நாத்திகர்கள் மீது திடீர் பாய்ச்சல்... வைகோவின் இந்துத்துவா ஆதரவு பேச்சால் திராவிடர் இயக்கங்கள் ஷாக்!
Recommended Video
சென்னை: நாத்திகர்களை விமர்சித்து இந்துத்துவா கொள்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து வைகோ பேசிய பேச்சால் திராவிடர் இயக்கங்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளன.
தம்மை ஒரு நாத்திகராக பிரகடனப்படுத்திக் கொண்டு திராவிடத்தின் போர்வாளாக வலம் வந்தவர் வைகோ. தமது ஆரம்பகால அரசியல் தொட்டே திராவிடர் இயக்க அடையாளமாக கருப்புத் துண்டுதான் வைகோவின் அடையாளம்.
சென்னையில் அண்மையில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணாவின் 111-வது பிறந்த நாள் விழாவில் வைகோ பேசிய பேச்சு, திராவிடர் இயக்கத்தை அதிர வைத்திருக்கிறது. இந்துத்துவா கொள்கைகளுக்கு ஆதரவாக வைகோ பேசியதுதான் இந்த அதிர்வுக்குக் காரணம்,

கோவிலுக்கு போனால் வாழ்த்துங்கள்
வைகோ தமது பேச்சில், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு, பழனி கோவிலுக்கு, திருப்பதிக்கு, காஞ்சிபுரத்துக்கு அத்திவரதரை தரிசிக்க என பக்தர்கள் போய்க்கொண்டுதான் இருக்கிறார்கள். மசூதிக்கு போகிறவர்களை வாழ்த்துவது போல- ஜெபக்கூடங்களுக்கு செல்வபவர்களை வாழ்த்துவது போல கோவில்களுக்குப் போகிறவர்களை வாழ்த்தலாம்.

கேள்விகள் வரும்
வீரமணி வேண்டுமானால் என்னுடன் இதற்கு உடன்படாமல் போகலாம். அப்படியானால் பெரியாரிடம் இருந்து விலகிவிட்டாயா? என்கிற கேள்வி வரலாம்.. வரும். 1940களில் பேசியதை அண்ணா 1960களில் பேசவில்லையே.. 50களில் பேசியதை 60 களில் பேசவில்லையே.. அது போர் தந்திரம். அதிகாரம் சனாதான எதிரிகள் கைகளுக்கு செல்லக் கூடாது என்பதற்கான வியூகம் இது.

நாத்திகர்கள் மீது விமர்சனம்
99% இந்துக்கள் இன்றும் கோவில்களுக்கு போய்க் கொண்டுதான் இருக்கிறார்கள். உங்கள் ஊரில் இருக்கிற 99% பேர் கோவில்களுக்கு போகிறார்கள். அதை தடுக்க முடியவில்லை உங்களால்.. பிறகு எதற்கு கோவிலுக்குப் போகிறவர்களை கிண்டல் செய்கிறீர்கள்? எங்கள் ஊரில் பாட்டனார் கட்டிய கோவிலுக்கு இப்போது கோபுரம் அமைத்து கும்பாபிஷேகத்துக்கு ஏற்பாடுகள் செய்து வருகிறோம். அது மக்களின் விருப்பம்.. அதைத்தான் செய்கிறோம் என்று வைகோ பேசினார்.

வைகோ மீது விமர்சனங்கள்
அவரது இந்தப் பேச்சானது கடும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. திராவிடர் இயக்கத்தினர் வைகோ மீது கடுமையாக விமர்சனங்களை வைத்தும் வருகின்றனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications