ராஜ்யசபாவுக்குள் நுழையும் வைகோ.. 'அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே'... அலறப் போகும் சு.சுவாமி
சென்னை: ராஜ்யசபாவுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நுழைவதால் மிகவும் அதிர்ந்து போகப்போகிறவர் பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி. ஏனெனில் சுப்பிரமணியன் சுவாமியை ராஜ்யசபாவில் 'அப்படி' ஒரு மிரட்டல் விடுத்த வரலாற்றுக்கு சொந்தக்காரர் வைகோ.
ராஜ்யசபாவில் நீண்டகாலம் கோலோச்சியவர் வைகோ. 1980களின் தொடக்கத்தில் ஈழத் தமிழர் பிரச்சனையை அனல் கக்க ராஜ்யசபாவில் பேசியவர் வைகோ. ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போது மிஸ்டர் ராஜீவ் காந்தி என பெயரை சொல்லி வாதிட்டவர்.

அதேபோல் பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமியுடன் வைகோ நடத்திய மல்லுக்கட்டு நாடாளுமன்ற சரித்திரத்தில் என்றும் பேசும். இலங்கையில் ரஞ்சன் விஜயரத்னே படுகொலை செய்யப்ப்ட்ட காலம்.
அப்போது நாடாளுமன்ற லாபியில் சுப்பிரமணியன் சுவாமிக்கும் வைகோவுக்கும் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதத்தின் போது வைகோ, வி வில் கில் யூ என சுப்பிரமணியன் சுவாமியை மிரட்டியிருக்கிறார்.
உடனே சுப்பிரமணியன் சுவாமி ராஜ்யசபாவுக்குள் ஓடிப் போய் சபாநாயகரிடம் வைகோ என்னை கொல்ல சதி செய்கிறார். எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார் என அலறியபடி கூறினார். இது தொடர்பாக ராஜ்யசபாவில் விவாதம் நடைபெற்றது.

வைகோவோ, நான் சுப்பிரமணியன் சுவாமியை பார்த்து அப்படி சொன்னேன் என்பதற்கு ஆதாரம் இருக்கிறதா? ஆதாரத்தை காட்ட தைரியம் இருக்கிறதா? என சுப்பிரமணியன் சுவாமியை நோக்கி கேட்டார். சுப்பிரமணியன் சுவாமி விழிபிதுங்கிப் போனார்.
வைகோவே பல பொதுமேடைகளில் இத்தகவலை வெளிப்படுத்தியிருக்கிறார். இப்போதும் ராஜ்யசபாவில் சுப்பிரமணியன் சுவாமி எம்.பியாக இருக்கிறார். அதே ராஜ்யசபாவுக்குள் மீண்டும் வைகோ செல்ல இருக்கிறார்.
வரலாறுகள் உதயமாகுமோ? திரும்புமோ?
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications