ஏற்பட்டது. இதற்காக ஜெர்மனிக்கு சென்று சிகிச்சை பெற்றார். அதன்பின் பெங்களூருவில் தனியார் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்றார். இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக, பெங்களூரு மருத்துவமனையில் இன்று அதிகாலை உம்மன் சாண்டி காலமானார் என்ற செய்தி அதிர்ச்சியும், வேதனையும் தருகிறது.

உம்மன் சாண்டி என் மீது மிகுந்த பாசம் கொண்டவர். அவர் முதலமைச்சராக இருந்தபோது, 2004 ஆம் ஆண்டு செண்பகல்லி அணை மற்றும் அமராவதி அணை பிரச்சினை குறித்து பேசுவதற்காக அவரைச் சந்தித்தேன். மீண்டும் 2015 இல், நியூட்ரினோ திட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அவருடன் விவாதிப்பதற்காக கொச்சின் சென்றிருந்தேன். அப்போது கேரள உள்துறை அமைச்சராக இருந்த ரமேஷ் சென்னிதாலா அவர்களும் உடன் இருந்தார். கொச்சினிலிருந்து நான் திருவனந்தபுரம் திரும்பும்போது, கேரள காவல்துறையினரின் பாதுகாப்போடு என்னை வழியனுப்பி வைத்தார்.

சிறந்த பண்பாளரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.''

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+