ராஜ்யசபா தேர்தல்- வைகோ, வில்சன், சண்முகம் நாளை வேட்புமனுத் தாக்கல்!
சென்னை: ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுகவின் சண்முகம் மற்றும் வில்சன் ஆகியோர் நாளை காலை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர்.
தமிழகத்தில் 6 ராஜ்யசபா எம்.பி. இடங்கள் காலியாகிறது. இந்த 6 இடங்களுக்கான தேர்தல் வரும் 18-ந் தேதி நடைபெறுகிறது.

இதற்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. திமுகவுக்கான 3 இடங்களில் மதிமுகவுக்கு 1 இடம் ஒதுக்கப்பட்டது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, ராஜய்சபா வேட்பாளர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தொழிற்சங்கமான தொமுசவின் செயலாளர் சண்முகம், வழக்கறிஞர் வில்சன் ஆகியோரை திமுக வேட்பாளர்களாக அறிவித்தது. இந்த நிலையில் தேசதுரோக வழக்கில் வைகோ குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது. அவருக்கு ஓராண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.
இருப்பினும் அவரது சிறை தண்டனை 1 மாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் வைகோ ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல் இருப்பதாக முதலில் கூறப்பட்டது.
ஆனால் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கும் மக்கள் பிரதிநித்துவ சட்டத்தின் கீழ் வைகோவின் வழக்கு வராது என்பதால் அவர் தேர்தலில் போட்டியிட தடை இல்லை என சட்ட வல்லுநர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து திமுகவின் வேட்பாளர்களுடன் வைகோ நாளை காலை தலைமை செயலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications