வைகோ போட்ட நங்கூரம்.. இப்பவே லோக்சபா கணக்கு? ராகுலை தூக்கிப் பிடிக்க இதுவா காரணம்? அப்ப விஜய்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: வைகோ ஏன் இப்படி பேசினார்? விஜய்க்கு ஆதரவாக ஏற்கனவே பேசியவர்தானே? இப்போது ராகுல்தான் பிரதமர் வேட்பாளர் என்று ஏன் சொல்கிறார்? என்ற கேள்விகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் குபீரென எழுந்துள்ளன. 2029 லோக்சபா தேர்தலுக்கு இன்னும் காலம் இருந்தாலும், அதற்கான கூட்டணி கணக்குகள் இப்போதே வெடித்து வருகின்றன.

தமிழகத்தில் தவெக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.. இதில் காங்கிரசும் இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில், தவெகவை சேர்ந்த சில அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகள், முதல்வர் விஜய்யை "வருங்கால பிரதமர்" என்று பேசத் தொடங்கியுள்ளனர்.

Vaiko

ஆனால், காங்கிரஸ் தரப்பு ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி வருகிறது. இதனால், கூட்டணிக்குள் பிரதமர் வேட்பாளர் தொடர்பான கருத்து வேறுபாடு உருவாகியுள்ளது.

வைகோ - ராகுல் காந்தி

இந்த நேரத்தில்தான் வைகோ தனது கருத்தை தெரிவித்துள்ளார். "இந்தியா கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சியே தலைமை வகிக்கிறது. எனவே, ராகுல்தான் பிரதமர் வேட்பாளர். விஜய்க்கு அப்படியொரு எண்ணம் கற்பனையில் கூட இருக்காது" என்று ஓபனாகவே அவர் தெரிவித்துள்ளார்.

வைகோவின் இந்தப் பேச்சு இப்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது. காரணம், விஜய்க்கு ஆதரவாக ஏற்கனவே பேசிய வைகோ, இப்போது ராகுலுக்கு ஆதரவாக வெளிப்படையாக பேசியுள்ளார். இதன் மூலம் பிரதமர் வேட்பாளர் விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார்.

விஜய் பிரதமர் வேட்பாளர்

விஜய்யை சுற்றியுள்ள அரசியல் எதிர்பார்ப்பு தமிழகத்தை தாண்டியும் பேசப்படுகிறது. தவெக எதிர்காலத்தில் தேசிய அரசியலில் எந்த நிலைப்பாட்டை எடுக்கும் என்பதும் கேள்வியாக உள்ளது. 2029 தேர்தலிலும் தவெக - காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்தால், பிரதமர் வேட்பாளர் விவகாரம் அப்போது மேலும் முக்கியத்துவம் பெறலாம்.

காங்கிரசும் தனது நிலைப்பாட்டை ஏற்கனவே தெரிவித்துள்ளது. தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், ராகுல்தான் பிரதமர் வேட்பாளர் என்று கூறியுள்ளார். அமைச்சர் ராஜேஷ்குமாரும், தவெக இதற்கு உடன்படாவிட்டால் காங்கிரஸ் அமைச்சர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அறிவித்து விட்டார்.

இந்த சூழலில், வைகோவின் கருத்து காங்கிரசுக்கு கூடுதல் ஆதரவாக அமைந்துள்ளது. அதே நேரத்தில், வைகோவுக்கும் ராகுலுக்கும் இடையே சமீபகாலமாக அரசியல் நெருக்கம் அதிகரித்து வருவதும் கவனிக்கப்படுகிறது. வைகோவின் பார்லிமென்ட் பேச்சுகள் அடங்கிய நூல் வெளியீட்டு விழாவில் ராகுல் பங்கேற்று வைகோவை பாராட்டினார். வைகோவும் அவரது மகன் துரை வைகோவும் ராகுலை எதிர்கால பிரதமர் என்று குறிப்பிட்டுள்ளனர்.

தேர்தல் கூட்டணி கணக்கு

ஆனால், வைகோவின் இந்த பேச்சை வைத்து 2029 தேர்தல் கூட்டணி முடிவாகிவிட்டது என்று கூற முடியாது. தேர்தலுக்கு இன்னும் காலம் இருப்பதால், அதற்குள் அரசியல் சூழலும் கூட்டணி கணக்குகளும் மாறலாம்.

இப்போதைக்கு, வைகோ தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார் என்பதுதான் முக்கியம். தவெக தரப்பில் விஜய்யை வருங்கால பிரதமர் என்று பேசுவது தொடரும் நிலையில், காங்கிரஸ் ராகுலை முன்னிறுத்துகிறது. இந்த இரு நிலைப்பாடுகளும் 2029 தேர்தல் நெருங்கும்போது எப்படி செல்கின்றன என்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயம்.

அதனால், வைகோவின் பேச்சு கூட்டணி முடிவாக இருக்காது... . ஆனால், விஜய் பிரதமர் என்ற பேச்சுக்கு எதிராக, ராகுல்தான் தனது தேர்வு என்பதை அவர் வெளிப்படையாக சொல்லியிருப்பது முக்கியமான அரசியல் செய்தியாக பார்க்கப்படுகிறது... பொறுத்திருந்து பார்ப்போம்..!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+